search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆணையாளர் இடையே"

    • புஞ்சை புளியம்பட்டி நகராட்சி அவசரக் கூட்டம் நடைபெற்றது.
    • இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சை புளியம்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள வாரச்சந்தையில் மாட்டி றைச்சி கடைகள் கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.

    இந்நிலையில் நகராட்சிக்கு உட்பட்ட 15,16-வது வார்டை சேர்ந்த பொதுமக்கள் மாட்டிறைச்சி கடைகளால் துர்நாற்றம் வீசுவதாகவும், சுகாதார கேடு ஏற்படுவதாகவும், நகராட்சி ஆணையாளரிடம் புகார் அளித்ததன் கார ணமாக எந்த விசாரணையும் இன்றி இரவோடு இரவாக பொக்லைன் எந்திரம் மூலம் மாட்டிறைச்சி கடைகள் தரை மட்டமாக்கப்பட்டது.

    இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக மாட்டி றைச்சி கடை உரிமை யாளர்கள், மார்க்சிஸ்டு, கம்யூனிஸ்டு கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவை இணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    தங்களுக்கு மீண்டும் வார சந்தையில் வியாபாரம் செய்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் மார்க்சிஸ்டு, கம்யூனிஸ்டு கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய அமைப்பு களில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகத்தில் தடையை மீறி நிரந்தரமாக குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை கலைந்து செல்வ தில்லை எனவும் போரா ட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட வர்களோடு நகராட்சி ஆணையாளர் மற்றும் தலைவர் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் நகர்மன்ற கூட்டம் கூட்டப்பட்டு அதில் விவாதம் செய்து கடை அமைப்பது குறித்து முடிவு தெரிவி க்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்ப ட்டது.

    இந்நிலையில் நேற்று புஞ்சை புளியம்பட்டி நகராட்சி அவசரக் கூட்டம் நகராட்சி தலைவர் ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் ஆணையாளர் சையது உசேன், துணைத்தலைவர் சிதம்பரம் உள்ளிட்ட அனைத்து நகர மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

    இதில் நகராட்சி தலைவர் ஜனார்த்தனன் பேசும்போது,

    மாட்டிறைச்சி கடைகள் அகற்றப்பட்ட பிரச்ச னையில் ஆணையாளர் எடுத்த திடீர் தன்னிச்சையான முடிவினால் தற்பொழுது நகர மன்ற தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.

    அந்த கடைகளை அகற்றியது ஆணையாளர் தான் எனவும், இதனால் ஆணை யாளர் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்ததால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்நிலையில் திடீரென கூட்டம் நடந்து கொண்டிரு க்கும் பொழுதே நகராட்சி ஆணையாளர் சையது உசேன் திடீரென வெளி யேறி தனது அறைக்கு சென்று விட்டதால் ஆத்திர மடைந்த நகராட்சி தலைவர் ஜனார்த்தனன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் ஆணையாளரின் அறைக்குள் சென்று அவரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறியது தவறு எனவும், அதனால் மீண்டும் வந்து முறைப்படி கூட்ட த்தை முடித்து வைக்க வேண்டும்.

    உங்களால் தான் நகராட்சி நிர்வாகத்திற்கு கெட்ட பெயர் ஏற்பட்டு ள்ளது என கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அதன் பிறகு சுமார் ஒரு மணி நேரம் கழித்து சமாதானம் அடைந்த ஆணையாளர் சையது உசேன் மீண்டும் நகராட்சி கூட்ட அரங்கிற்கு வந்து கூட்டத்தை முடித்து வைப்பதாகவும்,

    ஞாயிற்றுக்கி ழமைகளில் மட்டும் மாட்டு இறைச்சி விற்பனை செய்து கொள்ள அனுமதி அளிக்க லாம் எனவும், அதன் பிறகு மாற்று இடத்தில் நிரந்தர கொட்டகை அமைத்து வியாபாரிகளுக்கு கடைகள் வழங்க அனுமதி அளிக்கலாம் என தீர்மானம் அளித்ததின் பேரில் கூட்டம் முடிவடைந்தது.

    ×