search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மொபைல் போன் பழுதுநீக்கும் பயிற்சி பட்டறை
    X

    பயிற்சி பட்டறை தொடக்கவிழாவின் போது எடுத்தபடம்.

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மொபைல் போன் பழுதுநீக்கும் பயிற்சி பட்டறை

    • ஆதித்தனார் கல்லூரியில்மொபைல் போன் பழுதுநீக்கும் பயிற்சி பட்டறை நடைபெற்றது.
    • நியூடெக்னாலஜிஸ் பயிற்சி நிறுவனம் பயிற்சியை நடத்தியது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இன்ஸ்டியூசன் இன்னோவேசன் கவுன்சில் சார்பாக மொபைல் போன் பழுதுநீக்கும் பயிற்சி பட்டறை கடந்த 7-ந் தேதி முதல் 2 நாட்கள் நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சியில் கவுன்சில் அமைப்பாளர் நித்யானந்த ஜோதி வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வரும், கவுன்சில் தலைவருமான து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி, கவுன்சில் செயல்பாடுகள் குறித்து பேசினார். கல்லூரி செயலர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.

    கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நியூடெக்னாலஜிஸ் பயிற்சி நிறுவனம் பயிற்சியை நடத்தியது. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணகுமார் தலைமையில், அந்த நிறுவனத்தை சேர்ந்த 3 பொறியாளர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். பயிற்சியில் ெமாபைல் போன் உதிரி பாகங்கள் மற்றும் அதன் இயக்கங்களை தெளிவாக மாணவர்களுக்கு விளக்கி கூறினர். இதில் 60 மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வரின் ஆலோசனையின் பேரில் பயிற்சி பட்டறை ஒருங்கிணைப்பாளர் வாசுகி மற்றும் பேராசிரியைகள் முருகேஸ்வரி, ஸ்ரீதேவி, தீபாராணி, பேராசிரியர்கள் தர்மபெருமாள், பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×