search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உரம்"

    • கும்பகோணம் வட்டாரத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் மோகன் தலைமையில் அதிகாரிகள் உரக்கடைகளில் தரக்கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
    • ரசாயன உரங்களை விவசாயிகளுக்கு விற்பணை செய்யும் போது கூடுதலாக மற்ற பொருட்களை விற்பணை செய்வது கண்டறியப்பட்டால் உர உரிமம் நிரந்திரமாக ரத்து செய்யப்படும் என எச்சரித்தனர்.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்ட த்தில் குறுவை சாகுபடித ற்போது பணிகள் முழு வீச்சில் நடைபெறுவதால்உரக்கடை களில்திடீர் ஆய்வுகளை வேளாண்மை அதிகாரிகள் நடத்தினர்.

    வேளாண்மைஇணை இயக்குநர்அ றிவுரைக ளின்படி தஞ்சாவூர் மாவட்டம் முழு வதும் மொத்த விற்பணையா ளர்கள்

    சில்லரை கடைகளில்திடீர் ஆய்வு செய்தனர்.இந்த நிலையில் கும்பகோணம் வட்டாரத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் மோகன் தலைமையில் அதிகாரிகள் உரக்கடைகளில்தரக்கட்டு ப்பாடுகளைஆய்வு செய்த னர்.

    ரசாயன உரங்களை விவசாயிகளுக்கு விற்பணை செய்யும் போது கூடுதலாக மற்ற பொருட்களை விற்பணை செய்வது கண்டறியப்பட்டாலும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது

    உர உரிமம் நிரந்திரமாக ரத்து செய்யப்படும் என எச்சரித்தனர். ஆய்வின் போது வேளாண்மை உதவி இயக்குநர் தேவிகலாவதி, வேளாண்மை அலுவலர்கள் உள்பட பலர் இருந்தனர்.

    • பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு பிளாஸ்டிக்பை பயன்படுத்துவதை தவிர்த்து துணிப்பையை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஞ்சப்பை மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
    • உரம் உரமாக்குதல் குறித்து உரம் தயாரிக்கும் மையத்திற்கு அழைத்து சென்று விளக்கம் அளிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே திட்டச்சேரி பேரூராட்சி சார்பில் ஒட்டுமொத்த தூய்மை பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திக்கா தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் முன்னிலை வகித்தார். இதில் பொதுமக்களுக்கு ஸ்வச்சதா செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    அதை தொடர்ந்து புதுமனைத்தெருவில் ஒட்டுமொத்த தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு பிளாஸ்டிக் பை பயன்படுத்துவதை தவிர்த்து துணிப்பையை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஞ்சப்பை மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகளுக்கு திடக்கழிவை உரமாக்குதல் குறித்து உரம் தயாரிக்கும் மையத்திற்கு அழைத்து சென்று விளக்கம் அளிக்கப்பட்டது.பின்னர் திட்டச்சேரி அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒட்டுமொத்த தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர், மன்ற உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • பவானி வட்டாரம், மயிலம்பாடி கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை தொழில்நுட்ப, மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் மண்புழு உரம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது.
    • இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை பவானி உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் நந்தினி, செல்வி, லட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

    பவானி:

    பவானி வட்டாரம், மயிலம்பாடி கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை தொழில்நுட்ப, மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் மண்புழு உரம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது.

    இப்பயிற்சி பவானி வேளாண்மை உதவி இயக்குனர் வனிதா தலைமையில் நடைபெற்றது. வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர் அருண்குமார் மண்புழு படுக்கை அமைத்தல், மண்புழு உரம் தயாரித்தல் குறித்து மிக தெளிவாக விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

    ஜே.கே.கே.எம். கோபி வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர் ஹாதில்மோன் மண்புழு உரத்தின் நன்மைகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து தெரிவித்தார்.

    பவானி உதவி வேளாண்மை அலுவலர் சித்தையன் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மானிய திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்தார்.

    மேலும் இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை பவானி உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் நந்தினி, செல்வி, லட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

    ×