search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறுப்பினர் சேர்க்கை முகாம்"

    • வீட்டுவரி உயர்வு, குடிநீர் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி ஏற்றம் ஆகியவை மக்களின் தலையில் மிகப்பெரிய பாரமாகும்.
    • தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக 57 சதவீத மின் கட்டணம் உயர்ந்துள்ளது.

     திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி, நெருப்பெரிச்சல் பகுதிக்குட்பட்ட பாண்டியன்நகரில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட துணை செயலாளர் பூலுவப்பட்டி பாலு, நெருப்பெரிச்சல் பகுதி செயலாளர் பட்டுலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரிடம் உறுப்பினர் சேர்க்கை படிவங்களை விஜயகுமார் எம்.எல்.ஏ. வழங்கினார். முடிவில் வட்ட செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி செயலாளர் சுந்தராம்பாள், பகுதி நிர்வாகிகள் இம்மானுவேல், ரேவதி, கலா, பகுதி துணை செயலாளர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வீட்டுவரி உயர்வு, குடிநீர் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி ஏற்றம் ஆகியவை மக்களின் தலையில் மிகப்பெரிய பாரமாகும். இதைப்பற்றி எல்லாம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினோ, அமைச்சர் உதயநிதியோ மற்ற தி.மு.க.வினரோ சிந்திக்கவில்லை. இவர்களின் ஒரே சிந்தனை செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். செந்தில்பாலாஜி எதையாவது சொல்லி விட்டால் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு பாதிப்பு வந்துவிடும் என்று முதல்-அமைச்சர் பதற்றமாக உள்ளார்.

    தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக 57 சதவீத மின் கட்டணம் உயர்ந்துள்ளது. கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க.வுக்கு 53 ஆண்டுகால வரலாறு உண்டு. மிகப்பெரிய சோதனைகளை எல்லாம் வென்றுள்ளோம். எனவே யாரும் எங்களுக்கு பாடம் எடுக்க தேவையில்லை. 1½ கோடி தொண்டர்களின் விருப்பம் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் என்பதாகும். எனவே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் வேட்பாளராகவும், கட்சியின் தலைவராகவும் ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும். இதில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின்போது மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சி.எஸ்.கண்ணபிரான் உடனிருந்தார்.

    • உறுப்பினர் சேர்க்கை முகாமை தலைமை செயற்குழு உறுப்பினர் தமிழ்செல்வி தொடங்கி வைத்தார்.
    • தப்பளகுண்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் பேரூராட்சியில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் தமிழ்செல்வி உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார்.

    தப்பளகுண்டு, நத்தம், பிள்ளையார்கோவில் தெரு, அக்கினி மாடன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.இதில் தி.மு.க. நிர்வாகிகள் மோகன்லால், சரஸ்வதி, கிளை செயலாளர் ஜோசப், தமிழரசன் அண்ணாமலை, நகர பிரதிநிதி ஆதிவிநாயகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • 6 இடங்களில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
    • இந்த நிகழ்வுகளுக்கு மாநகர செயலாளரும், மேயருமான எஸ். ஏ. சத்யா தலைமை தாங்கினார்.

    ஓசூர்,

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, மேற்கு மாவட்ட செயலாளர் ஒய். பிரகாஷ் எம். எல். ஏ. வழிகாட்டுதலின்படி, நேற்று ஓசூர் மாநகர தி.மு.க. சார்பில், ஒசூர் மாநகரில் டி.வி.எஸ். நகர், ராயக்கோட்டை சாலை, பாகலூர் சாலை, சானசந்திரம், நஞ்சப்பா நகர், கலைஞர் நகர், ஆகிய 6 இடங்களில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

    இந்த நிகழ்வுகளுக்கு மாநகர செயலாளரும், மேயருமான எஸ். ஏ. சத்யா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக, ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., ஓசூர் தொகுதி மேற்பார்வையாளர் வேலூர் ரமேஷ் தலைமை செயற்குழு உறுப்பினர் கே. கிரீஷ் பொதுக்குழு உறுப்பினர் முனிராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இதில், துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள், கட்சியினர் கலந்து கொண்டனர். முகாமில்,பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து, கட்சியில் தங்களை உறுப்பினராக பதிவு செய்து கொண்டனர்.

    • அ.தி.மு.க.சார்பில், ஓசூரில் கட்சிக்கு தீவிர, உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
    • முகாமிற்கு, முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான பி.ஆர்.வாசுதேவன் தலைமை தாங்கினார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க.சார்பில், ஓசூரில் கட்சிக்கு தீவிர, உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

    ஓசூர் - தேன்கனிக்கோட்டை சாலையில் கூட்டு ரோடு அருகேயுள்ள தனியார் மண்டபத்தில் நடந்த முகாமிற்கு, மாநகர தெற்கு பகுதி செயலாளரும், முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான பி.ஆர்.வாசுதேவன் தலைமை தாங்கினார். இதில், மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி கலந்துகொண்டு, கட்சி நிர்வாகிகளிடம் உறுப்பினர் படிவத்தை வழங்கி தொடங்கி வைத்தார். மேலும், கட்சியினருக்கு ஆலோசனைகள் வழங்கி நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்.

