சுகாதாரமற்ற உணவு- 2 ஓட்டல்களுக்கு அதிகாரிகள் 'சீல்' வைப்பு

ஒரு ஓட்டல் அனுமதி இல்லாமல் செயல்படுவது தெரிந்தது. பரிசோதனைக்காக 6 ஓட்டல்களில் இருந்தும் உணவு மாதிரி எடுக்கப்பட்டு உள்ளது.
சுகாதாரமற்ற உணவு- 2 ஓட்டல்களுக்கு அதிகாரிகள் 'சீல்' வைப்பு
Published on

கிழக்கு தாம்பரம் பகுதியில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அனுராதா தலைமையில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது வேளச்சேரி மெயின் ரோட்டில் உள்ள 2 ஓட்டல்களில் சுகாதாரமற்ற உணவு விற்பனை செய்வது தெரிந்தது. இதையடுத்து அந்த ஓட்டல்களுக்கு சீல் வைத்தனர். மேலும் ஒரு ஓட்டல் அனுமதி இல்லாமல் செயல்படுவது தெரிந்தது. அந்த ஓட்டல் தொடர்ந்து செயல்பட தடை விதிக்கப்பட்டது. மேலும் கடைகளில் இருந்த கெட்டுபோன உணவுகள், பழைய இறைச்சிகள், தவறான முறையில் பதபடுத்தபட்ட மற்றும் தடை செய்யபட்ட மசாலாக்கள், செயற்கை உணவு வண்ண பொடிகளை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் பரிசோதனைக்காக 6 ஓட்டல்களில் இருந்தும் உணவு மாதிரி எடுக்கப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com