search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "heated argument"

    • தரையில் அமர்ந்து வியாபாரம் செய்பவர்களுக்குள்ளே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறும் ,
    • அலுவலர் இதற்கு தீர்வு ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.,

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்பு லியூரில் உழவர் சந்தை உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு உழவர் சந்தையில் புதிய கடைகள் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. தற்போது வழக்கத்தை விட அதிக விவசாயிகள் மற்றும் வியா பாரிகள் காய்கறி, பழ வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்து வருகின்ற னர்  இந்த நிலையில் உழவர் சந்தை முன்பு சாலை ஓரங்களில் காய்கறிகள் மற்றும் பழ வகைகள் விற்பனை செய்து வந்த வியாபாரிகள் உழவர் சந்தையில் சிமெண்ட் தரை அமைக்கப்பட்டு உள்ள இடத்தில் அவர்களின் பொருட்களை விற்பனை செய்வதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டதை தொடர்ந்து அதிகாரிகள் அவர்களை தரையில் அமர்ந்து தங்கள் பொருட்களை விற்பனை செய்வதற்கு அனுமதி அளித்துள்ளனர்.

    இதன் மூலம் தற்போது உழவர் சந்தை வெளியில் சாலை ஓரங்களில் வியாபாரிகள் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் உழவர் சந்தையில் வாரந்தோறும் விவசாயிகள் குலுக்கல் முறையில் அவர்களுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டு அந்த இடத்தில் தங்கள் பொருட்களை விற்பனை செய்வதற்கு அதிகாரியின் அனுமதி அளித்து வந்தனர். இதில் மூன்று பழ வியாபாரிகளுக்கு நிரந்தரமாக மூன்று கடைகள் ஒதுக்கப்பட்டு அவர்கள் வியாபாரம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் அவர்கள் ஒதுக்கப்பட்ட கடைகளில் பொருட்கள் வைத்து வியாபாரம் செய்யாமல், வெளியில் தரையில் அமர்ந்து பழங்களை வியாபாரம் செய்து வந்தனர். இதனால் ஏற்கனவே தரையில் அமர்ந்து வியாபாரம் செய்யும் நபர்களுக்கும், அவர்களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறும் அபாயம் ஏற்பட்டது இது சம்பந்தமாக வேளாண் அலுவலர் மகா தேவனிடம் புகார் அளித்தனர். இது தொடர்பாக வேளாண் அலுவலர் மகாதேவன் பழ வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர்கள் அதற்கு உடன்பாடு ஏற்படவில்லை.  இதனை தொடர்ந்து இன்று காலை திருப்பாதிரிப்புலியூர் போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வேளாண் அலுவலர் மகாதேவன் முன்னிலையில் 3 பழ வியாபாரிகளிடம் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் அமர்ந்து விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். அப்போது இரண்டு பழ வியாபாரிகள் போலீசார் கூறியது போல் கடையில் அமர்ந்து வியாபாரம் செய்து கொள்கிறோம் என தெரிவித்தனர்.

    ஆனால் ஒரு பழ வியாபாரி, போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வேளாண் அலுவலர் மகாதேவன் இது சம்பந்தமாக தங்கள் தரையில் அமர்ந்து வியாபாரம் செய்யும் நபர்களுக்கும், அவர்களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறும் இதற்கு தீர்வு ஏற்படுத்துவதாக தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. 

    ×