search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Blonde"

    • இந்து மேனிலைப்பள்ளி கூடுதல் மதிப்பெண் மற்றும் தேர்ச்சி விழுக்காடு இரண்டிலும் முதலிடம்.
    • பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு கலெக்டர் மகாபாரதி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    சீர்காழி:

    சீர்காழியில் நடைபெற்ற மரபு சார் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    இவ்விழாவில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி கலந்து கொண்டு பேசினார்.

    பின்னர் இக்கல்வியாண்டில் மேல்நிலை 2-ம் ஆண்டு மாணவர்கள் அரசு பொதுத்தேர்வில் சீர்காழி தாலுக்காவில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேனிலைப்பள்ளி கூடுதல் மதிப்பெண் மற்றும் தேர்ச்சி விழுக்காடு இரண்டிலும் முதலிடம் பெற்றமைக்காக பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.அறிவுடைநம்பியை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    இதில் சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர், மயிலாடுதுறை வேளாண்மை இணை இயக்குநர் ஜே.சேகர், சீர்காழி நகர மன்ற உறுப்பினர் வேல்முருகன் மற்றும் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் எஸ்.முரளிதரன் , என்.துளசிரங்கன் , ஏ.வரதராஜன் கலந்து கொண்டனர்.

    • உயிரை காப்பவர்கள் மருத்துவ ர்களும், செவிலியர்களும் தான்.
    • இரவு பகல் பாராமல் கடமையை செய்பவர்கள்.

    திருத்துறைப்பூண்டி:

    உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு, திருத்துறைப்பூண்டி நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் செவிலியர்களை கவுரவப்படுத்தும் விதமாக நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

    அப்போது அவர் கூறும்போது, ஒரு உயிரை படைப்பவன் இறைவன் என்றால் உயிரை காப்பவர்கள் மருத்துவ ர்களும், செவிலியர்களும் க்தான்.

    இரவு பகல் பாராமல் கடமையை செய்பவர்கள்.

    இவர்களின் சேவையை மதித்து இவர்களுடன் ஒத்துழைத்து மனித உயிர்களையும், மனிதநேயத்தை காப்போம் என்றார். நிகழ்ச்சியில் மருத்துவர் ஷைமா, பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், நகராட்சி வருவாய் ஆய்வாளர் கார்த்தி, நகர்மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார், மருத்துவ பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாலு, செந்தில்குமார் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

    • மாணவர்களுக்கு சீருடை, இனிப்பு, பட்டாசு மற்றும் நோட்டுகள் வழங்கப்பட்டது.
    • பணிகளை பாராட்டி நினைவுப்பரிசு, பொன்னாடைகள் வழங்கி கவுரவிப்பு.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி பெயர் பொறித்த சீருடை, தீபாவளி இனிப்புகள், பட்டாசுகள் மற்றும் நோட்டுகள் வழங்கப்பட்டது.

    முன்னதாக தலைமை–யாசிரியர் வேதரெத்தினம், உதவிஆசிரியை சுசீலா, ஆட்டோ ஓட்டுநர் அன்புமணி ஆகியோரின் பணிகளை பாராட்டி நினைவுப்பரிசு, பொன்னாடைகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் அண்ணாதுரை, பொருளாளர் கருணாநிதி, வட்டார கல்வி அலுவலர்கள் பாலசுப்பிரமணியம், அறிவழகன், ரோட்டரி துணை ஆளுநர் சிவக்குமார், ஆதப்பன், இளங்கோவன், திலகமணி, முத்து சாமி, அறிவழகன், உறுப்பினர் அஜித் ராஜா, ஹாஜா அலாவுதீன், தலைமையாசிரியர்கள் சுபாஷ், முருகாdந்தம், ஆசிரியர்கள் வேதரெத்தினம், ஹரி கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

    • தஞ்சை மணிமண்டபம் முன்பு உள்ள எனது தந்தை சிவாஜியின் சிலை அலங்கரிக்கப்பட்டு வருகிறது.
    • மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செயல்படுத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சைக்கு இன்று நடிகர் பிரபு வந்தார்.

    திடீரென அவர் மாநகராட்சி அலுவல கத்திற்கு சென்றார். அங்கு மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், ஆணையர் சரவணகுமார், துணை மேயர் அஞ்சுக்கும் பூபதி ஆகியோரின் சிறப்பான பணிக்கு பாராட்டு தெரிவித்து அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தார்.

    மேலும் பணியாளர்களை ஊக்கப்படுத்தினார்.

    இது குறித்து பிரபு கூறும் போது, தஞ்சை மாநகராட்சி தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சியாக செயல்பட்டு வருகிறது.

    மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணகுமார், துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர்.

    மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செயல்படுத்தி வருகின்றனர்.

    இதனால் தஞ்சை மாநகராட்சி முன்னோடி மாநகராட்சியாக மாறி உள்ளது.

    தஞ்சை மணிமண்டபம் முன்பு உள்ள எனது தந்தை சிவாஜியின் சிலை அலங்கரிக்கப்பட்டு வருகிறது.

    இதே போல் பல்வேறு வளர்ச்சிபணிகளை மாநகராட்சியில் செயல்படுத்தி விடுகின்றனர்.

    இதற்காக அவர்களை பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தேன் என்றார்.

    ×