search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏடிஎம் கொள்ளை"

    • அரியானா மாநிலம் மேவாட் பகுதியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் 3 பேர் பதுங்கி இருப்பது தனிப்படையினருக்கு தெரியவந்தது.
    • இருவரும் திருவண்ணாமலை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, போளூர், கலசபாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்த 4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையர்கள் கடந்த 12-ந்தேதி ரூ.72 லட்சத்து 78 ஆயிரத்து 600-ஐ கொள்ளையடித்து சென்றனர். இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படையினர் அரியானாவிற்கு சென்று 2 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் திருவண்ணாமலைக்கு அழைத்து வரப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.

    தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அரியானா மாநிலம் மேவாட் பகுதியில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் 3 பேர் பதுங்கி இருப்பது தனிப்படையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இதற்கிடையே ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கர்நாடக மாநிலம் கோலார் மகாலட்சுமி லேஅவுட் பகுதியை சேர்ந்த குஷரத்பாஷா (வயது43) என்பவரையும், அசாம் மாநிலம் லைலா பைபாஸ் ரோடு லால்பூர் பகுதியை சேர்ந்த அப்சர் உசேன் (23) என்பவரையும் கோலார் பகுதியில் வைத்து தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் குஷரத் பாஷா கொள்ளையர்களுக்கு பண பரிமாற்றம் செய்ய உதவியதும், அப்சர் உசேன் கொள்ளையர்களுக்கு கோலாரில் ஒரு விடுதியில் தங்க அறை எடுத்து கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து கோலாரில் இருந்து திருவண்ணாமலைக்கு நேற்று மாலை அழைத்து வந்தனர்.

    விசாரணைக்கு பின்னர் இருவரும் திருவண்ணாமலை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • கொள்ளை நடந்து 7 நாட்களாகியும் கொள்ளை கும்பலைச் சேர்ந்த மற்றவர்களை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
    • தனிப்படையினர் நடத்திய விசாரணையில் கொள்ளை கும்பலை சேர்ந்த மேலும் 3 பேர் அரியானா மாநிலத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில் எந்திரங்களை உடைத்து ரூ.73 லட்சம் கொள்ளையடித்தனர். கொள்ளை கும்பலை கைது செய்வதற்காக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    அரியானா, குஜராத், கர்நாடகா மாநிலம் உட்பட பல பகுதிகளில் அதிரடி வேட்டை நடத்தினர்.

    கடந்த 7 நாட்களாக போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    இந்த கொள்ளையில் ஈடுபட்ட அரியானா மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் தலைவன் முகமது ஆரிப் மற்றும் ஆஜாத் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இந்த கொள்ளையில் மேலும் 6-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் ரூ.70 லட்சம் பணத்தை அவர்கள் பதுக்கி வைத்துள்ளனர்.

    கைதான இருவரையும் வருகிற 3-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இருவரையும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த திருவண்ணாமலை டவுன் போலீசார் முடிவு செய்தனர். அதற்காக திருவண்ணாமலை கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்தனர்.

    காவலில் எடுத்து விசாரணை நடத்திய பின்னரே மீதமுள்ள கொள்ளையர்கள் எங்கு பதுங்கி இருக்கிறார்கள் ரூ.70 லட்சம் பணம் எங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது போன்ற தகவல்கள் வெளிவரும்.

    கொள்ளை நடந்து 7 நாட்களாகியும் கொள்ளை கும்பலைச் சேர்ந்த மற்றவர்களை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    தொடர்ந்து தனிப்படையினர் நடத்திய விசாரணையில் கொள்ளை கும்பலை சேர்ந்த மேலும் 3 பேர் அரியானா மாநிலத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது. அங்கு முகாமிட்டுள்ள தனிப்படை போலீசார் அவர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அரியானா, ராஜஸ்தான் மாநில எல்லைப் பகுதியில் மாடு திருடிய 2 பேரை காரில் வைத்து அப்பகுதி மக்கள் தீவைத்து எரித்து கொலை செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

