search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதித்தனார் கல்லூரி"

    • பொருளியல் துறையை சேர்ந்த 250 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • வினாடி-வினா, கட்டுரை, பேச்சுப்போட்டி, குழு நடனம் மற்றும் பாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பொருளியல் துறை மற்றும் சமூக ரெங்கபுரம் பைன்டெக் நிறுவனம் சார்பில், பொருளியல் மன்ற கலை இலக்கிய விழா நடந்தது. இதில் பொருளியல் துறையை சேர்ந்த 250 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் வினாடி-வினா, கட்டுரை, பேச்சுப்போட்டி, குழு நடனம், கழிவுகளில் இருந்து கலை, அடுப்பில்லா சமையல் மற்றும் பாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

    போட்டிகளை பொருளி யல் துறை தலைவர் சி.ரமேஷ் தொடங்கி வைத்தார். இதில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதன் படி வினாடி-வினாவில் பொருளியல் இளங்களை 3-ம் ஆண்டு மாணவர்கள் செல்வம், ஞான அபினாஷ் முதல் பரிசு பெற்றனர்.

    கட்டுரைப்போட்டியில் எம்.பில். மாணவி சன்மதி முதல் பரிசும், பேச்சுப்போட்டியில் 3-ம் ஆண்டு பொருளியல் மாணவர் செல்வம் முதல் பரிசை பெற்றார்.

    கழிவுகளில் இருந்து கலை என்ற போட்டியில் முதுகலை முதலாம் ஆண்டு மாணவி வேலம்மாள் என்ற பொன்திவ்யா முதல் பரிசும், பாட்டுப்போட்டியில் எம்.பில். மாணவி சன்மதி முதல் பரிசும், அடுப்பில்லா சமையல் போட்டியில் முதுகலை 2-ம் ஆண்டு பொருளியல் மாணவர்கள் சுந்தர்ராஜ், ஆகாஷ் முதல் இடத்தை பிடித்தனர்.

    பேராசிரியர்கள் முத்துக்குமார், மாலைசூடும் பெருமாள், கணேசன் மற்றும் உமா ஜெயந்தி ஆகி யோர் நடுவர்களாக இருந்து போட்டியை நடத்தினர்.

    பரிசளிப்பு விழாவிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். விழா அமைப்பாளர் உதவி பேராசிரியர் ச.சிவமுருகன் வரவேற்று பேசினார். தமிழ்த்துறை தலைவர் கு.கதிரேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். உதவி பேராசிரியர் பே.மருதையா பாண்டியன் விருந்தினரை அறிமுகப்படுத்தினார். உதவி பேராசிரியர் வீ.சிவ இளங்கோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன், தமிழ்த்துறை தலைவர் கு.கதிரேசன் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் அசோகன், பிரியதர்ஷினி மற்றும் மாணவ செயலர்கள் ஜெப்ரின் ஆகாஷ், முகுந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.உதவி பேராசிரியர் சி.முரு கேஸ்வரி நன்றி கூறினார்.

    • ஆதித்தனார் கல்லூரி வளாகத்தில் பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
    • கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் கல்லூரி வளாகத்தில் 75 மரக்கன்றுகளை நட்டார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அணி எண். 48, 231 சுயநிதிப்பிரிவு மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் 1 மற்றும் 2 அணிகள், வீரபாண்டியன்பட்டணம் ஊராட்சி மன்றம், மதர்சமூக சேவை நிறுவனம் ஆகியவை சார்பில் ஆதித்தனார் கல்லூரி வளாகத்தில் பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் விழாவை தொடங்கி வைத்து, இந்திய சுதந்திர அமுத பெருவிழாவை நினைவு கூறும் வகையில் கல்லூரி வளாகத்தில் 75 மரக்கன்றுகளை நட்டார். நாட்டு நலப்பணித்திட்டம் சுயநிதிப்பிரிவு அணி எண்.231 திட்ட அலுவலர் ஜெயராமன் வரவேற்று பேசினார். மதர்சமூக சேவை நிறுவனத்தலைவர் ராஜ்கமல் கலந்து கொண்டு, பசுமை இந்தியா திட்டம் குறித்து மாணவர்களுக்கு விளக்கி பேசினார். விழா ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித்திட்ட அணி எண்.48-ன் அதிகாரி கவிதா, இளையோர் செஞ்சிலுவை அணி எண்.1 திட்ட அதிகாரி மோதிலால் தினேஷ் ஆகியோர் செய்திருந்தனர். இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அதிகாரி பார்வதிதேவி நன்றி கூறினார். கல்லூரி பேராசிரியர்களான அந்தோணி சகாய சித்ரா, ராஜ்பினோ, சிங்காரவேலு, சிரில்அருண், கரோலின் கண்மணி ஆனந்தி, திருச்செல்வன், ரூபன்சேசு அடைக்கலம், சுமதி, செந்தில்குமாரி, டயனா ஸ்வீட்லின், கருப்பசாமி, சிவந்தி, வானொலி தொழிற்நுட்ப கலைஞர் கண்ணன், ஆய்வக உதவியாளர் ஜெயந்தி மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள், இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆதித்தனார் கல்லூரியில்மொபைல் போன் பழுதுநீக்கும் பயிற்சி பட்டறை நடைபெற்றது.
    • நியூடெக்னாலஜிஸ் பயிற்சி நிறுவனம் பயிற்சியை நடத்தியது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இன்ஸ்டியூசன் இன்னோவேசன் கவுன்சில் சார்பாக மொபைல் போன் பழுதுநீக்கும் பயிற்சி பட்டறை கடந்த 7-ந் தேதி முதல் 2 நாட்கள் நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சியில் கவுன்சில் அமைப்பாளர் நித்யானந்த ஜோதி வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வரும், கவுன்சில் தலைவருமான து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி, கவுன்சில் செயல்பாடுகள் குறித்து பேசினார். கல்லூரி செயலர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.

    கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நியூடெக்னாலஜிஸ் பயிற்சி நிறுவனம் பயிற்சியை நடத்தியது. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணகுமார் தலைமையில், அந்த நிறுவனத்தை சேர்ந்த 3 பொறியாளர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். பயிற்சியில் ெமாபைல் போன் உதிரி பாகங்கள் மற்றும் அதன் இயக்கங்களை தெளிவாக மாணவர்களுக்கு விளக்கி கூறினர். இதில் 60 மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வரின் ஆலோசனையின் பேரில் பயிற்சி பட்டறை ஒருங்கிணைப்பாளர் வாசுகி மற்றும் பேராசிரியைகள் முருகேஸ்வரி, ஸ்ரீதேவி, தீபாராணி, பேராசிரியர்கள் தர்மபெருமாள், பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பரிசளிப்பு விழாவுக்கு, கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார்.
    • பேச்சு போட்டியில் ஆங்கிலத்துறை மாணவி லிபியா நாராயணி முதல் பரிசு பெற்றார்.

    திருச்செந்தூர்:

    மும்பை சுயசார்பற்ற நிறுவனங்களின் அமைப்பாளர் ஷெரப் 56-வது நினைவுநாளையொட்டி அகில இ்ந்திய அளவில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியை தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் பேச்சு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியின் பரிசளிப்பு விழாவுக்கு, கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். பொருளியல் துறை தலைவர் சி.ரமேஷ் வரவேற்றார். கல்லூரி செயலாளர் ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். வணிக நிர்வாகவியல் துறை தலைவர் அந்தோணி சகாய சித்ரா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பொருளியல் துறையின் உதவி பேராசிரியை முருகேஸ்வரி நன்றி கூறினார். போட்டியில் நடுவர்களாக பொருளியல் துறை இணை பேராசிரியர் மாலைசூடும் பெருமாள், உதவி பேராசிரியர் கணேசன் மற்றும் வணிகவியல் துறை உதவி பேராசிரியர் ராஜ் பினோ ஆகியோர் செயல்பட்டனர்.

    பேச்சு போட்டியில் முதுகலை 2-ம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவி லிபியா நாராயணி முதல் பரிசாக ரூ.2500-ம், இளங்கலை பொருளியல் 3-ம் ஆண்டு மாணவர் செல்வம் 2-ம் பரிசாக ரூ.1,500-ம், இளங்கலை 3-ம் ஆண்டு வணிக நிர்வாகவியல் மாணவர் முகமது செய்க் மபாஷ் 3-ம் பரிசாக ரூ.1000-ம் பெற்றுக் கொண்டனர். மாணவி ஆஷா மற்றும் மாணவர் கார்த்திக் ராஜ் ஆகியோருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை பொருளியல் துறையின் உதவி பேராசிரியர் வீ.சிவ இளங்கோ தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் மற்றும் மாணவ செயலர்கள் ஜெப்ரின் ஆகாஷ் மற்றும் முகுந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு டைசின் கம்பூயீட்டிங் நிறுவனம் சார்பில் வளாகத் தேர்வு நடைபெற்றது.
    • பிரான்சிஸ் டேவின் போன்வி 7 மாணவர்களுக்கும் பணி நியமன ஆணையை வழங்கினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கணிப்பொறியியல் துறை சார்பாக பல துறைகளை சேர்ந்த 3-ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு டைசின் கம்பூயீட்டிங் நிறுவனம் சார்பில் வளாகத் தேர்வு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன், கணிப்பொறியியல் துறை தலைவர் வேலாயுதம் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் கணிப்பொறியியல் துறை சேர்ந்த ஞானமூர்த்தி, பரமேஸ்வர், பால சதீஷ், கங்காதரன், கார்த்திக் சிவராம், கணிதத் துறையை சேர்ந்த மகாராஜா, பேச்சிமுத்து மற்றும் கணிப்பொறியியல் துறை சுயநிதிப்பிரிவை சேர்ந்த விமல், ஈஸ்வர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    டைசின் கம்பூயூட்டிங் நிறுவனத்தின் தலைமை முதன்மை அதிகாரியும், நிறுவனருமான சுவிச்சர்லாந்தை சேர்ந்த பிரான்சிஸ் டேவின் போன்வி தேர்வான 7 மாணவர்களுக்கும் பணி நியமன ஆணையை வழங்கினார். தேர்வானவர்களை கல்லூரி முதல்வர், செயலர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ‘கிளவுட் கம்ப்யூட்டிங்’ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.
    • தொழில்நுட்ப வல்லுனர் ஆர்.என்.ரவீஷ்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் வழிகாட்டுதல்படி கணினி அறிவியல் (சுயநிதிப்பிரிவு) துறையில் 'கிளவுட் கம்ப்யூட்டிங்' என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பெங்களூரில் மென்பொருள் தொழில்நுட்ப வல்லுனர் ஆர்.என்.ரவீஷ்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். துறைத்தலைவர் ஆ.கவிதா வரவேற்று பேசினார். பேராசிரியர் டி.பெனட் நன்றி கூறினார். விழாவில் பேராசிரியர்கள் ஜெயந்தி, சகாய ஜெயசுதா மற்றும் ஆய்வக உதவியாளர் ஜெயந்தி கலந்து கொண்டனர். மேலும் 2-ம் மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

