search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐயப்பன் கோவில்"

    • 21-ந்தேதி இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.
    • ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடை பெறும். இதுதவிர ஒவ்வொரு மலையாள மாதத்தின் (நிகரான தமிழ் மாதத்தின்) முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை, பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் நடை திறக்கப்படும். அதன்படி ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துவார்.

    தொடர்ந்து கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்படும். பின்னர் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு 18-ம் படி வழியாக சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது. ஆடி மாத பிறப்பையொட்டி கோவில் கருவறை மற்றும் சன்னிதான சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும்.

    17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 5 நாட்கள் கோவிலில் வழக்கமான நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், களபாபிஷேகம், சகஸ் ரகலசாபிஷேகம், படிபூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகியவை நடைபெறும்.

    21-ந்தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். ஆடி மாத பூஜையையொட்டி பக்தர்கள் வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லில் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக திருவனந்தபுரம், கோட்டயம், செங்கன்னூர், பத்தனம் திட்டை, கொட்டாரக்கரை, எர்ணாகுளம் உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கேரள அரசு போக்குவரத்துகழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    நிறை புத்தரிசி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந்தேதி மாலையில் திறக்கப்படும். 10-ந்தேதி நிறை புத்தரிசி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.

    • 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை வழக்கமான பூஜைகள் நடைபெறும்.
    • 21-ந்தேதி அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்படும்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடை பெறும். இதுதவிர ஒவ்வொரு மலையாள மாதத்தின் (நிகரான தமிழ் மாதத்தின்) முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை, பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் நடை திறக்கப்படும். அதன்படி ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துவார்.

    தொடர்ந்து கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்படும். பின்னர் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு 18-ம் படி வழியாக சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது. ஆடி மாத பிறப்பையொட்டி கோவில் கருவறை மற்றும் சன்னிதான சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும்.

    17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 5 நாட்கள் கோவிலில் வழக்கமான நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், களபாபிஷேகம், சகஸ் ரகலசாபிஷேகம், படிபூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகியவை நடைபெறும்.

    21-ந்தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். ஆடி மாத பூஜையையொட்டி பக்தர்கள் வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லில் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக திருவனந்தபுரம், கோட்டயம், செங்கன்னூர், பத்தனம் திட்டை, கொட்டாரக்கரை, எர்ணாகுளம் உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கேரள அரசு போக்குவரத்துகழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    நிறை புத்தரிசி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந்தேதி மாலையில் திறக்கப்படும். 10-ந்தேதி நிறை புத்தரிசி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.

    • 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.
    • பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் அனுமதிக்கப்படுவார்கள்.

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஆனி மாத பூஜைக்காக கடந்த 15-ந் மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. ஆனி மாத பூஜையை முடிந்து 20-ம் தேதி சகஸ்ரகலச பூஜையும், அதைத்தொடர்ந்து நடைபெற்ற வழக்கமான பூஜைகளுக்கு பின் அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, கோவில் நடை அடைக்கப்பட்டது.

    ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (ஜூலை) 16-ந் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும். 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். வழக்கம் போல் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, நிலக்கல்லிலும் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

    • இன்று முதல் 20-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.
    • 20-ந்தேதி இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

    கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இந்த நிலையில் ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை காட்டினார். தொடர்ந்து, கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்பட்டு கோவில் நடை அடைக்கப்பட்டது. நேற்று மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை.

    இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 20-ந் தேதி வரை 5 நாட்கள், சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழக்கமான நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம் ஆகியவற்றுடன் களபாபிஷேகம், சகஸ்ர கலசாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகியவை நடைபெறுகிறது.

    இன்று முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 20-ந்தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். வழக்கம் போல் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, நிலக்கல்லிலும் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெறும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

    • நாளை முதல் 20-ந் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும்.
    • சாமி தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

    கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இந்த நிலையில் ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (வியாழக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை காட்டுகிறார். தொடர்ந்து, கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்படும். இன்று மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது.

    நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 20-ந் தேதி வரை 5 நாட்கள், சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழக்கமான நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம் ஆகியவற்றுடன் களபாபிஷேகம், சகஸ்ர கலசாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகியவை நடைபெறுகிறது. 20-ந்தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

    வழக்கம் போல் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, நிலக்கல்லிலும் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெறும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

    • பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
    • ஆன்லைன் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆனி மாத பூஜைக்காக வருகிற 15-ந் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துகிறார். இதனை தொடர்ந்து கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்படும். அதைத்தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு 18-ம் படி வழியாக சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

    அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது. கோவில் கருவறை மற்றும் சன்னிதான சுற்றுப்புற பகுதிகளை சுத்தம் செய்யும் பணி நடைபெறும். 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 5 நாட்கள் கோவிலில் வழக்கமான பூஜைகளுடன் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், களபாபிஷேகம், சகஸ்ர கலசாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை நடைபெறும்.

