மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி

பவானி வட்டாரம், மயிலம்பாடி கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை தொழில்நுட்ப, மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் மண்புழு உரம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது.இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை பவானி உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் நந்தினி, செல்வி, லட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.
மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி
Published on

பவானி:

பவானி வட்டாரம், மயிலம்பாடி கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை தொழில்நுட்ப, மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் மண்புழு உரம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சி பவானி வேளாண்மை உதவி இயக்குனர் வனிதா தலைமையில் நடைபெற்றது. வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர் அருண்குமார் மண்புழு படுக்கை அமைத்தல், மண்புழு உரம் தயாரித்தல் குறித்து மிக தெளிவாக விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

ஜே.கே.கே.எம். கோபி வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர் ஹாதில்மோன் மண்புழு உரத்தின் நன்மைகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து தெரிவித்தார்.

பவானி உதவி வேளாண்மை அலுவலர் சித்தையன் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மானிய திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்தார்.

மேலும் இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை பவானி உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் நந்தினி, செல்வி, லட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com