search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவு பாதுகாப்பு அலுவலர்"

    • உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • 2 பேக்கரி கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலை பகுதியில் உள்ள பேக்கரி கடைகள், அசைவ உணவகங்கள் மற்றும் பழமுதிர் நிலையங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது இனிப்பு மற்றும் கார வகைகளில் தயாரிப்பு தேதி குறிப்பிடப்படாமல் விற்பனை செய்த 2 பேக்கரி கடைகளுக்கு தலா 1000 வீதம் ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    பிறந்தநாள் கேக் தரம் குறைவு மற்றும் இனிப்பு, காரவகைகளில் தயாரிப்பு தேதி இல்லாமல் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் பேக்கரி கடைகளில் உள்ள பிறந்தநாள் கேக்கில் அளவுக்கு அதிகமான கலர் சேர்க்கப்பட்டுள்ளதா? என்பதை பரிசோதனை செய்வதற்காகவும், மிச்சர் மற்றும் கார கடலையில் செயற்கை கலர் சேர்க்கப்ப ட்டுள்ளதா? என்பதை கண்டறிவதற்காகவும் உணவு மாதிரி சேகரிக்கப் பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

    மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக் பயன்படுத்திய பழமுதிர் நிலையத்திற்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    அதேபோல் அசைவ உணவகங்களில் சில்லி சிக்கன், காலிபிளவர் சில்லி போன்றவற்றிற்கு செயற்கை வண்ணம் பயன்படுத்தக் கூடாது.

    சூடான உணவு பொருள்களை தடை செய்ய ப்பட்ட பிளாஸ்டிக் கவர், கேரி பேக் போன்றவற்றில் பார்சல் செய்து கொடுக்க கூடாது.

    துரித உணவு உணவு கடைகள், பேக்கரி மற்றும் டீக்கடைகளில் விற்பனை செய்யும் எண்ணெய் பலகாரங்கள் ஆன பஜ்ஜி, போண்டா மற்றும் மீன் சில்லி, சிக்கன் சில்லி வகைகளை நேரடியாக அச்சிட்ட பேப்பரில் வைத்து உண்பதற்கும், பார்சல் செய்தும் கொடுக்க கூடாது எனவும் கடைகாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    அவ்வாறு பார்சல் செய்து கொடுக்கும் கடை களுக்கு அபராதம் விதிக்க ப்படும் என அறிவுறுத்த ப்பட்டது.

    உணவுப்பொருள் குறைகள் சம்பந்தமான புகாரை 94440 42322 என்ற எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என உணவு பாதுகாப்பு அலுவலர் தெரிவித்தார்.

    • உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் தீடீர் சோதனை செய்தார்.
    • 3 கடைகளுக்கு தலா ஆயிரம் வீதம் ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலை பகுதியில் உள்ள பேக்கரி, ஸ்வீட்ஸ், பப்ஸ் தயாரிப்பு கடைகளில் பிளாஸ்டிக் மூலம் தயாரி க்கப்பட்ட முட்டைகளால் பப்ஸ் வகைகள் தயாரி க்கப்படுகிறதா? என உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் தீடீர் சோதனை செய்தார்.

    ஆய்வில் பப்ஸ் வகை களை உரிய முறையில் தயாரி க்காமல் முட்டை வெளியே தெரியும்படி மைதா மாவில் தயாரிக்க ப்படும் பப்ஸ் வகைகளை தொடர்ந்து ஓவனில் வைத்து சூடேற்றும் பொழுது முட்டையின் வெள்ளை கருவானது தொடர்ந்து சூடேறி பிளாஸ்டிக் போன்று கெட்டியாகி விடுகிறது.

    அவ்வாறு தயாரிக்காமல் உரிய முறையில் உணவு பாதுகாப்பு விதிகளின்படி உரிய முறையில் முட்டை முழுவதுமாக மூடி உள்ளவாறு தயாரிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.மேலும் பப்ஸ் வகைகள் மற்றும் எண்ணெய் பல காரங்களை பேப்பரில் வைத்து பொதுமக்களுக்கு உண்ண கொடுத்ததற்காக 3 கடைகளுக்கு தலா ஆயிரம் வீதம் ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள், பாலித்தீன் கவர்களில் சூடான டீயை பார்சல் செய்து கொடுக்க கூடாது எனவும், அலுமி னியம் பாயில் கவரில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது.

    இதனை மீறி தடை செய்யப்பட்ட பாலித்தீன் கவர்கள், கேரி பேக்குகளை பயன்படுத்தும் கடைகளுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் எனவும் கடை உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

    இது சம்பந்தமான புகார்களை 9444042323 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    ×