search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்எல்சி போராட்டம்"

    • 26 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
    • கல் வீச்சு வழக்குகளில் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    நெய்வேலி போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை மற்றும் கல்வீச்சு சம்பவங்கள் தொடர்பாக 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    வடக்கு மண்டலத்தில் பல்வேறு காவல் நிலைய எல்லைகளில் சுமார் 90 இடங்களில் மறியல் போராட்டங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நெய்வேலி நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து ஆகாஷ் உள்ளிட்ட 26 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

    2 இளம்சிறார்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். பா.ம.க. தலைவர் கைதை தொடர்ந்து 4 இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றது. கடந்த 26, 28-ந்தேதிகளில் பதிவு செய்யப்பட்ட கல் வீச்சு வழக்குகளில் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    • என்.எல்.சி. நிர்வாகம் விளை நிலத்தில் பயிர்களை அழித்தது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
    • பயிர் உயிருக்கு சமம். அறுவடை காலம் வரை காத்திருந்திருக்கலாம்.

    சிதம்பரம்:

    புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தார். அங்கு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தீட்சிதர்கள் சார்பில் ஜெராம தீட்சிதர் வரவேற்பு அளித்து பிரசாதம் வழங்கினார். பின்னர் அவர் தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதியிலும் தரிசனம் செய்தார்.

    அதனை தொடர்ந்து தில்லை காளியம்மன் கோவிலுக்கு சென்று அங்கும் அம்மனை வழிபட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காரைக்காலில் நிர்வாக ரீதியான ஆலோசனை கூட்டத்திற்கு செல்லும் வழியில் சிதம்பரம் நட ராஜர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தேன். ஆன்மிகம் இல்லை என்றால் தமிழ் இல்லை. தமிழை வளர்த்தது ஆன்மிகம்தான்.

    என்.எல்.சி. நிர்வாகம் விளை நிலத்தில் பயிர்களை அழித்தது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. பயிர் உயிருக்கு சமம். அறுவடை காலம் வரை காத்திருந்திருக்கலாம். ஆனால், என்.எல்.சி. நிர்வாகம் ஏற்கனவே நிலத்தை கையகப்படுத்தி விட்டோம் என்று கூறுகிறது. இங்கு இடைவெளி எப்படி வந்தது? என்பது தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கைது செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
    • சட்டத்தை மீறிய 2 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் என்எல்சி நிர்வாகம் விரிவாக்கப் பணிகளை தொடங்கி உள்ளது. வளையமாதேவியில் பரவனாறு வாய்க்கால் அமைக்கும் பணியை என்.எல்.சி. நிறுவனம் தொடங்கியது. இதற்காக அங்கு பயிரிடப்பட்ட நெற் பயிர்களை பொக்லைன் எந்திரம் மூலம் அழித்து பணிகளை தொடங்கினார்கள். இதனை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

    பயிர்கள் அழிக்கப்படுவதை கண்டித்தும், நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்தும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நேற்று என்எல்சி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

    அன்புமணி உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்ட நிலையில், போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் தாக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில், பாமக போராட்டம் மற்றும் நடவடிக்கை குறித்து கடலூர் மாவட்ட காவல்துறை விரிவான விளக்கம் அளித்துள்ளது. என்.எல்.சி. முற்றுகை தொடர்பாக 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 26 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த 26 மற்றும் 28ம் தேதிகளில் பதிவு செய்யப்பட்ட கல்வீச்சு வழக்குகளில் 11 பேர் கைது செய்யப்பட்டதாகவும், சட்டத்தை மீறிய 2 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

    சுமார் 900 சாலை மறியல் போராட்டங்கள் நடத்த முயன்ற 2000 பாமகவினர் தடுப்பு நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் கடலூர் காவல்துறை கூறியுள்ளது.

    ×