சிறந்த பணிக்காக தஞ்சை மாநகராட்சி மேயர்- ஆணையரை பாராட்டிய நடிகர் பிரபு

தஞ்சை மணிமண்டபம் முன்பு உள்ள எனது தந்தை சிவாஜியின் சிலை அலங்கரிக்கப்பட்டு வருகிறது.மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செயல்படுத்தி வருகின்றனர்.
தஞ்சை மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணகுமாரை நடிகர் பாராட்டினார்.
தஞ்சை மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணகுமாரை நடிகர் பாராட்டினார்.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சைக்கு இன்று நடிகர் பிரபு வந்தார்.

திடீரென அவர் மாநகராட்சி அலுவல கத்திற்கு சென்றார். அங்கு மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், ஆணையர் சரவணகுமார், துணை மேயர் அஞ்சுக்கும் பூபதி ஆகியோரின் சிறப்பான பணிக்கு பாராட்டு தெரிவித்து அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தார்.

மேலும் பணியாளர்களை ஊக்கப்படுத்தினார்.

இது குறித்து பிரபு கூறும் போது, தஞ்சை மாநகராட்சி தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சியாக செயல்பட்டு வருகிறது.

மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணகுமார், துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர்.

மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செயல்படுத்தி வருகின்றனர்.

இதனால் தஞ்சை மாநகராட்சி முன்னோடி மாநகராட்சியாக மாறி உள்ளது.

தஞ்சை மணிமண்டபம் முன்பு உள்ள எனது தந்தை சிவாஜியின் சிலை அலங்கரிக்கப்பட்டு வருகிறது.

இதே போல் பல்வேறு வளர்ச்சிபணிகளை மாநகராட்சியில் செயல்படுத்தி விடுகின்றனர்.

இதற்காக அவர்களை பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தேன் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com