திருத்துறைப்பூண்டியில் செவிலியர்களை கவுரப்படுத்திய நகர்மன்ற தலைவர்

உயிரை காப்பவர்கள் மருத்துவ ர்களும், செவிலியர்களும் தான். இரவு பகல் பாராமல் கடமையை செய்பவர்கள்.
செவிலியர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரப்படுத்திய நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன்.
செவிலியர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரப்படுத்திய நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன்.
Published on

திருத்துறைப்பூண்டி:

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு, திருத்துறைப்பூண்டி நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் செவிலியர்களை கவுரவப்படுத்தும் விதமாக நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

அப்போது அவர் கூறும்போது, ஒரு உயிரை படைப்பவன் இறைவன் என்றால் உயிரை காப்பவர்கள் மருத்துவ ர்களும், செவிலியர்களும் க்தான்.

இரவு பகல் பாராமல் கடமையை செய்பவர்கள்.

இவர்களின் சேவையை மதித்து இவர்களுடன் ஒத்துழைத்து மனித உயிர்களையும், மனிதநேயத்தை காப்போம் என்றார். நிகழ்ச்சியில் மருத்துவர் ஷைமா, பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், நகராட்சி வருவாய் ஆய்வாளர் கார்த்தி, நகர்மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார், மருத்துவ பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாலு, செந்தில்குமார் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com