    இதனால் அரியானா மாநிலத்தில் பதுங்கி உள்ள கொள்ளையர்களை பிடிப்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தனிப்படை போலீசார் கொள்ளையர்களை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    • போலீசார் வெளியிட்ட செய்தி குறிப்பில் ரூ.72 லட்சத்து 79 ஆயிரம் பணம் கொள்ளை போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • இருவரையும் மார்ச் 3-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 11-ந்தேதி நள்ளிரவில் 4 ஏ.டி.எம். மையங்களை குறி வைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    திருவண்ணாமலை நகர பகுதியில் 2 ஏ.டி.எம். மையங்கள், போளூரில் ஒரு ஏ.டி.எம். மையம், கலசப்பாக்கத்தில் இன்னொரு ஏ.டி.எம். மையம் என 4 ஏ.டி.எம். மையங்களை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ. 73 லட்சம் பணத்தை கொள்ளையர்கள் சுருட்டிக் கொண்டு தப்பி ஓடினார்கள். இதில் கலசப்பாக்கம் ஏ.டி.எம். மையம் "ஒன் இண்டியா" ஏ.டி.எம். மையமாகும். மற்ற 3 ஏ.டி.எம் மையங்களும் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையங்களாகும்.

    கடந்த 12-ந்தேதி அன்று இரவோடு இரவாக பணத்தை மூட்டையாக கட்டிக் கொண்டு தப்பிய கொள்ளையர்கள் தமிழக எல்லையை தாண்டி தலைமறைவானார்கள்.

    இதைத் தொடர்ந்து வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் கொள்ளை கும்பலை பிடிக்க நேரடியாக களம் இறங்கினார். சென்னையில் இருந்து உடனடியாக புறப்பட்டு திருவண்ணாமலைக்கு விரைந்து சென்ற அவர் அங்கு டி.ஐ.ஜி. முத்துசாமி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். போலீஸ் சூப்பிரண்டுகள் கார்த்திகேயன் (திருவண்ணாமலை), பால கிருஷ்ணன் (திருப்பத்தூர்), ராஜேஷ்கண்ணன் (வேலூர்), செபாஸ் கல்யாண் (திருவள்ளூர்), கிரண்ஸ்ருதி (ராணிப் பேட்டை) ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தனித்தனியாக பிரிந்து கொள்ளையர்களை பிடிக்க வெவ்வேறு பிரிவுகளாக பிரிந்து செயல்பட்டனர்.

    இவர்களில் திருவண்ணாமலை சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படையினர் அரியானா மாநிலத்துக்கு விரைந்து சென்றனர்.

    ஏ.டி.எம். கொள்ளை நடந்த விதம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அரியானா மாநிலத்தை சேர்ந்த முகமது ஆரீப் என்கிற கொள்ளை கும்பல் தலைவன் தலைமையில் சுமார் 6 கொள்ளையர்கள் ஏ.டி.எம்.களை குறி வைத்து கைவரிசை காட்டியது வெட்ட வெளிச்சமானது.

    "மேவாட்" கொள்ளையர்கள் என்று அழைக்கப்படும் இந்த கொள்ளை கும்பல் மிகவும் துணிச்சலாக சினிமா காட்சிகளையே மிஞ்சும் வகையில் பரபரப்பாக கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றுவதில் கை தேர்ந்தவர்கள் ஆவர்.

    இவர்களை பற்றி ஐ.ஜி. கண்ணன் ஏற்கனவே நன்கு தெரிந்து வைத்திருந்ததால் உடனடியாக அவரது மேற்பார்வையிலேயே விசாரணை முடுக்கி விடப்பட்டு கொள்ளையர்கள் அடை யாளம் காணப்பட்டனர்.

    இதன்படி முகமது ஆரிப் தலைமையிலான கொள்ளையர்கள் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் முகமது ஆரிப்பும், அவனது கூட்டாளியுமான ஆசாத் ஆகிய இருவரும் அரியானாவில் பதுங்கி இருக்குமிடம் தெரிந்தது. இதைத் தொடர்ந்தது அரியானா மாநில போலீசாரின் உதவியுடன் தனிப்படை போலீசார் இருவரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கொள்ளையர்கள் பயன்படுத்திய வாகனமும் கைப்பற்றப்பட்டது.

    ஏ.டி.எம். கொள்ளை தொடர்பாக திருவண்ணாமலை போலீசார் வெளியிட்ட செய்தி குறிப்பில் ரூ.72 லட்சத்து 79 ஆயிரம் பணம் கொள்ளை போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.3 லட்சம் பணம் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் மீதமுள்ள சுமார் 70 லட்சம் ரூபாய் எங்கே? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

    கொள்ளையடித்த பணத்தை கொள்ளையர்கள் பங்கு போட்டுக் கொண்டு தனித்தனியாக பிரிந்து சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் 2 பேர் மட்டுமே பிடிபட்டு உள்ள நிலையில் மற்றவர்களை பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளது.

