search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடும் வாக்குவாதம்"

    • நெடுஞ்சாலை துறை அதிகாரிகளால் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது
    • உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி - ஆலங்காயம் சாலையில் ராஜாபாளையம் என்ற இடத்தின் அருகே தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது.

    இந்த பள்ளிக்கு சொந்தமான இடத்தின் அருகே தேசிய நெடுஞ்சாலை சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து பள்ளிக்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகவும், இதனை அகற்றி நெடுஞ்சாலையில் ஒப்படைக்க கோரியும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளால் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும் அவர்கள் அகற்றாததால் நேற்று சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்ற முற்பட்டனர்.

    அப்போது அப்பகுதிக்கு வந்த பள்ளியின் நிர்வாகிகள் பணி செய்ய விடாமல் தடுத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை அகற்றுவதாக கூறிவிட்டு, பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்கள் அகற்றுவதற்கு தயங்குவதால் இத்தகைய பிரச்சினைகள் ஏற்படுகிறது.

    மாவட்ட காவல் துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் இடங்களை அகற்றும்படி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • புஞ்சை புளியம்பட்டி நகராட்சி அவசரக் கூட்டம் நடைபெற்றது.
    • இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சை புளியம்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள வாரச்சந்தையில் மாட்டி றைச்சி கடைகள் கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.

    இந்நிலையில் நகராட்சிக்கு உட்பட்ட 15,16-வது வார்டை சேர்ந்த பொதுமக்கள் மாட்டிறைச்சி கடைகளால் துர்நாற்றம் வீசுவதாகவும், சுகாதார கேடு ஏற்படுவதாகவும், நகராட்சி ஆணையாளரிடம் புகார் அளித்ததன் கார ணமாக எந்த விசாரணையும் இன்றி இரவோடு இரவாக பொக்லைன் எந்திரம் மூலம் மாட்டிறைச்சி கடைகள் தரை மட்டமாக்கப்பட்டது.

    இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக மாட்டி றைச்சி கடை உரிமை யாளர்கள், மார்க்சிஸ்டு, கம்யூனிஸ்டு கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவை இணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    தங்களுக்கு மீண்டும் வார சந்தையில் வியாபாரம் செய்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் மார்க்சிஸ்டு, கம்யூனிஸ்டு கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய அமைப்பு களில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகத்தில் தடையை மீறி நிரந்தரமாக குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை கலைந்து செல்வ தில்லை எனவும் போரா ட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட வர்களோடு நகராட்சி ஆணையாளர் மற்றும் தலைவர் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் நகர்மன்ற கூட்டம் கூட்டப்பட்டு அதில் விவாதம் செய்து கடை அமைப்பது குறித்து முடிவு தெரிவி க்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்ப ட்டது.

    இந்நிலையில் நேற்று புஞ்சை புளியம்பட்டி நகராட்சி அவசரக் கூட்டம் நகராட்சி தலைவர் ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் ஆணையாளர் சையது உசேன், துணைத்தலைவர் சிதம்பரம் உள்ளிட்ட அனைத்து நகர மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

    இதில் நகராட்சி தலைவர் ஜனார்த்தனன் பேசும்போது,

    மாட்டிறைச்சி கடைகள் அகற்றப்பட்ட பிரச்ச னையில் ஆணையாளர் எடுத்த திடீர் தன்னிச்சையான முடிவினால் தற்பொழுது நகர மன்ற தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.

    அந்த கடைகளை அகற்றியது ஆணையாளர் தான் எனவும், இதனால் ஆணை யாளர் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்ததால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்நிலையில் திடீரென கூட்டம் நடந்து கொண்டிரு க்கும் பொழுதே நகராட்சி ஆணையாளர் சையது உசேன் திடீரென வெளி யேறி தனது அறைக்கு சென்று விட்டதால் ஆத்திர மடைந்த நகராட்சி தலைவர் ஜனார்த்தனன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் ஆணையாளரின் அறைக்குள் சென்று அவரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறியது தவறு எனவும், அதனால் மீண்டும் வந்து முறைப்படி கூட்ட த்தை முடித்து வைக்க வேண்டும்.

