search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐயப்பன் கோவில்"

    • 15-ந்தேதி ஐயப்ப சாமிக்கு விஷுக்கனி தரிசனத்திற்கு வைக்கப்படும்.
    • சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 26-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 27-ந் தேதி கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் திருவிழா நடந்தது. கடந்த 5-ந் தேதி ஆராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெற்று கோவில் நடை அடைக்கப்பட்டது.

    இந்தநிலையில், சித்திரை விஷு பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து தீபாராதனை நடந்தது. பின்னர் 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் (நெய் தேங்காய் ஆழியில்) தீ மூட்டப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    கோவிலில் இன்று (புதன்கிழமை) முதல் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடைதிறப்பு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், 5.30 மணி முதல் 9 மணி வரை நெய்யபிஷேகம், அஷ்டாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, மதியம் 1 மணிக்கு நடை அடைப்பு ஆகியவை நடக்கிறது. மாலை 5 மணிக்கு நடை திறப்பு, 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், தொடர்ந்து படி பூஜை, இரவு 10 மணிக்கு நடை அடைப்பு போன்றவை நடக்கிறது.

    15-ந் தேதி விஷு பண்டிகை அன்று வழக்கம் போல் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு ஐயப்ப சாமிக்கு விஷுக்கனி தரிசனத்திற்கு வைக்கப்படும். தொடர்ந்து இரவு 7.30 மணி வரை ஐயப்ப பக்தர்கள் விஷுக்கனி தரிசனம் காண அனுமதிக்கப்படுவார்கள்.

    விஷு பண்டிகையை முன்னிட்டு தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் பக்தர்களுக்கு நாணயங்களை கை நீட்டமாக வழங்குவார்கள். தொடர்ந்து 19-ந் தேதி வரை சித்திரை மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் உதயாஸ்தமன பூஜை, சகஸ்ரகலச பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். 19-ந் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    9 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளையொட்டி சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது. ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நேற்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    • 15-ந்தேதி விஷு கனி தரிசனம் நடக்கிறது.
    • 19-ந் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைகள் தவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தை முன்னிட்டும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

    அதன்படி சித்திரை விஷு பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (செவ்வாய்க்கிழமை) திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து தீபாராதனை நடைபெறும்.

    பின்னர், 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    நாளை (புதன்கிழமை) முதல் தினசரி அதிகாலை 4.30 மணிக்கு பள்ளியுணர்த்தல், 5 மணிக்கு நடைதிறப்பு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், 5.30 மணி முதல் 9 மணி வரை நெய்யபிஷேகம், அஷ்டாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை ஆகியவற்றை தொடர்ந்து மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், அதைத்தொடர்ந்து படி பூஜை ஆகியவை நடைபெறும். பின்னர் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    15-ந் தேதி சித்திரை விஷு பண்டிகையன்று வழக்கம்போல் அதிகாலை நடை திறக்கப்பட்டு ஐயப்ப சாமிக்கு முன் விஷுக்கனி தரிசனத்திற்கு வைக்கப்படும். அதைத்தொடர்ந்து காலை 7.30 மணி வரை ஐயப்ப பக்தர்கள் விஷு கனி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். விஷு பண்டிகையை முன்னிட்டு தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் பக்தர்களுக்கு நாணயங்களை கை நீட்டமாக வழங்குவார்கள்.

    19-ந் தேதி வரை சித்திரை மாத பூஜைக்காக நடை திறக்கப்படும். வழக்கமான பூஜைகளுடன், உதயாஸ்தமன பூஜை, சகஸ்ரகலச பூஜை போன்ற பூஜைகள் நடைபெறும். 19-ந் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    9 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளையொட்டி, சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது. மேலும் கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    • யானை மீது ஐயப்பனை அமர வைத்து சன்னிதானத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
    • இந்த ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு விழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்து வந்து ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.

    விழாவின் 9-ம் நாளான நேற்று கணபதி ஹோமம், நெய் அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் நடத்தப்பட்டன. தொடர்ந்து உற்சவ பலி நடைபெற்றது.