    • ஆபத்துக்களில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும்? என்று பயிற்சி அளிக்கப்பட்டது.
    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி தன்னார்வலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வேண்டுகோளுக்கு இணங்க, தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை முகமை மூலம் 12 நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாமில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அணி எண்.231 (சுயநிதிப்பிரிவு) மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கத்தை (சுயநிதிப்பிரிவு) சேர்ந்த 20 தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    இவர்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம், பல்வேறு கல்லூரிகள், பள்ளிகளில் வைத்து சிறப்பு பயிற்சியாளர்களை கொண்டு பேரிடர் காலங்களில் ஏற்படும் புயல், மழை, வெள்ளம் மற்றும் தீ ஆகிய ஆபத்துக்களில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும்? என்று பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி தன்னார்வலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார். இந்த மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன், நாட்டுநலப் பணித்திட்ட அதிகாரி ஜெயராமன், இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அதிகாரி பார்வதிதேவி மற்றும் சுயநிதிப்பிரிவு வணிகவியல் துறை தலைவர்கள் சிரில் அருண், திருச்செல்வன், பேராசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    • முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வருகிற 29-ந்தேதி கடைசி நாளாகும்.
    • திருசெந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்புக்கு மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. அரசு உதவிபெறும் கல்லூரியாக இயங்கி வரும் ஆதித்தனார் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்புகளாக எம்.ஏ. பொருளியல், எம்.ஏ. ஆங்கிலம், எம்.எஸ்சி. கணிதம், எம்.எஸ்சி. வேதியியல் (சுயநிதி), எம்.எஸ்சி. விலங்கியல் (சுயநிதி) ஆகிய பிரிவுகளும், எம்.பில். ஆய்வு படிப்புகளாக எம்.பில். ஆங்கிலம், எம்.பில். பொருளியல், எம்.பில். கணிதம், எம்.பில். வேதியியல், எம்.பில். விலங்கியல் ஆகிய பிரிவுகளும் உள்ளன.

    இவற்றில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்கள் ஆதித்தனார் கல்லூரி இணையதளத்தில் (www.aditanarcollege.com) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வருகிற 29-ந்தேதி கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு 04639-220625, 220632 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை, கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    திருசெந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி உறுதிமொழியை படித்தார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்டம் அணி எண்கள் 43, 44, 45, 48, 231 மற்றும் அலுவலக கண்காணிப்பாளர் பொன்துரை, கல்லூரி அலுவலர்கள், மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள் மருதையா பாண்டியன் மற்றும் அபுல்கலாம் ஆசாத் ஆகியோர் செய்திருந்தனர்.

    • சென்னை சைடெக் கணினி மென்பொருள் நிறுவனம் இந்த வளாகத்தேர்வை நடத்தியது.
    • தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பணி நியமன ஆணையை கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் வழங்கினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிப்பொறி அறிவியல் துறை சார்பில் வளாகத்தேர்வு நடைபெற்றது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட சென்னை சைடெக் கணினி மென்பொருள் நிறுவனம் இந்த தேர்வை நடத்தியது. இதில் கணிப்பொறி அறிவியல் துறை மாணவர்கள் சுரேஷ்குமார், குத்தாலிங்கம் ஆகிய 2 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அந்த மாணவர்களுக்கான பணி நியமன ஆணையை கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சைடெக் கணினி மென்பொருள் நிறுவன அதிகாரி கிருஷ்ணன், பேராசிரியர்கள் பாலகிருஷ்ணன், பிரீத்தி, பிருந்தா ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கணிப்பொறி துறை தலைவர் சி.வேலாயுதம் செய்திருந்தார். தேர்வான மாணவர்களை கல்லூரி முதல்வர், செயலர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

    ×