search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆவின் நெய்"

    • ‘ஆவின்’ நிறுவனம் பால் மட்டுமின்றி, 230-க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் தயாரித்து, விற்பனை செய்கிறது.
    • சமையல் வெண்ணை, பாலாடை கட்டி உற்பத்தி பல மாதங்களுக்கு முன்பாகவே முடங்கியுள்ளது.

    சென்னை:

    'ஆவின்' நிறுவனம் பால் மட்டுமின்றி, 230-க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் தயாரித்து, விற்பனை செய்கிறது. பால் உற்பத்தியாளர்கள், தனியார் மற்றும் அமுலுக்கு பால் வழங்குவதில் ஆர்வம் காட்டுவதால், ஆவின் கொள்முதல் சுமார் 35 லட்சம் லிட்டரில் இருந்து 25 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது.

    இதன் எதிரொலியாக, பால் பவுடர், உப்பு கலந்த வெண்ணை, நெய் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. சமையல் வெண்ணை, பாலாடை கட்டி உற்பத்தி பல மாதங்களுக்கு முன்பாகவே முடங்கியுள்ளது.

    சென்னை, அம்பத்துார் கிடங்கில் கையிருப்பில் உள்ள நெய், வெண்ணை மட்டுமே, ஆவின் நேரடி விற்பனை நிலையங்களுக்கு நேற்று அனுப்பப்பட்டு உள்ளன. இதனால், பல இடங்களில் நெய், வெண்ணை கிடைக்கவில்லை.

    • தமிழகம் முழுவதும் ஆவின் பார்லர்கள், விற்பனை மையங்களில் ஆவின் நெய் தற்போது விற்பனை செய்யப்படுகிறது.
    • ரேஷன் கடைகளில் ஆவின் நெய் பாக்கெட் விற்பனைக்கு ஆர்டர் கேட்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் நெய் அதிகளவில் பயன்படுத்துபவர்கள் என்ற அடிப்படையில் ஆவின் நிறுவனம் சார்பில் 100 கிராம் பாக்கெட் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டது. 50 லட்சம் பாக்கெட் உற்பத்தி செய்ய திட்டமிட்டு அதற்கான பணிகள் நடந்தன.

    ஏழை-எளிய மக்கள் ஆவின் நெய்யை பயன்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் ஆவின் பார்லர்கள், விற்பனை மையங்களில் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. 100 கிராம் ஆவின் நெய் விலை ரூ.75 ஆகும்.

    இதுவரையில் 30 லட்சம் 100 கிராம் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாகவும் மேலும் 20 லட்சம் பாக்கெட்டுகள் விற்பனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆவின் மேலாண்மை இயக்குனர் சுப்பையா தெரிவித்தார்.

    திருவண்ணாமலை, ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் 100 கிராம் பாக்கெட் அதிகளவு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் அனைத்து ஆவின் விற்பனை மையங்களில் 100 கிராம் நெய் பாக்கெட் விற்பனைக்கு உள்ளது. இதுதவிர கூட்டுறவு விற்பனை சங்கங்கள் டி.யு.சி.எஸ். மற்றும் அதனுடைய ரேஷன் கடைகளிலும் ஆவின் நெய் பாக்கெட் விற்பனைக்கு ஆர்டர் கேட்கப்பட்டுள்ளது.

    நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாக நெய் பாக்கெட் தேவைப்பட்டாலும் வினியோகிக்க தயாராக இருக்கிறோம். பொங்கல் பண்டிகைக்கு நெய், வெண்ணெய் அதிகமாக விற்பனை ஆகும் என்பதால் தட்டுப்பாடு இல்லாமல் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரே ஆண்டில் 3 முறை நெய் விலையை உயர்த்தி லிட்டருக்கு ரூ.115 வரை அதிகப்படுத்தி இருப்பது ஏற்கத்தக்கதல்ல.
    • இது தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடிக் கூறும் சொல்லாததையும் செய்வதா?

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஆவின் நெய் விலை உயர்வு கண்டனத்திற்குரியது. ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து ஆவின் தயிர், ஆவின் பால், தற்போது நெய் ஆகியவற்றின் விலையை உயர்த்திக் கொண்டிருப்பது மக்களை வஞ்சிக்கும் செயல்.

    ஒரே ஆண்டில் 3 முறை நெய் விலையை உயர்த்தி லிட்டருக்கு ரூ.115 வரை அதிகப்படுத்தி இருப்பது ஏற்கத்தக்கதல்ல.இது தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடிக் கூறும் சொல்லாததையும் செய்வதா?

    இவ்வாறு இந்த பதிவில் கூறியுள்ளார்.