    உங்களால் தான் நகராட்சி நிர்வாகத்திற்கு கெட்ட பெயர் ஏற்பட்டு ள்ளது என கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அதன் பிறகு சுமார் ஒரு மணி நேரம் கழித்து சமாதானம் அடைந்த ஆணையாளர் சையது உசேன் மீண்டும் நகராட்சி கூட்ட அரங்கிற்கு வந்து கூட்டத்தை முடித்து வைப்பதாகவும்,

    ஞாயிற்றுக்கி ழமைகளில் மட்டும் மாட்டு இறைச்சி விற்பனை செய்து கொள்ள அனுமதி அளிக்க லாம் எனவும், அதன் பிறகு மாற்று இடத்தில் நிரந்தர கொட்டகை அமைத்து வியாபாரிகளுக்கு கடைகள் வழங்க அனுமதி அளிக்கலாம் என தீர்மானம் அளித்ததின் பேரில் கூட்டம் முடிவடைந்தது.

    • கடலூர் மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் இன்று நடைபெற்றது. துணை மேயர் தாமரைச்செ
    • கவுன்சிலர்கள் தங்கள் கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் எங்களிடம் தெரிவித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் இன்று நடைபெற்றது. துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் பின்வருமாறு:-           தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் மற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கவுன்சிலர்கள் தங்கள் கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் எங்களிடம் தெரிவித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆகையால் எந்தவித பிரச்சனையும் இன்றி கூட்டத்தை நடத்தித் தர வேண்டும்   எங்கள் வார்டு பகுதியில் நாய் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வருகிற ஏப்ரல் 14-ந்தேதி அம்பேத்கர் பிறந்தநாள் வருகிறது. மஞ்சக்குப்பத்தில் உள்ள அம்பேத்கர் சிலையை புதுப்பித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அப்போது தி.மு.க.வை சேர்ந்த 10 கவுன்சிலர்கள் வெளியில் வேலை இருப்பதாக கூறி கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வெளியில் சென்றனர்  மாநகராட்சியில் விடப்படும் டென்டர் குறித்து தகவல் பலகையில் வைக்க வேண்டும். எங்கள் வார்டில் குளம் தூர்வாரும் பணிக்கான பூமி பூஜைக்கு என்னை தாமதமாக அழைத்ததால் நான் வரவில்லை. நான் வரவில்லை என்பதற்காக வேறு நபர்களை வைத்து படைப்பது சரியா?. மேலும், அங்கிருந்த 15 குடும்பங்களை நீங்கள் அகற்றிய போது, அந்த மக்களை நான் சமாதானப்படுத்தினேன். அந்த குளம் தூர்வாருவதற்கு என்னை சரியான முறையில் அழைக்கவில்லை. அந்த வார்டில் உள்ள முக்கிய பிரமுகர்களை வைத்து நாங்கள் மீண்டும் பூமி பூஜை போடுவதற்கு நீங்கள் அனுமதிக்க வேண்டும். எங்கள் வார்டில் குப்பைகள் கொட்டுவதும், எரிப்பதும் அடிக்கடி நடந்து கொண்டிருக்கிறது. இதனை சரி செய்ய வேண்டும்.