    இரவு 8 மணிக்கு சன்னிதானத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது ஐயப்பனை வைத்து மேள தாளம் முழங்க ஊர்வலம் கொண்டு சென்றனர். இரவு 9.30 மணிக்கு சரம் குத்தி வந்ததும் பள்ளி வேட்டை நடந்தது. அதன்பிறகு யானையில் ஊர்வலமாக புறப்பட்ட ஐயப்பன், இரவு 12 மணிக்கு சன்னிதானத்தை வந்தடைந்தார்.

    பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக பம்பையில் இன்று (புதன்கிழமை) ஆராட்டு விழா நடந்தது. இதற்காக அலங்கரிக்கப்பட்ட யானை மீது ஐயப்பனை அமர வைத்து மேள தாளம் முழங்க சன்னிதானத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு வந்தனர். இந்த ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ஊர்வலம் பம்பை ஆற்றுக்கு பகல் 11.30 மணிக்கு வந்ததும் அங்கு தந்திரி கண்டரரு மகேஷ் மேகனரு தலைமையில் ஐயப்ப சாமிக்கு ஆராட்டு விழா நடந்தது. தொடர்ந்து பகல் 1 மணிக்கு பம்பை கணபதி கோவிலுக்கு சாமி கொண்டு வரப்பட்டது. அங்கு பக்தர்கள் திரண்டு ஐயப்ப சாமியை தரிசனம் செய்தனர்.

    மாலையில் அங்கிருந்து மீண்டும் ஊர்வலமாக ஐயப்ப சாமி சன்னிதானம் வந்தடைகிறார். தொடர்ந்து கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் திருவிழா கொடி இறக்கப்பட்டு விழா நிறைவுபெறுகிறது.

    • பம்பை ஆற்றில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் ஐயப்ப சாமிக்கு ஆராட்டு நடைபெறுகிறது.
    • திருவிழா கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவுபெறும்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 9-ம் நாள் திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் மற்றும் வழக்கமான பூஜைகள் நடந்தன. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் உத்சவ பலி நடைபெற்றது,

    அதைத்தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு சரம் குத்தியில் பள்ளி வேட்டை நடந்தது. அதற்கு முன்னதாக இரவு 8 மணிக்கு சன்னிதானத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது ஐயப்ப சாமியை மேள, தாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர். பள்ளி வேட்டைக்கு பின் யானை ஊர்வலம் மீண்டும் புறப்பட்டு இரவு 12 மணிக்கு சன்னிதானத்தை அடைந்தது.

    திருவிழாவின் நிறைவாக இன்று (புதன்கிழமை) பகல் 11.30 மணிக்கு பம்பையில் ஆராட்டு விழா நடக்கிறது. இதற்காக அலங்கரிக்கப்பட்ட யானை மீது ஐயப்பனை அமர வைத்து மேளதாளம் முழங்க காலை 8 மணிக்கு சன்னிதானத்தில் இருந்து பக்தர்கள் புடை சூழ ஊர்வலம் புறப்படுகிறது. பம்பை ஆற்றில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் ஐயப்ப சாமிக்கு ஆராட்டு நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து பகல் 1 மணிக்கு பம்பை கணபதி கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு பின் சாமி ஊர்வலம் புறப்பட்டு மாலை 5 மணிக்கு சன்னிதானத்தை வந்தடைகிறது. அங்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். பின்னர் திருவிழா கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவுபெறும்.

    இதே போல், திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆராட்டு இன்று (புதன்கிழமை) சங்குமுகம் கடற்கரையில் நடைபெறுகிறது.

    இதற்காக பத்மநாபசாமி கோவிலின் மேற்கு நடையில் இருந்து மாலை 5 மணிக்கு சாமி ஊர்வலம் புறப்படும். இந்த ஊர்வலம் விமான நிலையம் வழியாக கடந்து செல்லும் என்பதால் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை 5 மணிநேரம் திருவனந்தபுரம் விமான நிலையம் மூடப்படும். இதன் காரணமாக மாலை 4 மணி முதல் 9 மணி வரை விமான போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • புதன்கிழமை பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறும்.
    • புதன்கிழமை கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா கடந்த மார்ச் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    7-ம் திருவிழா நாளான நேற்று வழக்கம் போல் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.பின்னர் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் மற்றும் வழக்கமான பூஜைகளும், உத்சவ பலி தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையிலும் நடந்தது.