    ரூ.75 லட்சம் பணத்தை கொள்ளையர்கள் லாரியில் கடத்திச் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை மொத்தமாக பறிமுதல் செய்ய போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் அரியானாவில் முகாமிட்டு விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    ஏ.டி.எம்.களில் கை வரிசை காட்டுவதற்காக அரியானா மாநிலம் நூ மாவட்டம் சோனாரி கிராமத்தைச் சேர்ந்த 35 வயது நிரம்பிய கொள்ளையன் முகமது ஆரிப் தனது கூட்டாளிகளுடன் அங்கிருந்து புறப்பட்டு கர்நாடக மாநிலத்துக்கு சென்றுள்ளான். அங்கு கோலார் பகுதியில் லாட்ஜில் அறை எடுத்து அனைவரும் தங்கி உள்ளனர்.

    முகமது ஆரிப்பும், கூட்டாளிகளும் திருவண்ணாமலைக்கு சென்று ஒத்திகை பார்த்துள்ளனர். இதன் பின்னரே கடந்த 12-ந்தேதி அதிகாலையில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்கள். இருப்பினும் போலீஸ் படை துரிதமாக செயல்பட்டு கொள்ளை கும்பலை கூண்டோடு பிடித்துள்ளனர். இதை தொடர்ந்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு தனிப்படை போலீசாரை பாராட்டியுள்ளார்.

    இதற்கிடையே அரியானாவில் பிடிபட்ட முகமது ஆரிப், ஆசாத் இருவரையும் போலீசார் நேற்று இரவு விமானத்தில் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

    பின்னர் திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்ற போலீசார் கொள்ளையர்கள் இருவரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். இருவரையும் மார்ச் 3-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதன்படி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கொள்ளை கும்பலுக்கு உதவி செய்தவர்கள் யார்-யார்? என்பதை கண்டு பிடித்து அவர்களையும் விசாரணை வளையத்துக்குள் போலீசார் கொண்டு வந்துள்ளனர்.

    கொள்ளை நடந்த 6 நாட்களில் ஏ.டி.எம். கொள்ளையர்களை மடக்கி பிடித்துள்ள தனிப்படை போலீசாரை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

    • கொள்ளையடித்த பணத்தை கொள்ளையர்கள் பங்கு போட்டுக் கொண்டு தனித்தனியாக பிரிந்து சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
    • கடந்த 12-ந்தேதி அன்று இரவோடு இரவாக பணத்தை மூட்டையாக கட்டிக் கொண்டு தப்பிய கொள்ளையர்கள் தமிழக எல்லையை தாண்டி தலைமறைவானார்கள்.

    சென்னை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 11-ந்தேதி நள்ளிரவில் 4 ஏ.டி.எம். மையங்களை குறி வைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    திருவண்ணாமலை நகர பகுதியில் 2 ஏ.டி.எம். மையங்கள், போளூரில் ஒரு ஏ.டி.எம். மையம், கலசப்பாக்கத்தில் இன்னொரு ஏ.டி.எம். மையம் என 4 ஏ.டி.எம். மையங்களை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ. 73 லட்சம் பணத்தை கொள்ளையர்கள் சுருட்டிக் கொண்டு தப்பி ஓடினார்கள். இதில் கலசப்பாக்கம் ஏ.டி.எம். மையம் "ஒன் இண்டியர்" ஏ.டி.எம். மையமாகும். மற்ற 3 ஏ.டி.எம் மையங்களும் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையங்களாகும்.

    கடந்த 12-ந்தேதி அன்று இரவோடு இரவாக பணத்தை மூட்டையாக கட்டிக் கொண்டு தப்பிய கொள்ளையர்கள் தமிழக எல்லையை தாண்டி தலைமறைவானார்கள்.

    இதைத் தொடர்ந்து வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் கொள்ளை கும்பலை பிடிக்க நேரடியாக களம் இறங்கினார். சென்னையில் இருந்து உடனடியாக புறப்பட்டு திருவண்ணாமலைக்கு விரைந்து சென்ற அவர் அங்கு டி.ஐ.ஜி. முத்துசாமி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசன நடத்தினார். போலீஸ் சூப்பிரண்டுகள் காரத்திகேயன் (திருவண்ணாமலை), பால கிருஷ்ணன் (திருப்பத்தூர்), ராஜேஷ்கண்ணன் (வேலூர்), செபாஸ் கல்யாண் (திருவள்ளூர்), கிரண்ஸ்ருதி (ராணிப் பேட்டை) ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தனித்தனியாக பிரிந்து கொள்ளையர்களை பிடிக்க வெவ்வேறு பிரிவுகளாக பிரிந்து செயல்பட்ட னர்.