    இதில், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், மாவட்ட துணைசெயலாளர் மதன், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் நாராயணன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாநகராட்சி மண்டல குழு தலைவர் ஜெயப்பிரகாஷ், அமைப்பு சாரா ஓட்டுனர் சங்க மாவட்ட செயலாளர் சென்னகிருஷ்ணன் உள்பட பலர் பேசினர். மேலும் முகாமில்,கூட்டுறவு வீட்டு வசதிசங்க தலைவர் நடராஜன், மாவட்ட சிறுபான்மை பிரிவு நிர்வாகி சாச்சு மற்றும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர், பகுதி நிர்வாகிகள், ஒன்றிய, மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்சியினர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வந்தவாசி:

    தமிழகம் முழுவதும் ஒரு கோடி திமுக உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சியை மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக வந்தவாசி தொகுதிக்கு 50 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடந்து வருகிறது இதன் ஒரு பகுதியாக வந்தவாசி நகரத்தில் மட்டும் 5,500 உறுப்பினர்கள் சேர்க்கைக்கான முகாம் தீயணைப்பு நிலையம் எதிரே நடந்தது நிகழ்ச்சிக்கு எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    தலைமைக் கழக செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.சீதாபதி நகராட்சி தலைவர் எச்சலால், துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், முன்னாள் நகராட்சி தலைவர் எல்.அப்சர் லியாகத், முன்னாள் நகர செயலாளர் எஸ்.அன்சாரி, நகர அவை தலைவர் அ.நவாப் ஜான், முன்னாள் கவுன்சிலர் பாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் அ.தயாளன் அனைவரையும் வரவேற்றார்.

    இதில் உறுப்பினர் சேர்க்கும் முகாமினை திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் தொடங்கி வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் டி.ராதா, கே.ஆர்.பழனி, மாவட்ட பிரதிநிதி எம்.டி.இப்ராகிம்சா, எம்.குடியரசு, இளைஞர் அணி நகர செயலாளர் கோமாதா சுரேஷ், கவுன்சிலர்கள் அன்பரசு, ஜெயபிரகாஷ், நூர் முஹம்மது, மருது சரவணகுமார், சந்தோஷ் குமார், முன்னாள் கவுன்சிலர்கள் வட்டச் செயலாளர்கள் சர்தார், ரவி, புருஷோத்தமன், ஜெகன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    முடிவில் துணைச் செயலாளர் டி.ராஜ்குமார் நன்றி கூறினார்.

    • உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் பாராளுமன்ற வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் தலைமை தாங்கினார்.
    • நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    வேடசந்தூர்:

    தி.மு.க தலைமை மாநிலம் முழுவதும் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று உத்தர விட்டது. இதனையடுத்து வேடசந்தூர் தெற்கு ஒன்றியத்தின் சார்பாக 16 ஆயிரம் உறுப்பினர் சேர்க்கும் பணி நேற்று காலை முதல் தொடங்கியது. பாரதிநகரில் தொடங்கிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் பாராளுமன்ற வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் நாச்சிமுத்து தலைமை தாங்கினார்.

    வேடசந்தூர் எம்.எல்.ஏ காந்திராஜன், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மோகன், தெற்கு ஒன்றிய தேர்தல் பொறுப்பாளர் வெங்கடசாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா. சாமிநாதன், பேரூர் செயலாளர் கார்த்திகேயன், வேடசந்தூர் பேரூராட்சி தேர்தல் பொறுப்பாளர் மற்றும் ஒன்றிய குழு தலைவர் சவுடீஸ்வரி கோவிந்தன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், ஒன்றிய அவைத் தலைவர் ஆரோன், பேரூராட்சி தலைவர் மேகலாகார்த்தி கேயன் உட்பட பேரூராட்சி கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. சார்பில் இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை முகாம் நெட்டூரில் நடந்தது.
    • மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன், நகர் தாயகம் கவி எம்.எல்.ஏ. ஆகியோர் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் சந்தன மாரியம்மன் கோவில் திடலில் தி.மு.க. சார்பில் இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை முகாம் நெட்டூரில் நடந்தது. ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் செல்லத்துரை, தொழிலதிபர்கள் மாரிதுரை, மணிகண்டன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    தி.மு.க. மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன், சென்னை திரு.வி.க. நகர் தாயகம் கவி எம்.எல்.ஏ. ஆகியோர், முக்கிய வீதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, தி.மு.க. இளைஞரணிக்கு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தனர்.

    18 வயது நிரம்பிய இளைஞர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை நகல் பெற்றுக்கொண்டு, உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கி உறுப்பினராக சேர்த்தனர்.

    முகாமில் இளைஞரணி அமைப்பாளர் மணிமாறன், உதயநிதி மன்ற மாவட்ட துணைச் செயலாளர் அருணன், உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன், கிளைச் செயலாளர் கணேசன், பொருளாளர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×