என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "N.L.C."

    • பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வருவதேயில்லை. இதுபோன்ற சம்பவம் எந்த நாட்டிலும் நடைபெறாது.
    • தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளின் வளர்ச்சிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை அமைச்சர் அமித்ஷா தெரிவிக்க வேண்டும்.

    கடலூர்:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கடலூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    மணிப்பூர் சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திரமோடி நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டுமென எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வருவதேயில்லை. இதுபோன்ற சம்பவம் எந்த நாட்டிலும் நடைபெறாது. நமது நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் உள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, கட்சி பணிதான் முக்கியமென ராமேஸ்வரத்திற்கு வந்து நடைபயணத்தை தொடங்கி பேசியுள்ளார். தமிழையும், திருக்குறளையும் பா.ஜ.க.தான் வளர்ப்பது போல அவர் பேசியுள்ளது வேடிக்கையாக உள்ளது. மத்திய பா.ஜ.க. அரசு இந்தி, சமஸ்கிருதம் மொழிகளின் வளர்ச்சிக்கு பணம் ஒதுக்கியுள்ளது. தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளின் வளர்ச்சிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை அமைச்சர் அமித்ஷா தெரிவிக்க வேண்டும்.

    நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல் மொழியாக மாற்ற பா.ஜ.க. முன்வருமா, தமிழகத்தில் தமிழ் குறித்து பேசினால் மக்கள் ஏமாந்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். என்,எல்.சி.யில் நடைபெற்ற சம்பவம் வருத்தத்திற்குறியது. விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் என்.எல்.சி.யுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதிகலாபம் ஈட்டி வரும் என்.எல்.சி. நிறுவனம், நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்திற்கு வேலை வழங்கவும், கூடுதல் இழப்பீடு வழங்கவும் முன்வரவேண்டும். நேற்று நடைபெற்ற போராட்டத்தில், தமிழகத்தை விட்டு என்.எல்.சி. வெளியேற வேண்டுமென பா.ம.க.வினர் வலியுறுத்தினர். அவ்வாறு என்,எல்.சி. நிறுவனம் தமிழகத்தை விட்டு வெளியேறினால் 3 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்படும். தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கும் நிலை ஏற்படும். ஆகவே, என்.எல்.சி. பிரச்னையை சரி செய்து, பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி.யை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆகம விதிகளை கற்றுத் தேர்ந்தவர்கள் அனைவரும் கோவில்களில் அர்ச்சகராகலாம் என நீதிமன்றம் கூறியுள்ளதை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது. இதனை பயன்படுத்தி தமிழக கோவில்களில் காலியாக உள்ள அர்ச்சகர் பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது கடலூர் மாவட்ட செயலாளர் மாதவன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • நெய்வேலி மக்களுக்கு சொந்தமான நிலங்களில் இருந்து நிலக்கரி எடுத்து பல்லாயிரம் கோடி வருவாய் ஈட்டி வரும் என்.எல்.சி, அவர்களுக்கு வேலை வழங்க மறுத்து வருகிறது.
    • நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை, கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கட்டுபடியாகும் விலை வழங்காமல் புதிதாக நிலம் எடுக்க அனுமதிக்க இயலாது

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நெய்வேலி மக்களுக்கு சொந்தமான நிலங்களில் இருந்து நிலக்கரி எடுத்து பல்லாயிரம் கோடி வருவாய் ஈட்டி வரும் என்.எல்.சி, அவர்களுக்கு வேலை வழங்க மறுத்து வருகிறது.

    ஏற்கனவே நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை, கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கட்டுபடியாகும் விலை வழங்காமல் புதிதாக நிலம் எடுக்க அனுமதிக்க இயலாது. மண்ணின் மைந்தர்களின் உரிமைகளை பாதுகாக்க எத்தகைய போராட்டத்தையும் நடத்துவதற்கு பா.ம.க. தயங்காது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பயிற்சி பட்டதாரி பொறியாளர்களை நியமிக்கக்கூடாது
    • பிரதமர் சாதகமான முடிவை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

    சென்னை:

    என்.எல்.சி. பணி நியமனம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

    அதில், என்.எல்.சி.பயிற்சி பட்டதாரி பொறியாளர் பணிக்கான தேர்வில் தமிழக விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், என்.எல்.சி. திட்டங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பத்தின் விண்ணப்பதாரர்களை சிறப்பு தேர்வின் மூலம் நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பயிற்சி பட்டதாரி பொறியாளர்களை நியமிக்கக்கூடாது என்று வலியுறுத்தி உள்ளார்.

    இந்த விஷயத்தில் பிரதமர் சாதகமான முடிவை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

    • கோடைகால வெப்பம் காரணமாக கடந்த சில மாதங்களாக மின்நுகர்வு அதிகரித்து வருகிறது
    • அதிகளவில் நிலக்கரியை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நெய்வேலி:

    நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமான என்எல்சியில், சுரங்கப் பணிகளை மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரலாத் ஜோஷி,நேற்று ஆய்வு செய்தார். 

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமரின் உஜாலா திட்டத்தின் கீழ் மக்களுக்கு இதுவரை 36.79 கோடி எல்இடி மின்விளக்குகள் விநியோகம் செய்யப்பட்டதன் விளைவாக நாடு முழுவதும் மின்நுகர்வின் அளவு கணிசமாக குறைந்துள்ளது என்றார்.

    எனினும் கோடைகால வெப்பம் காரணமாக கடந்த சில மாதங்களாக மின்நுகர்வு அதிகரித்து வருகிறது என்றும், இதை சமாளிக்க ஏதுவாக, தடையற்ற மின் உற்பத்தியை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

    2040-ம் ஆண்டில் நாட்டின் மின் உற்பத்தி சுமார் 3000 பில்லியன் யூனிட்டுகளாக இருக்கும் என்றும், அதே வேளையில், இந்தியாவின் எரிசக்தி தேவை இரண்டு மடங்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய, 2040 ஆண்டிற்குள் அனல் மின் நிலையங்களுக்கான நிலக்கரி தேவை, சுமார் 1500 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும் என்றும் கூறினார்.

    கடந்த 8 ஆண்டுகளில், என்எல்சி இந்தியா நிறுவனத்தின், மின் உற்பத்தித் திறன், 2740 மெகாவாட்டிலிருந்து 6061 மெகாவாட்டாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

    மேலும் என்எல்சி நிறுவனம், அதன் உற்பத்தித்தி திறனில் 45%-க்கும் மேலாக, அனல் மின்சக்தி மற்றும் முழு மரபுசாரா மின்சக்தி உற்பத்தியை தமிழகத்திற்கு வழங்கி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

    இந்தியாவில் 1-ஜிகாவாட் திறனுடைய, சூரிய மின் நிலையத்தை நிறுவிய முதல் மத்திய பொதுத்துறை நிறுவனம், என்கிற பெருமையை, என்எல்சி இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் குறிப்பிட்டார்.

    ×