    மேலும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேரில் வந்து ஐயப்பனை தரிசனம் செய்ததோடு நெய்யபிஷேக வழிபாடு நடத்தினர்.

    9-ம் திருவிழாவான நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணிக்கு சரம்குத்தியில் பள்ளிவேட்டை நிகழ்ச்சியும், 10-ம் திருவிழாவான நாளை மறுநாள் (புதன்கிழமை) பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறும்.

    அன்று மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும். தொடர்ந்து வழக்கமான பூஜைகளுடன் இரவு நடை அடைக்கப்படும். விழாவையொட்டி சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    • 4-ந்தேதி பள்ளிவேட்டை நடைபெறுகிறது.
    • 5-ந்தேதி பம்பையில் ஆறாட்டு விழா நடக்கிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா இன்று தொடங்கியது. இதற்காக நேற்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

    இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 9.45 மணிக்கு கோவில் தந்திரி கண்டரரு ராஜிவரரூ, மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி ஆகியோர் கொடிக்கு பூஜைகள் நடத்தினர். தொடர்ந்து பங்குனி உத்திர திருவிழா கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து 10 நாட்கள் இத்திருவிழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.

    நாளை முதல் கோவிலில் உற்சவ பலியும் நடக்கிறது. 9-ம் திருவிழாவான ஏப்ரல் 4-ந் தேதி சரங்குத்தியில் பள்ளிவேட்டை நடைபெறுகிறது. மறுநாள் பம்பையில் ஆறாட்டு விழா நடக்கிறது. ஆறாட்டு முடிந்த பின்னர் அன்று மாலை கொடி இறக்க நிகழ்ச்சி நடைபெறும்.

    பங்குனி உத்திர திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தே கோவிலுக்கு வர வேண்டும் என கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    மேலும் கோவிலில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

    • இன்று காலை 9.45 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது.
    • 5-ந்தேதி பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறும்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறும். இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.

    இதுதவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி ஆராட்டு திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெறும்.

    அதன்படி சபரிமலை கோவிலில் இந்த ஆண்டுக்கான பங்குனி ஆராட்டு விழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்கு பிறகு இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது.

    விழாவில் இன்று காலை 9.45 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. கொடியை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைக்கிறார். விழா நாட்களில் வழக்கமான பூஜைகளுடன் சிறப்பு பூஜையாக உத்சவ பலி நடைபெறும்.

    9-ம் திருவிழாவான அடுத்த மாதம் 4-ந் தேதி இரவு 9 மணிக்கு சரம் குத்தியில் பள்ளி வேட்டையும், திருவிழாவின் நிறைவு நாளான 5-ந் தேதி பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறும்.

    அன்று மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறுகிறது. தொடர்ந்து வழக்கமான பூஜைகளுடன் இரவு நடை அடைக்கப்படும்.

    • பங்குனி ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது.
    • ஏப்ரல் 5-ந் தேதி பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறும்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இதுதவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி ஆராட்டு திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.

    இந்த நாட்களில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து திரளான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த 14-ந் தேதி திறக்கப்பட்டு 19-ந் தேதி அடைக்கப்பட்டது.

    இந்த நிலையில் பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை மீண்டும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை (திங்கட்கிழமை) காலை 9.45 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. கொடியை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றி வைத்து 10 நாள் திருவிழாவை தொடங்கி வைக்கிறார்.

    விழாவையொட்டி வழக்கமான பூஜைகளுடன் சிறப்பு பூஜையாக உத்சவ பலி நடைபெறும். 10-ம் திருவிழாவான அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந் தேதி பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறும். அன்று மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவுபெறும். தொடர்ந்து வழக்கமான பூஜைகளுடன் இரவு நடை அடைக்கப்படும்.

    • 27-ந்தேதி பங்குனி உத்திர திருவிழாவுக்கான கொடி ஏற்றப்படுகிறது.
    • ஏப்ரல் 5-ந் தேதி பம்பையில் ஆராட்டு விழா நடைபெறும்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (26-ந் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.இருப்பினும் நாளை வேறு பூஜைகள் எதுவும் நடை பெறாது.

