என் மலர்
உள்ளூர் செய்திகள்

இதுவரை 37 பேர் சிறையில் அடைப்பு: நெய்வேலி கலவரம்-93 வழக்குகள் பதிவு
- 26 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
- கல் வீச்சு வழக்குகளில் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
நெய்வேலி போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை மற்றும் கல்வீச்சு சம்பவங்கள் தொடர்பாக 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வடக்கு மண்டலத்தில் பல்வேறு காவல் நிலைய எல்லைகளில் சுமார் 90 இடங்களில் மறியல் போராட்டங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நெய்வேலி நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து ஆகாஷ் உள்ளிட்ட 26 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
2 இளம்சிறார்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். பா.ம.க. தலைவர் கைதை தொடர்ந்து 4 இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றது. கடந்த 26, 28-ந்தேதிகளில் பதிவு செய்யப்பட்ட கல் வீச்சு வழக்குகளில் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
Next Story






