search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவு பாதுகாப்புதுறை"

    • தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம்கள் கேரள மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • சுகாதாரமற்ற முறையில் உரிய பாதுகாப்புகளின்றி ஐஸ் கிரீம்கள் தயாரிக்கப்படுவது தெரிய வந்தது.

    செங்கோட்டை:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் அன்சாரி. இவர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இங்கு தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம்கள் கேரள மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனத்தில் சுகாதாரமற்ற முறையில் ரசாயன பொருட்களை கொண்டு ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுவதாகவும், செங்கோட்டையில் தயாரித்து கேரள பெயர்களை அச்சிட்டு லேபிள் ஒட்டி விற்பனைக்கு அனுப்பப்படுவதாகவும் புகார் எழுந்தது.

    இதைத்தொடர்ந்து தென்காசி வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி நாகசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் அந்த நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு சுகாதாரமற்ற முறையில் உரிய பாதுகாப்புகளின்றி ஐஸ் கிரீம்கள் தயாரிக்கப்படுவது தெரிய வந்தது. மேலும் ஐஸ்கிரீம் தயாரிப்பதற்காக ரசாயன பொருட்கள் பயன்படுத்தியதும், பல்வேறு பெயர்களை கொண்ட லேபிள்கள் அச்சடிக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட 270 லிட்டர் ஐஸ்கிரீம்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    • சமீப ஆண்டுகளாக சாலையோர தள்ளுவண்டிக் கடைகளில் பாஸ்ட் புட் தயாரித்து விற்பது மற்றும் ஓட்டல், டீக்கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    • பயன்படுத்தி எண்ணெயை பயோ டீசல் தயாரிப்புக்கென உணவு பாதுகாப்பு துறையினரிடம் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    சமீப ஆண்டுகளாக சாலையோர தள்ளுவண்டிக் கடைகளில் பாஸ்ட் புட் தயாரித்து விற்பது மற்றும் ஓட்டல், டீக்கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.சில நேரங்களில் உணவின் தரமும் கேள்விக்குறியாகி விடுகிறது. எனவே உணவு தரத்தை உறுதிப்படுத்த, உணவு பாதுகாப்பு துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    இதில் உணவு பதார்த்தம் தயாரிக்க மீண்டும், மீண்டும் பயன்படுத்திய எண்ணெயை பயன்படுத்தக் கூடாது என, அறிவுறுத்தி வருகின்றனர்.அவ்வாறு பயன்படுத்தி எண்ணெயை பயோ டீசல் தயாரிப்புக்கென உணவு பாதுகாப்பு துறையினரிடம் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர்.

    இருப்பினும் இத்திட்டம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. பெரும்பாலான கடைக்காரர்கள் பயன்படுத்திய எண்ணெய்யை உணவு பாதுகாப்பு துறையினரிடம் வழங்க தயங்குகின்றனர்.இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறையினர், ஆங்காங்கே ஓட்டல் உரிமையாளர், தள்ளுவண்டிக் கடைக்காரர்கள் மத்தியில் இதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    ×