    இவர்களில் திருவண்ணாமலை சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படையினர் அரியானா மாநிலத்துக்கு விரைந்து சென்றனர்.

    ஏ.டி.எம். கொள்ளை நடந்த விதம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அரியானா மாநிலத்தை சேர்ந்த முகமது ஆரீப் என்கிற கொள்ளை கும்பல் தலைவன் தலைமையில் சுமார் 6 கொள்ளையர்கள் ஏ.டி.எம்.களை குறி வைத்து கைவரிசை காட்டியது வெட்ட வெளிச்சமானது.

    "மேவாட்" கொள்ளையர்கள் என்று அழைக்கப்படும் இந்த கொள்ளை கும்பல் மிகவும் துணிச்சலாக சினிமா காட்சிகளையே மிஞ்சும் கையில் பரபரப்பாக கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றுவதில் கை தேர்ந்தவர்கள் ஆவர்.

    இவர்களை பற்றி ஐ.ஜி. கண்ணன் ஏற்கனவே நன்கு தெரிந்து வைத்திருந்ததால் உடனடியாக அவரது மேற்பார்வையிலேயே விசாரணை முடுக்கி விடப்பட்டு கொள்ளையர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

    இதன்படி முகமது ஆரிப் தலைமையிலான கொள்ளையர்கள் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் முகமது ஆரிப்பும், அவனது கூட்டாளியுமான ஆசாத் ஆகிய இருவரும் அரியானாவில் பதுங்கி இருக்குமிடம் தெரிந்தது. இதைத் தொடர்ந்தது அரியானா மாநில போலீசாரின் உதவியுடன் தனிப்படை போலீசார் இருவரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கொள்ளையர்கள் பயன்படுத்திய வாகனமும் கைப்பற்றப்பட்டது.

    ஏ.டி.எம். கொள்ளை தொடர்பாக திருவண்ணாமலை போலீசார் வெளியிட்ட செய்தி குறிப்பில் ரூ.72 லட்சத்து 79 ஆயிரம் பணம் கொள்ளை போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.3 லட்சம் பணம் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் மீதமுள்ள சுமார் 70 லட்சம் ரூபாய் எங்கே? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

    கொள்ளையடித்த பணத்தை கொள்ளையர்கள் பங்கு போட்டுக் கொண்டு தனித்தனியாக பிரிந்து சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் 2 பேர் மட்டுமே பிடிபட்டு உள்ள நிலையில் மற்றவர்களை பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளது.

    ஏ.டி.எம்.களில் கை வரிசை காட்டுவதற்காக அரியானா மாநிலம் நூ மாவ்டம் சோனாரி கிராமத்தைச் சேர்ந்த 35 வயது நிரம்பிய கொள்ளையன் முகமது ஆரிப் தனது கூட்டாளிகளுடன் அங்கிருந்து புறப்பட்டு கர்நாடக மாநிலத்துக்கு சென்றுள்ளான். அங்கு கோலார் பகுதியில் லாட்ஜில் அறை எடுத்து அனைவரும் தங்கி உள்ளனர்.

    முகமது ஆரிப்பும், கூட்டாளிகளும் திருவண்ணாமலைக்கு சென்று ஒத்திகை பார்த்துள்ளனர். இதன் பின்னரே கடந்த 12-ந்தேதி அதிகாலையில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்க்ள. இருப்பினும் போலீஸ் படை துரிதமாக செயல்பட்டு கொள்ளை கும்பலை கூண்டோடு பிடித்துள்ளனர். இதை தொடர்ந்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு தனிப்படை போலீசாரை பாராட்டியுள்ளார்

    இதற்கிடையே அரியானாவில் பிடிபட்ட முகமது ஆரிப், ஆசாத் இருவரையும் போலீசார் நேற்று இரவு விமானத்தில் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

    பின்னர் திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்ற போலீசார் கொள்ளையர்கள் இருவரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இன்று காலை திரும்பவும் கோர்ட்டில் நீதிபதி முன்பு ஏடிஎம் கொள்ளையர்கள் 2 பேரை ஆஜர்படுத்தப்பட்டனர்.