    அருள்பாபு (த.வா.க):- மஞ்சக்குப்பம் பெண்ணையாறு கருமகாரிய கொட்டகை பழுதடைந்து உள்ளது. இதனை 15 வார்டுக்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்துகின்றனர். இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். கடலூர் மாநகராட்சியில் சிக்னல்கள் சரிவர வேலை செய்யவில்லை. இதனை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  குப்பை அகற்றுவதற்கு வாகனம் வருவதில்லை. நாங்கள் சொன்னால் மதிப்பதில்லை. கழிவு நீர் வாய்க்கால் சரி செய்வதற்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. அதனை உடனடியாக நகராட்சி ஊழியர்கள் மூலம் பிடிக்க வேண்டும். மாநகராட்சி கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் 10 தி.மு.க. கவுன்சிலர்கள் எதற்காக வெளியில் சென்றார்கள் என்பது தெரிய வேண்டும். நானும் சில காலம் முன்பு மேயருக்கு எதிர்ப்பாக இருந்தேன். அதனை பகிரங்கமாக கூறுகிறேன். ஆனால் மாநகராட்சி மேயர் அனைத்து கவுன்சிலர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பணிகள் ஒதுக்கி வழங்கி வருகின்றனர். மக்கள்   உட்கட்சி பிரச்சனைகள் தொடர்பாக மாநகராட்சி கூட்டத்தில் பேச வேண்டாம். பொதுமக்கள் குறைகள் குறித்து பேச வேண்டும். தேவனாம்பட்டினம் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகின்றது. அங்குள்ள தனியார் கடைகளை மாநகராட்சி கையகப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்  எங்கள் வார்டில் கழிவு நீர் கலந்த குடிநீர் வருகிறது என கூறி பாட்டிலில் கழிவுநீர் கலந்த குடிநீரையும் சுத்தமாக உள்ள குடிநீரையும் மாநகராட்சி கூட்டத்தில் காண்பித்தார். குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருவதோடு அடிப்படை வசதிகளை உடனடியாக சரி செய்து தர வேண்டும்.   இது சம்பந்தமாக உடனடியாக அதிகாரிகளை அனுப்பி பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இந்த அரசுக்கு மிகப்பெரிய அவப்பெயர் உருவாக்குவது குப்பை கொட்டுவதற்கு இடம் இல்லை என்பதுதான். இதற்கு அதிகாரிகள் என்ன நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.    குப்பை கிடங்கு இல்லாததால் எந்தவித பெரிய பாதிப்பும் இல்லை. தற்போது குப்பை அகற்றுவதற்கு போதுமான ஆட்கள் இல்லை. வாகன வசதிகள் இல்லை. ஆனால் அதற்கு மாறாக அறிவுபூர்வமாக குப்பைகளை அகற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குப்பைகளை தரம் பிரித்து அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வருங்காலங்களில் இதனை முழுமையாக சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எங்கள் வார்டில் கட்டி முடிக்கப்பட்ட பூங்கா திறக்கப்படாமல் உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உடனடியாக கொண்டு வர வேண்டும். வரி பாக்கி செலுத்தாத கடைகளை அதிகாரிகள் மூடுவதால் தற்போது நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்தின் போது கடைகள் திறக்க வேண்டும் என நாங்கள் கூறும் போது வணிகர்கள் அதிகாரிகளைக் கொண்டு கடைகளை மூடுகிறார்கள். இப்போது எதுக்கு கடைகளை திறக்க கூறுகிறீர்கள் என கேட்கின்றனர். இதன் காரணமாக ஒரு தலைவர் 100 சதவீதம் கடை அடைப்பு போராட்டம் வெற்றி என தெரிவித்துள்ளார் என பேசிக் கொண்டிருந்த போது,

    குறுக்கிட்ட பா.ம.க. கவுன்சிலர் சரவணன், எங்கள் பா.ம.க. தலைவரை ஒருமையில் பேசி உள்ளதால் அதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி மேயர் சுந்தரி ராஜா முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது மேயர், துணை மேயர் மற்றும் கவுன்சிலர்கள் அனைவரும் உங்கள் கட்சித் தலைவரை ஒருமையில் பேசவில்லை இங்குள்ள ஒலிபெருக்கி சரியான முறையில் இயங்காததால் உங்களுக்கு ஒருமையில் பேசுவது போல் கேட்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். ஆகையால் உங்கள் இருக்கையில் அமருங்கள் என தெரிவித்தனர். அப்போது கண்டன கோஷம் எழுப்பிக் கொண்டு தங்கள் இருக்கையில் பா.ம.க. கவுன்சிலர் அமர்ந்தார்.


    எனது வார்டில் சாலை வசதி மிகவும் மோசமாக உள்ளது என அதிகாரிகளை நேரில் அழைத்துக் கொண்டு காண்பித்தேன். ஆனால் எங்கள் வார்டில் சாலை வசதி அமைக்க நிதி ஒதுக்கவில்லை. குடிநீர் இல்லாமல் உள்ள எனது வார்டு மக்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் மஞ்சக்குப்பம் அம்பேத்கர் சிலையை வெண்கல சிலையாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


    மாநகராட்சி கூட்டம் நடைபெறும் போது அனைவரும் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். மேயர் என்ற முறையில் அனைத்து வார்டு கவுன்சிலர்களையும் சமமாக கருதி அனைத்து பணிகளும் மேற்கொண்டு வருகின்றேன். மேலும் உங்களுக்கு உறுதுணையாக நாங்கள் இருப்போம். அதிகாரிகள் ஒத்துழைப்போடு மாநகராட்சியில் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து இந்த 5 காலங்களில் கடலூர் மாநகராட்சியை சிறந்த மாநகராட்சியாக கொண்டு வர நீங்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக கடலூர் மாநகராட்சி கூட்டம் தொடங்குவதற்கு முன்பு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இதன் காரணமாக கடலூர் மாநகராட்சி வளாகம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

