search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக செவிலியர் தினம்"

    • உயிரை காப்பவர்கள் மருத்துவ ர்களும், செவிலியர்களும் தான்.
    • இரவு பகல் பாராமல் கடமையை செய்பவர்கள்.

    திருத்துறைப்பூண்டி:

    உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு, திருத்துறைப்பூண்டி நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் செவிலியர்களை கவுரவப்படுத்தும் விதமாக நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

    அப்போது அவர் கூறும்போது, ஒரு உயிரை படைப்பவன் இறைவன் என்றால் உயிரை காப்பவர்கள் மருத்துவ ர்களும், செவிலியர்களும் க்தான்.

    இரவு பகல் பாராமல் கடமையை செய்பவர்கள்.

    இவர்களின் சேவையை மதித்து இவர்களுடன் ஒத்துழைத்து மனித உயிர்களையும், மனிதநேயத்தை காப்போம் என்றார். நிகழ்ச்சியில் மருத்துவர் ஷைமா, பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், நகராட்சி வருவாய் ஆய்வாளர் கார்த்தி, நகர்மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார், மருத்துவ பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாலு, செந்தில்குமார் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

    • நோயாளிகளைக் காப்பாற்ற மருந்து இருந்தால் மட்டும் போதாது.
    • நோயின் தன்மை அறிந்து, நோயாளிகளைத் தேற்றும் தாய் உள்ளம் வேண்டும்.

    சென்னை:

    உலக செவிலியர் தினத்தையொட்டி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு, தாய்க்கு நிகரான அன்பும் பரிவும் கொண்டு, பொறுமையுடன் ஆற்றும் அரும்பணிதான் செவிலியர் பணி ஆகும்.

    நோயாளிகளைக் காப்பாற்ற மருந்து இருந்தால் மட்டும் போதாது. நோயின் தன்மை அறிந்து, நோயாளிகளைத் தேற்றும் தாய் உள்ளம் வேண்டும். எனவே செவிலியர்கள் தாய்க்கு நிகரானவர்கள். தற்போது ஆண் செவிலியர்களும் இப்பணியில் இருக்கிறார்கள்.

    தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடிப்படையில், அனைத்துத் தரப்பினருக்கும் சிறந்த முறையில் மருத்துவம் கிடைத்திட, உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய நர்சிங் கவுன்சில் வழிகாட்டுதல்களின் அடிப்படையில், தேவையான செவிலியர் பணி இடங்களை நிரப்பிட தமிழக அரசு முன்வர வேண்டும்.

    புனிதமான சேவையில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு ம.தி.மு.க. சார்பில் செவிலியர் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×