    • ஆவின் நெய் வகைகளின் விலைகள் இன்று முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
    • 5 லிட்டர் நெய் பாட்டில் ரூ.2,900-ல் இருந்து ரூ.3,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் ஆவின் பால் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்ட நிலையில் இப்போது ஆவின் நெய் விலையும் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஆவின் நிறுவனம் சார்பில் பல்வேறு வகையான பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதில் ஆவின் நெய் வகைகளின் விலைகள் இன்று முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 5 லிட்டர் நெய் பாட்டில் ரூ.2,900-ல் இருந்து ரூ.3,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    ஒரு லிட்டர் நெய் பாட்டில் ரூ.580-ல் இருந்து ரூ.630 ஆகவும் உயர்ந்து உள்ளது. அதாவது லிட்டருக்கு 50 ரூபாய் உயர்ந்து உள்ளது. மேலும் 500 மி.லி. நெய் ரூ.290-ல் இருந்து ரூ.315 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    200 மி.லி. நெய் ரூ.130-ல் இருந்து ரூ.145 ஆகவும், 100 மி.லி நெய் ரூ.70-ல் இருந்து ரூ.75 ஆகவும் உயர்ந்துள்ளது. பிரீமியம் நெய் 1 லிட்டர் ரூ.630-ல் இருந்து ரூ.680 ஆகவும் பிரீமியம் நெய் 500 மி.லி. ரூ.340-ல் இருந்து ரூ.365 ஆகவும் உயர்ந்துள்ளது.

    15 மி.லி. பாக்கெட் நெய் ரூ.12-ல் இருந்து ரூ.14 ஆகி உள்ளது. 100 மி.லி. பாக்கெட் நெய் ரூ.65-ல் இருந்து ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. 15 கிலோ நெய் டின் ரூ.9,680-ல் இருந்து ரூ.10,725 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    புதிய விலையில் ஆவின் நெய், இன்று முதல் விற்பனைக்கு வருகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டில் 2-வது முறையாக நெய் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தயிர், மோர், லஸ்சிக்கு தான் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது. ஆனால் நெய் விலையையும் உயர்த்தி விட்டனர்.
    • விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    தயிர், லஸ்சி, மோர் உள்ளிட்ட பால் பொருட்களுக்கு மத்திய அரசு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் தயிர் பாக்கெட்ட்டிற்கான விலையை ரூ.4 முதல் ரூ.10 வரை உயர்த்தியது.

    இந்த நிலையில் ஆவின் நிறுவனமும் தயிர், நெய், லஸ்சி, மோர் ஆகிய பால் பொருட்களுக்கு இன்று முதல் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது.

    ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.45 உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.535 ஆக இருந்த நெய் பாட்டில் இன்றுமுதல் ரூ.580 ஆக அதிகரித்துள்ளது. அரை லிட்டர் நெய் பாட்டில் ரூ.15-ம், 200 மில்லி நெய் ரூ.10-ம், 100 மில்லி ரூ.5-ம் உயர்ந்தது. 5 லிட்டர் நெய் ரூ.2,900, 15 கிலோ ரூ.9,680 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    இதேபோல் ஆவின் தயிர் விலை 500 மில்லி பாக்கெட் ரூ.30-ல் இருந்து ரூ.35 ஆகவும், 200 மில்லி ரூ.18 ஆகவும், 400 கிராம் பிரிமியம் கப் தயிர் ரூ.40-ல் இருந்து 50 ஆகவும், பிரிமியம் தயிர் ஒரு கிலோ ரூ.100-ல் இருந்து ரூ.120 ஆகவும் அதிகரித்துள்ளது. 50 கிராம் தயிர் விலை உயர்த்தப்படாமல் ரூ.5-க்கு விற்கப்படுகிறது.

    200 மில்லி பாக்கெட் லஸ்சி ரூ.20, புரோபயோடிக் லஸ்சி ரூ.27-ல் இருந்து ரூ.30 ஆகவும், 200 மில்லி மோர் ரூ.15-ல் இருந்து ரூ.18 ஆகவும், 200 மில்லி மோர் பாட்டில் ரூ.10-ல் இருந்து ரூ.12 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்த விலை உயர்வு இன்று முதல் அனைத்து ஆவின் விற்பனை மையங்கள் மற்றும் முகவர் மையங்களில் நடைமுறைக்கு வந்தது.

    இந்த விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்க தலைவர் பொன்னுசாமி கூறியதாவது:-

    தயிர், மோர், லஸ்சிக்கு தான் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது. ஆனால் நெய் விலையையும் உயர்த்தி விட்டனர். கடந்த மார்ச் மாதம் தான் நெய் விலை உயர்த்தப்பட்டது. இப்போது மீண்டும் கிலோவுக்கு ரூ.45 வரை உயர்த்தி உள்ளனர்.

    பால் கொள்முதல் விலையை உயர்த்தாமலேயே நெய், தயிர், லஸ்சி, மோர் விலையை உயர்த்தி இருப்பது பொதுமக்களை பாதிக்கும். இந்த விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். மேலும் இந்த விலை உயர்வு உடனே அமலாக்கப்பட்டுள்ளதால் முகவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×