    • நெல்லிக்குப்பம் நகர மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்களுக்குள் கடும் வாக்குவாதம்
    • இந்த சம்பவத்தால் நெல்லிக்குப்பம் நகர்மன்ற கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் நகர மன்ற கூட்டம் அதன் தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. துணைத் தலைவர் கிரிஜா திருமாறன் கமிஷனர் பொறுப்பு மகேஸ்வரி நகராட்சி பொறியாளர் பாண்டு துப்புரவு அலுவலர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் பின்வருமாறு- பாரூக் அலி :- நெல்லிக்குப்பம் நகராட்சியில் வரி பாக்கி அதிகமாக உள்ளது ஆனால் இது சம்பந்தமாக நகராட்சி அதிகாரிகள் அந்தந்த கவுன்சிலர்களை அணுகி யார் யாருக்கு வரி பாக்கி உள்ளது என தெரிவித்தால் அதனை எளிதாக வசூல் செய்வதற்கு ஏதுவாக அமையும் மேலும் வரி தொடர்பாக அதற்கு குழு உள்ளது இதில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இது சம்பந்தமாக இதுவரை எந்த கூட்டமும் கூட்டவில்லை ஆகையால் வரி வசூல் செய்வதற்கு கவுன்சிலருடன் இணைந்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,   ராணி: - நெல்லிக்குப்பம் நகராட்சியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் நடைபெற்று வருகின்றது ஆனால் எங்கள் வார்டுக்கு இதுவரை 100 நாள் திட்டப்பணிகள் ஒதுக்கவில்லை இதன் காரணமாக எங்கள் பகுதி மக்கள் எங்களிடம் தொடர்ந்து கேட்டு வருவதால் எங்களால் பதில் கூற முடியவில்லை மேலும் எங்கள் பகுதியில் உள்ள குளங்களை தூர்வாராததால் பொதுமக்களிடையே வீண் பிரச்சனை ஏற்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் முத்தமிழன்:- நகராட்சியில் மண் சாலைகளை தார் சாலைகளாக மாற்றுவதற்கு 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருப்பதாக தீர்மானம் கொண்டு வந்துள்ளீர்கள் ஆனால் எங்கள் பகுதிகளில் அதிகளவில் குடிசை வாழ் மக்கள் உள்ளதால் மண் சாலையை தார்சாலையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசிக்கொண்டு இருந்தார் அப்போது கவுன்சிலர் பூபாலன் , கூட்டம் தொடங்கியதில் இருந்து அதிக நேரம் பேசி வருகிறீர்கள் மேலும் எங்கள் பகுதியிலும் மண் சாலை உள்ளது அதனை தார்சாலையாக மாற்ற வேண்டும். மேலும் நாங்கள் எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக பேச வேண்டும் என கூறினார்.  அப்போது முத்தமிழன், எனது வார்டு தொடர்பாக நான் கேள்வி எழுப்பி வருகின்றேன் உங்களுக்கு தார் சாலை வேண்டுமென்றால் கோரிக்கை வையுங்கள் என தெரிவித்தார் அப்போது இருவருக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.     இதனைத் தொடர்ந்து நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் கவுன்சிலர் வைக்கும் கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் இன்று கொண்டு வந்துள்ள அனைத்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவித்து கூட்டத்தை முடித்தார்  அப்போது பெண் கவுன்சிலரின் கணவர் பிச்சை என்பவர் தி.மு.க. கவுன்சிலர் முத்தமிழனிடம் நகர்மன்ற கூட்டத்தில் அதிக நேரம் நீங்கள் பேசி வருவதால் மற்ற கவுன்சிலர்கள் எப்போது பேசுவார்கள் என கேள்வி எழுப்பினர் . இதில் முத்தமிழன் இங்கு நடைபெறுவது நகர மன்ற கூட்டம். நீங்கள் இதுபோல் இங்கு வந்து பேசக்கூடாது அதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள் என கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் பெண் கவுன்சிலர் இலக்கியா கணவர் தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் சாமிநாதன் எங்கள் பகுதியிலும் அதிகளவில் குடிசை பகுதி உள்ளது மேலும் மண்சாலை அதிக அளவில் உள்ளது என கேள்வி எழுப்பிய போது மீண்டும் முத்தமிழனுக்கும் சாமிநாதனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திமுக கவுன்சிலர் ஜெயபிரபா மணிவண்ணன் இங்கு நடைபெறுவது நகர மன்ற கூட்டம் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக கவுன்சிலரான இலக்கியா பேச வேண்டும் ஆனால் இந்த கூட்டரங்கில் கவுன்சிலரின் கணவரான நீங்கள் எப்படி பேச முடியும் என கேள்வி எழுப்பினர். இதில் ஜெயபிரபா மணிவண்ணனுக்கும், சாமிநாதனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் அங்கிருந்த ஜெயபிரபா மணிவண்ணன் கணவர் திமுக நகர செயலாளர் மணிவண்ணன் இதனை தட்டி கேட்டபோது மணிவண்ணனுக்கும் சாமிநாதனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் அனைவரையும் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தினார்கள். இதனை தொடர்ந்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நெல்லிக்குப்பம் நகர்மன்ற கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

