search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Nurses Day"

    • உயிரை காப்பவர்கள் மருத்துவ ர்களும், செவிலியர்களும் தான்.
    • இரவு பகல் பாராமல் கடமையை செய்பவர்கள்.

    திருத்துறைப்பூண்டி:

    உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு, திருத்துறைப்பூண்டி நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் செவிலியர்களை கவுரவப்படுத்தும் விதமாக நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

    அப்போது அவர் கூறும்போது, ஒரு உயிரை படைப்பவன் இறைவன் என்றால் உயிரை காப்பவர்கள் மருத்துவ ர்களும், செவிலியர்களும் க்தான்.

    இரவு பகல் பாராமல் கடமையை செய்பவர்கள்.

    இவர்களின் சேவையை மதித்து இவர்களுடன் ஒத்துழைத்து மனித உயிர்களையும், மனிதநேயத்தை காப்போம் என்றார். நிகழ்ச்சியில் மருத்துவர் ஷைமா, பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், நகராட்சி வருவாய் ஆய்வாளர் கார்த்தி, நகர்மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார், மருத்துவ பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாலு, செந்தில்குமார் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

    • செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
    • செவிலியர்கள் கேக் வெட்டி அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினத்தை யொட்டி நைட்டிங்கேள் அம்மையார் படம் வைத்து மலர் தூவி மரியாதை செய்தனர்.

    பின்பு செவிலியர்கள் மெழுகுவார்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    செவிலியர்கள் கேக் வெட்டி அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்.

    நிகழ்ச்சியில் தலைமை மருத்துவர் முருகப்பா, மருத்துவர்கள் தனஞ்சேயன், வினோத் மற்றும் செவிலி யர்கள் கலந்து கொண்டனர்.

    ×