    மறுநாள் (27-ந்தேதி) காலை தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் பங்குனி உத்திர திருவிழாவுக்கான கொடி ஏற்றப்படுகிறது. தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆன்லைனில் முன் பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

    விழாவின் இறுதி நாளான ஏப்ரல் 5-ந் தேதி பம்பையில் ஆராட்டு விழா நடைபெறும். அன்று மாலை கொடியிறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவடைகிறது.

    • 19-ந் தேதி கோவில் நடை அடைக்கப்படும்.
    • பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை 26-ந்தேதி திறக்கப்படும்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து ஐயப்பனை தரிசிப்பார்கள். இதுதவிர மாத பூஜை, திருவிழா காலங்களிலும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவது வழக்கம்.

    இந்தநிலையில் பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நேற்று கிடையாது. அதே சமயத்தில் கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றது.

    இன்று (புதன்கிழமை) அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. இன்று முதல் 19-ந் தேதி வரை தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறுகிறது.

    மேலும் தந்திரி ராஜீவரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும். 19-ந் தேதி இரவு அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    பின்னர் பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை வருகிற 26-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 27-ந் தேதி காலை 9.45 மணிக்கு திருக்கொடியை ஏற்றி வைத்து 10 நாள் திருவிழாவை தந்திரி கண்டரரு ராஜீவரு தொடங்கி வைக்கிறார். ஏப்ரல் மாதம் 5-ந் தேதி பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறும்.

    • இன்று வேறு பூஜைகள் எதுவும் இல்லை.
    • இன்று வேறு பூஜைகள் எதுவும் இல்லை.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் கொரோனா தளர்வுக்கு பிறகு இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் பக்தர்கள் அதிக அளவு வந்து தரிசனம் பெற்றனர். இந்த காலங்களில் கோவிலுக்கு ரூ.360 கோடி அளவில் வருமானம் கிடைத்தது.

    மகரவிளக்கு பூஜைக்கு பின்னர் கடந்த மாதம் (ஜனவரி) 20-ந்தேதி சபரிமலை கோவில் நடை அடைக்கப்பட்டது.

    இந்த நிலையில் நாளை (13-ந்தேதி) மாசி மாதம் பிறக்க உள்ளதால், மாதாந்திர பூஜைகளுக்காக கோவில் நடையை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவும் தொடங்கியது.

    இதனைத் தொடர்ந்து மாசி மாத பூஜைகளுக்காக கோவில் நடை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நடை திறக்கப்பட்டதும் கோவில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தீபம் ஏற்றுகிறார். இன்று வேறு பூஜைகள் எதுவும் இல்லை.

    நாளை காலை 5 மணிக்கு நடை திறந்ததும் நெய் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. 5 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.

    17-ந்தேதி வரை கோவில் திறந்திருக்கும். இந்த நாட்களில் நெய்யபிஷேகம், கலசாபிஷேகம், படி பூஜை போன்றவை நடைபெறும். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 17-ந் தேதி இரவு 7 மணிக்கு படிபூஜை முடிந்ததும் 10 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.

    சபரிமலை கோவில் நடை திறக்கப்படுவதை முன்னிட்டு ஆன்லைன் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    • 13-ந்தேதி நெய் அபிஷேகம், பூஜைகள் நடைபெற உள்ளன.
    • 17-ந்தேதி படிபூஜை முடிந்ததும் நடை அடைக்கப்படும்.

    மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்கு பின்னர் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது.

    இந்த நிலையில் மாசி மாத பூஜைகளுக்காக கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. வருகிற 12-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டதும் கோவில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தீபம் ஏற்றுகிறார்.

    தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அன்றைய தினம் வேறு பூஜைகள் எதுவும் இல்லை. மறுநாள் காலை 5 மணிக்கு நடை திறந்ததும் நெய் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற உள்ளன.

    வருகிற 17-ந் தேதி வரை அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும். 17-ந் தேதி இரவு 7 மணிக்கு படிபூஜை முடிந்ததும் 10 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.

    சபரிமலை கோவில் நடை திறக்கப்படுவதை முன்னிட்டு ஆன்லைன் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    ×