search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "75 Lakh Money Robbery"

    • 4 இடங்களில் உள்ள ஏடிஎம் மையங்களில் இருந்து ரூ.75 லட்சம் பணம் கொள்ளை போனது.
    • தனிப்படை போலீசார் ஆந்திரா மற்றும் அரியானா மாநிலங்களுக்கு சென்றுள்ளனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், தேனிமலை பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், போளூர் பஸ் நிலையம் எதிரே உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், கலசப்பாக்கம் அண்ணாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள இண்டிகா ஏடிஎம் மையம் ஆகிய 4 இடங்களில் ஏடிஎம் மையங்களை உடைத்து மர்ம கும்பல் பணத்தை கொள்ளையடித்தனர். இந்த 4  ஏடிஎம் மையங்களில் இருந்தும் ரூ.75 லட்சம் பணம் கொள்ளை போனது.

    தமிழகத்தையே உலுக்கிய இந்த கொள்ளை தொடர்பாக, வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் டி.ஐ.ஜி முத்துசாமி போலீஸ் சூப்பிரண்டுகள் கார்த்திகேயன், ராஜேஷ் கண்ணன், பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் திருவண்ணாமலை முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திரா மற்றும் அரியானா மாநிலங்களுக்கு சென்றுள்ளனர்.

    இந்நிலையில், திருவண்ணாமலையில் இரவு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபடாத 6 காவல்துறையினரை மாவட்ட ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து வடக்கு மண்டல ஐஜி கண்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • ஏடிஎம் எந்திரத்தை முழுமையாக கையாளத் தெரிந்தவர்கள் தான் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
    • கொள்ளை சம்பந்தமாக பல தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், தேனிமலை பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், போளூர் பஸ் நிலையம் எதிரே உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், கலசப்பாக்கம் அண்ணாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள இண்டிகா ஏடிஎம் மையம் ஆகிய 4 இடங்களில் ஏடிஎம் மையங்களை உடைத்து மர்ம கும்பல் பணத்தை கொள்ளையடித்தனர்.

    இந்த 4 இடங்களில் உள்ள ஏடிஎம் மையங்களில் இருந்து ரூ.75 லட்சம் பணம் கொள்ளை போனது.

    நள்ளிரவில் ஏடிஎம் மையங்களின் ஷட்டர்களை மூடி கியாஸ் வெல்டிங் மூலம் மிஷின்கள் உடைக்கப்பட்டுள்ளன. முன்னதாக அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை கியாஸ் வெல்டிங் மூலம் கும்பல் எரித்துள்ளனர். அதை தொடர்ந்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு ஏடிஎம் எந்திரங்களுக்கு தீ வைத்து சென்று விட்டனர்.

    ஒரு ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க 13 நிமிடங்கள் மட்டுமே கொள்ளையர்கள் எடுத்துக் கொண்டுள்ளனர்.

    போளூர் ஏ.டி.எம். மையம் அருகே உள்ள கேமராக்களை ஆய்வு செய்த போது அதிகாலை 3.50 மணிக்கு காரில் தொப்பி அணிந்தபடி 4 பேர் கும்பல் வந்ததும் அடுத்த 13 நிமிடத்தில் அவர்கள் கொள்ளையை முடித்து விட்டு திரும்பி சென்றதும் பதிவாகி உள்ளது.

    அவர்கள் ஏடிஎம் கொள்ளையில் கைதேர்ந்தவர்கள் என்பது நிரூபணமாகி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில் ஒரே நாளில் ஒரே விதமாக கொள்ளை நடந்திருப்பது போலீசாரை அதிர வைத்துள்ளது.

    கொள்ளை நடந்த ஏடிஎம் மையங்களை போலீஸ் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் டி.ஐ.ஜி முத்துசாமி போலீஸ் சூப்பிரண்டுகள் கார்த்திகேயன், ராஜேஷ் கண்ணன், பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் திருவண்ணாமலை முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏடிஎம் எந்திரத்தை முழுமையாக கையாளத் தெரிந்தவர்கள் தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை சம்பந்தமாக பல தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    கும்பலை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியாக ஆந்திராவுக்கு கும்பல் தப்பி செல்ல வாய்ப்பு உள்ளது.

    இதனை தொடர்ந்து ஆந்திர எல்லைகளில் போலீசார் நேற்று காலை முதல் விடிய விடிய சோதனை நடத்தினர். தொடர்ந்து சோதனை நீடித்து வருகிறது.

    இதேபோல தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திரா கர்நாடக மாநில எல்லைகளில் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகிறது. வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

    இது போன்ற கொள்ளையில் அனுபவம் வாய்ந்த அரியானா மாநிலத்தைச் சேர்ந்த கும்பல்கள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஒரு தனிப்படையினர் அரியானாவுக்கு விரைந்துள்ளனர். கொள்ளையில் ஈடுபட்ட கும்பல்களின் செல்போன் எண்கள் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அவர்கள் செல்போன்கள் அனைத்தும் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டுள்ளது.

    இதனால் கொள்ளை கும்பலை போலீசார் நெருங்கியுள்ளனர். இதேபோல் மற்றொரு தனிப்படை ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு சென்றுள்ளனர். அவர்கள் அங்கு தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    கொள்ளை கும்பல் ஏ.டி.எம். தொழில் நுட்பம் தெரிந்தவர்களுடன் கூட்டு சேர்ந்து கைவரிசை காட்டியுள்ளனர். அவர்கள் சோதனை சாவடிகள் வழியாக செல்லாமல் மாற்று வழியில் தப்பி சென்றுள்ளனர். கொள்ளை நடந்த 4 ஏ.டி.எம்.களும் ஒரே மாதிரியானவை.

    ஏ.டி.எம்.களில் பல்வேறு மாடல்கள் உள்ளது. அதில் சில ஏ.டி.எம்.களில் வெல்டிங் வைத்து பணத்தை எடுக்கும் போது பணத்தில் தீ பற்றி விடும்.

    ஒரு சில ஏ.டி.எம்.களில் பணம் உள்வாங்கி இருக்கும். அந்த ஏ.டி.எம்.களில் வெல்டிங் வைத்தால் பணத்தில் தீ பற்றாது. இதே பாணியில் தான் கொள்ளை கும்பல் இங்கு கைவரிசை காட்டியுள்ளனர்.

    கொள்ளை கும்பலை பிடிக்க டி.ஜி.பி. சைலேந்திர பாபு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஐ.ஜி. கண்ணன் நேரடியாக களத்தில் இறங்கி கொள்ளை கும்பலை பிடிக்க விசாரணையை முடுக்கிவிட்டுள்ளார்.

    இன்று திருவண்ணாமலையில் ஐ.ஜி. கண்ணன் தலைமையில் டி.ஐ.ஜி. முத்துசாமி, 3 எஸ்.பி.க்கள் தலைமையில் கொள்ளை கும்பலை பிடிப்பதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு கொள்ளை கும்பல்கள் குறித்த பல்வேறு தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    கொள்ளை சம்பவம் குறித்து அனைத்து மாநில டி.ஜி.பி.களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவர்களும் ஆய்வு செய்து அந்தந்த மாநிலங்களில் சோதனையை முடுக்கிவிட்டுள்ளனர்.

    இது தொடர்பாக டி.ஐ.ஜி முத்துசாமி கூறுகையில்:-

    கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றார். 

    ×