    இசைக்கப்பட்டு இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். வழக்கம் போல் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லிலும் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெறும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    • சபரிமலை கோவில் நடை மீண்டும் ஜூன் 15-ந்தேதி திறக்கப்படும்.
    • 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசன் தவிர, விசேஷ நாட்கள் மற்றும் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், பிரதிஷ்டை தின சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். 18-ம் படிக்கு கீழ் அமைக்கப்பட்டுள்ள கற்பூர ஆழியில் நெருப்பு மூட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    பிரதிஷ்டை தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, வழக்கமான பூஜைக்கு பிறகு பிரதிஷ்டை தின சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

    ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம் (ஜூன்) 15-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    • வருகிற 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை வைகாசி மாத பூஜை நடைபெற உள்ளது.
    • 15-ந்தேதி முதல் 5 நாட்கள் கோவிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை வைகாசி மாத பூஜை நடைபெற உள்ளது. இதற்காக கோவில் நடை நாளை மறுநாள் (14-ந்தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். மறுநாள் (15-ந்தேதி) முதல் 5 நாட்கள் கோவிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

    சபரிமலையில் நடை திறக்கப்படுவதை முன்னிட்டு கேரள அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், வைகாசி மாத பூஜைக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    • கோவில் நடை மீண்டும் மே 14-ந்தேதி திறக்கப்படும்.
    • 18-படிகளில் வன தேவதைகளுக்கான சிறப்பு பூஜை நடைபெற்றது.

    சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 11-ந்தேதி திறக்கப்பட்டது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து 12-ந்தேதி முதல் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    கடந்த 15-ந்தேதி விஷூ பண்டிகை அன்று வழக்கம்போல் அதிகாலை நடை திறக்கப்பட்டு ஐயப்ப பக்தர்கள் விஷூக்கனி காணல் நிகழ்ச்சியில் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர்.

    இந்த நிலையில் 9 நாட்கள் நடைபெற்ற பூஜைகள் நிறைவு பெற்றதையடுத்து சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று இரவு 10 மணிக்கு அடைக்கப்பட்டது. முன்னதாக நேற்று மதியம் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் 18-படிகளில் வன தேவதைகளுக்கான சிறப்பு பூஜை நடைபெற்றது.

    வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம்(மே) 14-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து 19-ந்தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.

    • பூஜையில் வைக்கப்பட்ட காய், கனிகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
    • கோவில் நடை 19-ந்தேதி அடைக்கப்படும்.

    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று விஷூ கனிகாணும் நிகழ்ச்சி நடந்தது.

    சித்திரை முதல் நாளில் இறைவன் முன்பு காய்,கனிகளை படைத்து சாமி தரிசனம் செய்தால் அந்த ஆண்டு இனிமையாகவும், வளமையாகவும் அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    அந்த வகையில் கேரளாவில் உள்ள அனைத்து கோவில்களிலும் இன்று விஷூ கனிகாணும் நிகழ்ச்சி நடந்தது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் விஷூ கனிகாணும் நிகழ்ச்சிக்காக இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. கோவிலில் சாமி முன்பு பல வகையான காய், கனிகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டி ருந்தன.

    தொடர்ந்து ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. வழிபாடுகள் முடிந்த பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட காய், கனிகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    அதனை வாங்கவும், ஐயப்பனை தரிசிக்கவும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சபரிமலை சென்று விஷூ கனிகாணும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    விஷூ கனிகாணும் நிகழ்ச்சிக்காக திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 19-ந் தேதி இரவு 10 மணிக்கு அடைக்கப்படும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சித்திரை விஷூ நாளில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
    • கோவில் நடை 19-ந்தேதி இரவு 10 மணிக்கு அடைக்கப்படும்.

    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் சித்திரை மாத பிறப்பையொட்டி நேற்று முன்தினம் மாலை கோவில் நடை திறக்கப்பட்டது.

    சபரிமலையில் நடை பெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி நாளை மறுநாள் நடக்கிறது. சித்திரை முதல் நாளில் இறைவன் முன்பு படைக்கப்படும் காய், கனி வகைகளை பார்த்து சாமி தரிசனம் செய்தால் அந்த ஆண்டு இனிமையாகவும், வளமையாகவும் அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதற்காக சித்திரை விஷூ நாளில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    இதற்காக அன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும்.

    அப்போது காய்,கனிகள் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    பூஜைகள் முடிந்த பின்னர் சாமி முன்பு படைக்கப்பட்ட காய், கனிகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதுபோல கைநீட்டமும் அளிக்கப்படும்.

    இதனை கோவில் தந்திரி மகேஷ் மோகனரரு, மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி ஆகியோர் வழங்குவார்கள். சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சிக்காக திறக்கப்படும் கோவில் நடை வருகிற 19-ந் தேதி இரவு 10 மணிக்கு அடைக்கப்படும்.

    • இன்று முதல் வரும் 19-ம்தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.
    • ஐயப்ப பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    சபரிமலை, கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாதம் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு தமிழ் மாதம் பிறக்கும் போதும் ஐந்து நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அந்த வகையில் ஆனி மாத பூஜைக்காக நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.

    தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி திறந்து வைத்து தீபாராதனை காண்பித்தார். அதைத் தொடர்ந்து இன்று முதல் வரும் 19-ம்தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. இதற்காக ஏற்கனவே ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில் கொரோனோ நெறிமுறைகளை கடைபிடித்து பக்தர்கள் வழிபாடு செய்ய உள்ளனர்.

    அதேபோல் பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் பகுதியில் உடனடி தரிசன முன்பதிவு வசதி செய்யப்பட்டு உள்ளது. தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    ×