    பின்னர் ஏடிஎம் கொள்ளையர்கள் 2 பேரை 13 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    கொள்ளை கும்பலுக்கு உதவி செய்தவர்கள் யார்-யார்? என்பதை கண்டுபிடித்து அவர்களையும் விசாரணைக்கு வளையத்துக்குள் போலீசார் கொண்டு வந்துள்ளனர்.

    • கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் பணத்தை மீட்டுள்ளனர்.
    • அரியானா, குஜராத் மாநிலங்களில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ஆம் தேதி அதிகாலை 4 ஏடிஎம் எந்திரங்களை உடைத்து ரூ.75 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளைக் கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிரமாக தேடி வந்தனர். விசாரணையில் கொள்ளையர்கள் அரியானாவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

    திருவண்ணாமலையில் ஏ.டி.எம்.களை நோட்டமிட்டு கைவரிசை காட்டிய அவர்கள், பெங்களூர் சென்று அங்கிருந்து விமானம் மூலம் அரியானா சென்றுள்ளனர். அவர்களுக்கு மற்ற மாநிலத்தவர்கள் உதவி செய்துள்ளனர். இது தொடர்பாக கர்நாடகா, அரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சிலரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் அரியானா சென்ற தனிப்படை போலீசார், அங்கு கொள்ளைக் கும்பல் தலைவன் உள்ளிட்ட 2 பேரை கைது செய்துள்ளனர். கொள்ளை கும்பல் தலைவன் முகமது ஆரிப் (வயது 35), ஆஜாத் (வயது 37) ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் பணத்தை மீட்டுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் விமானம் மூலம் தமிழகத்திற்கு அழைத்து வருகிறார்கள்.

    ஏற்கனவே அரியானா, குஜராத் மாநிலங்களில் தனிப்படை போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது கைது செய்யப்பட்டவர்களின் கூட்டாளிகள் 6 பேர் இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அவர்களை அரியானா மற்றும் குஜராத்தில் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • திருவண்ணாமலை ஏ.டி.எம்.கொள்ளையில் ஈடுபட்ட ஆரிப் என்ற அரியானா வாலிபர் பெங்களூர் கே.ஜி.எப்.பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • அரியானா போலீசார் உதவியுடன் கொள்ளை கும்பலை நெருங்கிவிட்டோம்.

    விமானத்தில் தப்பிய ஏ.டி.எம். கொள்ளை கும்பல் மேலும் 10 பேரிடம் விசாரணை

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வடமாநில கும்பல் திருவண்ணாமலை நகர பகுதியில் தேனிமலை, மாரியம்மன் கோவில் தெருவில் 2 எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்., மற்றும் போளூரில் எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். ஒன்றிலும், கலசப்பாக்கத்தில் ஒன்இந்தியா ஏ.டி.எம் மையம் என 4 ஏ.டி.எம் எந்திரங்களை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இது தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து நடத்திய தேடுதல் வேட்டையில், அரியானா வாலிபர் ஒருவரை போலீசார் இன்று கைது செய்தனர்.

    மேலும், கொள்ளையர்கள் அனைவரும் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

    இதுதொடர்பாக ஐ.ஜி.கண்ணன் திருவண்ணாமலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    திருவண்ணாமலை ஏ.டி.எம்.கொள்ளையில் ஈடுபட்ட ஆரிப் என்ற அரியானா வாலிபர் பெங்களூர் கே.ஜி.எப்.பில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு லாட்ஜில் தங்க அறை கொடுத்த மேலாளரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    திருவண்ணாமலையில் ஏ.டி.எம்.களை கொள்ளை கும்பல் நோட்டமிட்டு கைவரிசை காட்டியுள்ளனர். இங்கு கொள்ளையடித்து விட்டு பெங்களூர் சென்று விமானம் மூலம் அரியானா சென்றுள்ளனர்.

