ஓசூரில் தொழில் உரிமம் பெறாமல் இயங்கி வந்த 6 கடைகளுக்கு சீல்

மாநகராட்சி மூலம் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 6 கடைகள் மாநகராட்சி மூலம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
ஓசூரில் தொழில் உரிமம் பெறாமல் இயங்கி வந்த 6 கடைகளுக்கு சீல்
Published on

ஓசூர்:

ஓசூர் மாநகர ஆணையாளர் சினேகா உத்தரவின் பேரில், மாநகர நல அலுவலர் பிரபாகரன், உதவி ஆணையாளர் டிட்டோ ஆகியோர் தலைமையில், நகரமைப்பு ஆய்வாளர், துப்புரவு ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர், துப்புரவு மேற்பார்வையாளர் மற்றும் பணியாளர்கள் கொண்ட குழுவினர் ஓசூர் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சுமார் 20 நடைபாதை கடைகளை அப்புறப்படுத்தினர்.

மேலும் மாநகராட்சி கடைகளில் கடை நடத்தும் 42 கடைக்காரர்கள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக வெளிப்புறத்தில் கடைகள் வைத்திருந்தது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட எல்லை, பெயிண்ட் மூலம் வரையப்பட்டு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே கடைகள் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. குறிப்பிட்ட எல்லைக்கு வெளியே கடைகள் வைக்கப்பட்டால், அவை மாநகராட்சி மூலம் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் மாநகராட்சியிடம் தொழில் உரிமம் பெறாமல் ஓசூர் எம்.ஜி. ரோடில் இயங்கி வந்த 6 கடைகள் மாநகராட்சி மூலம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com