தொழில் உரிமம் பெறாமல் நடத்தி வந்த 3 கடைகளுக்கு சீல் வைப்பு

கடைகளை பூட்டி சீல் வைக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது.1,219 வணிக நிறுவனங்களுக்கு தொழில் உரிமம் பெறப்பட்டுள்ளது.
தொழில் உரிமம் பெறாமல் நடத்தி வந்த 3 கடைகளுக்கு சீல் வைப்பு
Published on

ஓசூர்:

ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் தொழில் உரிமம் பெறாத கடைகளை பூட்டி சீல் வைக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, ஆணையாளர் சினேகா உத்தரவின்பேரில், மாநகர நல அலுவலர் பிரபாகரன் தலைமையில் துப்பரவு ஆய்வாளர்கள் கிரி, ரமேஷ், துப்பரவு மேற்பார்வையாளர் கவுரிசங்கர் மற்றும் பணியாளர்கள், ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள 2 பிரியாணி கடைகள் மற்றும் ஒரு பேக்கரி என தொழில் உரிமம் பெறாமல் நடத்தி வந்த 3 கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.

பின்னர், அந்த கடை உரிமையாளர்கள் தொழில் உரிமத்துக்கு ஆன்லைனில் உடனடியாக விண்ணப்பித்ததை தொடர்ந்து, மாலையில் அந்த கடைகளில் சீல் அகற்றப்பட்டது.

இதுவரை மாநகராட்சி மூலம் 6,963 வணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கியதில், இதுவரை 1,896 வணிக நிறுவனங்கள் மட்டுமே தொழில் உரிமம் பெற விண்ணப்பித்து, 1,219 வணிக நிறுவனங்களுக்கு தொழில் உரிமம் பெறப்பட்டுள்ளது.

328 வணிக நிறுவனங்கள் மாநகராட்சியிடம் விண்ணப்பித்தும், கேட்புத் தொகையினை இதுவரை ஆன்லைன் மூலம் செலுத்தவில்லை.

எனவே மாநகராட்சி தொழில் உரிமம் பெற கடைக்காரர்கள், தொழில் நிறுவனங்கள் உடனடியாக, இணைய தள முகவரியில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து தொழில் உரிமம் பெற வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில், தொழில் உரிமம் பெறாத கடைகள், தொழில் நிறுவனங்கள் பூட்டி சீல் வைக்கப்படும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com