    இது தொடர்பாக கர்நாடகாவை சேர்ந்த 2 பேர், அரியானாவை சேர்ந்த 2 பேர், குஜராத்தை சேர்ந்த 6 பேர் என 10 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

    கொள்ளையில் ஈடுபட்டது அரியானா கும்பல் தான். மற்ற மாநிலத்தவர்கள் அவர்களுக்கு உதவியுள்ளனர். அரியானா போலீசார் உதவியுடன் கொள்ளை கும்பலை நெருங்கிவிட்டோம். விரைவில் பிடிபடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏ.டி.எம். கொள்ளையர்களுக்கு கர்நாடக மாநிலம் கே.ஜி.எப். நகரில் ஏஜெண்டு ஒருவர் விடுதியில் அறை எடுத்து தங்க வைத்துள்ளார்.
    • கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்துள்ளதால் விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வடமாநில கும்பல் திருவண்ணாமலை நகர பகுதியில் தேனிமலை, மாரியம்மன் கோவில் தெருவில் 2 எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்., மற்றும் போளூரில் எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். ஒன்றிலும், கலசப்பாக்கத்தில் ஒன்இந்தியா ஏ.டி.எம் மையம் என 4 ஏ.டி.எம் எந்திரங்களை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இது தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    கொள்ளை கும்பல் தேவிகாபுரம், ஆரணி, ஆற்காடு, ராணிப்பேட்டை, பொன்னை வழியாக ஆந்திர மாநிலம் சித்தூர் சென்றுள்ளனர்.

    வழியில் உள்ள எந்த சுங்கச்சாவடியிலும் இவர்களது வாகனம் கடக்காமல் இருந்துள்ளது. சுங்கச்சாவடியை தவிர்த்தே கொள்ளை கும்பல் தப்பியுள்ளனர்.

    கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் அரியானா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் யூகித்தனர். முதற்கட்டமாக தனிப்படை போலீசார் அரியானாவிற்கும், ஆந்திராவிற்கும் சென்றனர்.

    இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்தவர்கள் கர்நாடக மாநிலம் கே.ஜி.எப்.பில் அறை எடுத்து தங்கியிருந்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று கே.ஜி.எப்.பிற்கு விரைந்து சென்றனர்.

    ஏ.டி.எம். கொள்ளையர்களுக்கு கர்நாடக மாநிலம் கே.ஜி.எப். நகரில் ஏஜெண்டு ஒருவர் விடுதியில் அறை எடுத்து தங்க வைத்துள்ளார். அவர்களுக்கு அறை எடுத்து கொடுத்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவல் அடிப்படையில் அரியானா வாலிபர் ஒருவரை போலீசார் இன்று கைது செய்தனர்.

    முதல் கட்ட விசாரணையில் அவரது பெயர் ஆரிப் என தெரியவந்துள்ளது.

    அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அங்கு தங்கியிருந்த கும்பல் போலீசார் நெருங்கியதை அறிந்து வட மாநிலத்திற்கு தப்பி சென்றனர். அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்துள்ளதால் விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஏ.டி.எம். கொள்ளையில் சந்தேகப்படும்படியான நபர்கள் மற்றும் உதவியவர்கள் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் கொள்ளை கும்பல் பிடிபடுவார்கள் என்றனர்.

    • கொள்ளை கும்பல் தேவிகாபுரம், ஆரணி, ஆற்காடு, ராணிப்பேட்டை, பொன்னை வழியாக ஆந்திர மாநிலம் சித்தூர் சென்றுள்ளனர்.
    • கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் அரியானா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் யூகித்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வடமாநில கும்பல் தேசிய மயமாக்கப்பட்ட 3 வங்கி ஏ.டி.எம்., ஒரு தனியார் ஏ.டி.எம் மையம் என 4 ஏ.டி.எம் எந்திரங்களை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இது தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    ''கொள்ளை கும்பல் ஏ.டி.எம் மையங்களை முன்கூட்டியே நோட்டமிட்ட பிறகே திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

    ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட டாடா சுமோ கோல்ட் வாகனத்தில் முகத்தை மூடியபடி மங்கி குல்லா அணிந்த 6 பேர் கும்பல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

    ஒவ்வொரு மையத்திலும் ஷட்டரை இறக்கிவிட்டு காஸ் வெல்டிங் மூலம் 20 நிமிடங்களில் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

    கொள்ளை கும்பல் தேவிகாபுரம், ஆரணி, ஆற்காடு, ராணிப்பேட்டை, பொன்னை வழியாக ஆந்திர மாநிலம் சித்தூர் சென்றுள்ளனர்.

    வழியில் உள்ள எந்த சுங்கச்சாவடியிலும் இவர்களது வாகனம் கடக்காமல் இருந்துள்ளது. சுங்கச்சாவடியை தவிர்த்தே கொள்ளை கும்பல் தப்பியுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் திருவண்ணாமலை நகரம் மற்றும் நகரை இணைக்கும் 9 முக்கிய சாலை பகுதிகளிலும், மாவட்டத்தின் புறவழிச்சாலை பகுதிகளிலும், சுங்கச்சாவடிகளிலும் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்து விசாரணை நடத்தினர்.

    கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் அரியானா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் யூகித்தனர். முதற்கட்டமாக தனிப்படை போலீசார் அரியானாவிற்கும், ஆந்திராவிற்கும் சென்றனர்.

    இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்தவர்கள் கர்நாடக மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று கர்நாடக மாநிலத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு போலீசார் கொள்ளை கும்பலை நெருங்கி விட்டதை அறிந்த அந்த கும்பல் அங்கிருந்து வட மாநிலத்திற்கு தப்பி சென்று விட்டனர்.

    ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்த கும்பலை சேர்ந்தவர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

    வட மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளை கும்பல் ஒன்று கர்நாடக மாநிலத்தில் நிரந்தரமாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை வந்தனர்.

    திருவண்ணாமலை நகரப் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கினர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியாக இருக்கும் ஏடிஎம்களை நோட்டமிட்டனர். பின்னர் கொள்ளையடிக்க கூடிய ஏடிஎம் மையங்களை அவர்கள் தேர்வு செய்தனர்.

    கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு முன்னதாக பணத்தை கொள்ளையடித்து விட்டு எந்த வழியாக செல்வது என ஆய்வு செய்தனர். சுங்கச்சாவடி இல்லாத பாதை எது, கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத சாலைகள் எது என்பதை நன்கு கண்டறிந்து துல்லியமாக திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு தப்பி உள்ளனர்.

    ஓரிரு நாட்களில் கொள்ளை கும்பல் பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

    • போலீசார் அங்கு விரைந்து சென்று காரை சோதனை நடத்தினர். கார் கேரள பதிவு எண்ணை கொண்டுள்ளது.
    • கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, சீட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.காரில் மஞ்சள் பொடி தூவி உள்ளனர்.

    திருப்பத்தூர்:

    திருவண்ணாமலையில் 4 ஏ.டி.எம்.களை உடைத்து வடமாநில கும்பல் ரூ.75 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை திருப்பத்தூரில் இருந்து சேலம் செல்லும் ரோட்டில் கொரட்டியில் மர்ம கார் ஒன்று சந்தேகம் அளிக்கும் வகையில் நீண்ட நேரம் நின்றது.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று காரை சோதனை நடத்தினர். கார் கேரள பதிவு எண்ணை கொண்டுள்ளது.

    கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, சீட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.காரில் மஞ்சள் பொடி தூவி உள்ளனர்.

    ஏ.டி.எம். கொள்ளையர்களை போலீசார் தேடிவரும் நிலையில் மர்ம கார் சிக்கியுள்ளதால் ஏ.டி.எம். கொள்ளையில் தொடர்புடைய கும்பல் வந்த காரா? என்ற கோணத்தில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக கேரள வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம். மையங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
    • வேலூர் மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள், நகை அடகு கடை உள்ளிட்டவை குறித்து தீவிர சோதனை நடத்தப்பட்டது.

    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த ஏ.டி.எம். கொள்ளை எதிரொலியாக ஏ.டி.எம். மையங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் 10-வது தெரு, திருவண்ணாமலை தேனி மலை பகுதி, திருவண்ணாமலை-வேலூர் சாலை, கலசப்பாக்கம், போளுர் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏ.டி.எம். எந்திரங்களை வெல்டிங் மெஷினால் உடைத்து அதிலிருந்த ரூ.75 லட்சத்தை நேற்று முன்தினம் கொள்ளை கும்பல் கொள்ளையடித்து சென்றது.

    இதுகுறித்து தகவலறிந்த வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன், டி.ஐ.ஜி. முத்துசாமி, எஸ்.பி.க்கள் கார்த்திகேயன், ராஜேஷ்கண்ணன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் ஏ.டி.எம். கொள்ளை எதிரொலியாக தமிழகம் முழுவதும் சோதனை சாவடிகள், மாவட்ட, மாநில எல்லைகளில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம். மையங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    திருவண்ணாமலையில் ஏடிஎம் மையங்களில் கொள்ளை எதிரொலியாக வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏடிஎம் மையங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    இதில் காவலாளிகள் உள்ள ஏ.டி.எம். மையங்கள் எத்தனை உள்ளது? காவலாளிகள் இல்லாத ஏ.டி.எம். மையங்கள் எத்தனை என இருபிரிவாக விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    வேலூர் மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள், நகை அடகு கடை உள்ளிட்டவை குறித்து தீவிர சோதனை நடத்தப்பட்டது.