    • தரையில் அமர்ந்து வியாபாரம் செய்பவர்களுக்குள்ளே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறும் ,
    • அலுவலர் இதற்கு தீர்வு ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.,

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்பு லியூரில் உழவர் சந்தை உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு உழவர் சந்தையில் புதிய கடைகள் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. தற்போது வழக்கத்தை விட அதிக விவசாயிகள் மற்றும் வியா பாரிகள் காய்கறி, பழ வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்து வருகின்ற னர்  இந்த நிலையில் உழவர் சந்தை முன்பு சாலை ஓரங்களில் காய்கறிகள் மற்றும் பழ வகைகள் விற்பனை செய்து வந்த வியாபாரிகள் உழவர் சந்தையில் சிமெண்ட் தரை அமைக்கப்பட்டு உள்ள இடத்தில் அவர்களின் பொருட்களை விற்பனை செய்வதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டதை தொடர்ந்து அதிகாரிகள் அவர்களை தரையில் அமர்ந்து தங்கள் பொருட்களை விற்பனை செய்வதற்கு அனுமதி அளித்துள்ளனர்.

    இதன் மூலம் தற்போது உழவர் சந்தை வெளியில் சாலை ஓரங்களில் வியாபாரிகள் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் உழவர் சந்தையில் வாரந்தோறும் விவசாயிகள் குலுக்கல் முறையில் அவர்களுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டு அந்த இடத்தில் தங்கள் பொருட்களை விற்பனை செய்வதற்கு அதிகாரியின் அனுமதி அளித்து வந்தனர். இதில் மூன்று பழ வியாபாரிகளுக்கு நிரந்தரமாக மூன்று கடைகள் ஒதுக்கப்பட்டு அவர்கள் வியாபாரம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் அவர்கள் ஒதுக்கப்பட்ட கடைகளில் பொருட்கள் வைத்து வியாபாரம் செய்யாமல், வெளியில் தரையில் அமர்ந்து பழங்களை வியாபாரம் செய்து வந்தனர். இதனால் ஏற்கனவே தரையில் அமர்ந்து வியாபாரம் செய்யும் நபர்களுக்கும், அவர்களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறும் அபாயம் ஏற்பட்டது இது சம்பந்தமாக வேளாண் அலுவலர் மகா தேவனிடம் புகார் அளித்தனர். இது தொடர்பாக வேளாண் அலுவலர் மகாதேவன் பழ வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர்கள் அதற்கு உடன்பாடு ஏற்படவில்லை.  இதனை தொடர்ந்து இன்று காலை திருப்பாதிரிப்புலியூர் போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வேளாண் அலுவலர் மகாதேவன் முன்னிலையில் 3 பழ வியாபாரிகளிடம் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் அமர்ந்து விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். அப்போது இரண்டு பழ வியாபாரிகள் போலீசார் கூறியது போல் கடையில் அமர்ந்து வியாபாரம் செய்து கொள்கிறோம் என தெரிவித்தனர்.

    ஆனால் ஒரு பழ வியாபாரி, போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வேளாண் அலுவலர் மகாதேவன் இது சம்பந்தமாக தங்கள் தரையில் அமர்ந்து வியாபாரம் செய்யும் நபர்களுக்கும், அவர்களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறும் இதற்கு தீர்வு ஏற்படுத்துவதாக தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. 

    ×