    மேலும் விரைவில் ஏடிஎம் மையங்களில் உள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து வங்கி அதிகாரிகளுடன் எஸ்பி ஆலோசனை நடத்த உள்ளார் என்றனர்.

    • கியாஸ் வெல்டிங் மூலம் ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து நவீன முறையில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் போலீசாருக்கு பெரிய சவாலை உண்டாக்கி உள்ளது.
    • ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை போன்ற அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் முகத்தை தெளிவாக காட்டும் வகையிலான நவீன கேமராக்களை பொருத்த வேண்டும்.

    சென்னை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வங்கி ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.72 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது.

    கியாஸ் வெல்டிங் மூலம் ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து நவீன முறையில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் போலீசாருக்கு பெரிய சவாலை உண்டாக்கி உள்ளது.

    அரியானா போன்ற வட மாநிலங்களில் இருந்து வந்த கொள்ளையர்கள் இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் வங்கி ஏ.டி.எம். மையங்களில் நவீன பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்துவது குறித்து சென்னையில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் தமிழ்நாட்டில் செயல்படும் 50 வங்கிகளின் அதிகாரிகள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில் 3 முக்கிய அறிவுரைகள் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த அறிவுரைகளை உடனடியாக செயல்படுத்துமாறு வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

    அந்த அறிவுரைகள் பின்வருமாறு:-

    * அனைத்து ஏ.டி.எம். மையங்களையும் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுடன் இணைத்து போலீஸ் நிலையங்களில் அலாரம் கருவிகள் பொருத்த வேண்டும். ஏ.டி.எம். மையங்களில் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் உடனே அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கருவியில் அபாய சத்தம் ஒலிக்கும். எனவே போலீசார் உடனடியாக அந்த ஏ.டி.எம். மையத்துக்கு சென்று நடவடிக்கை எடுப்பார்கள்.

    * ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை போன்ற அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் முகத்தை தெளிவாக காட்டும் வகையிலான நவீன கேமராக்களை பொருத்த வேண்டும்.

    * இவ்வாறு பொருத்தப்படும் கேமராக்கள் வெளிப்படையாக தெரியாமல் ரகசியமாக இருக்க வேண்டும்.

    மேற்கண்டவாறு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

    இதுதொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறும்போது, "மேற்கண்ட பாதுகாப்பு வசதிகளை ஏ.டி.எம். மையங்களில் செயல்படுத்துவதற்கு வங்கிகளுக்கு பெரியளவில் செலவுகள் ஏற்படாது. எனவே இந்த 3 அறிவுரைகளையும் உடனடியாக செயல்படுத்த வங்கி அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

    • 4 இடங்களில் உள்ள ஏடிஎம் மையங்களில் இருந்து ரூ.75 லட்சம் பணம் கொள்ளை போனது.
    • தனிப்படை போலீசார் ஆந்திரா மற்றும் அரியானா மாநிலங்களுக்கு சென்றுள்ளனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், தேனிமலை பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், போளூர் பஸ் நிலையம் எதிரே உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், கலசப்பாக்கம் அண்ணாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள இண்டிகா ஏடிஎம் மையம் ஆகிய 4 இடங்களில் ஏடிஎம் மையங்களை உடைத்து மர்ம கும்பல் பணத்தை கொள்ளையடித்தனர். இந்த 4  ஏடிஎம் மையங்களில் இருந்தும் ரூ.75 லட்சம் பணம் கொள்ளை போனது.

    தமிழகத்தையே உலுக்கிய இந்த கொள்ளை தொடர்பாக, வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் டி.ஐ.ஜி முத்துசாமி போலீஸ் சூப்பிரண்டுகள் கார்த்திகேயன், ராஜேஷ் கண்ணன், பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் திருவண்ணாமலை முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திரா மற்றும் அரியானா மாநிலங்களுக்கு சென்றுள்ளனர்.

    இந்நிலையில், திருவண்ணாமலையில் இரவு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபடாத 6 காவல்துறையினரை மாவட்ட ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து வடக்கு மண்டல ஐஜி கண்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    ×