search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளாகத்தேர்வு"

    • தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
    • விழாவுக்கு எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் தாளாளர் முருகேசன் தலைமை தாங்கினார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயிலும் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மாணவர்களுக்கு வளாகத்தேர்வு நடத்தப்பட்டது. சென்னையில் உள்ள சால்காம்ப் டெக்னாலஜிஸ் கம்பெனி கலந்து கொண்டு வளாகத்தேர்வை நடத்தியது. தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் தாளாளர் முருகேசன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ராமநாதன் வரவேற்று பேசினார். சால்காம்ப் டெக்னாலஜிஸ் கம்பெனியின் மனிதவள அலுவலர் தட்சணாமூர்த்தி மற்றும் விவேக் ஆகியோர் மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் அனைத்துத்துறை தலைவர்கள் செய்திருந்தனர்.

    • 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு டைசின் கம்பூயீட்டிங் நிறுவனம் சார்பில் வளாகத் தேர்வு நடைபெற்றது.
    • பிரான்சிஸ் டேவின் போன்வி 7 மாணவர்களுக்கும் பணி நியமன ஆணையை வழங்கினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கணிப்பொறியியல் துறை சார்பாக பல துறைகளை சேர்ந்த 3-ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு டைசின் கம்பூயீட்டிங் நிறுவனம் சார்பில் வளாகத் தேர்வு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன், கணிப்பொறியியல் துறை தலைவர் வேலாயுதம் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் கணிப்பொறியியல் துறை சேர்ந்த ஞானமூர்த்தி, பரமேஸ்வர், பால சதீஷ், கங்காதரன், கார்த்திக் சிவராம், கணிதத் துறையை சேர்ந்த மகாராஜா, பேச்சிமுத்து மற்றும் கணிப்பொறியியல் துறை சுயநிதிப்பிரிவை சேர்ந்த விமல், ஈஸ்வர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    டைசின் கம்பூயூட்டிங் நிறுவனத்தின் தலைமை முதன்மை அதிகாரியும், நிறுவனருமான சுவிச்சர்லாந்தை சேர்ந்த பிரான்சிஸ் டேவின் போன்வி தேர்வான 7 மாணவர்களுக்கும் பணி நியமன ஆணையை வழங்கினார். தேர்வானவர்களை கல்லூரி முதல்வர், செயலர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

    • சென்னை சைடெக் கணினி மென்பொருள் நிறுவனம் இந்த வளாகத்தேர்வை நடத்தியது.
    • தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பணி நியமன ஆணையை கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் வழங்கினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிப்பொறி அறிவியல் துறை சார்பில் வளாகத்தேர்வு நடைபெற்றது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட சென்னை சைடெக் கணினி மென்பொருள் நிறுவனம் இந்த தேர்வை நடத்தியது. இதில் கணிப்பொறி அறிவியல் துறை மாணவர்கள் சுரேஷ்குமார், குத்தாலிங்கம் ஆகிய 2 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அந்த மாணவர்களுக்கான பணி நியமன ஆணையை கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சைடெக் கணினி மென்பொருள் நிறுவன அதிகாரி கிருஷ்ணன், பேராசிரியர்கள் பாலகிருஷ்ணன், பிரீத்தி, பிருந்தா ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கணிப்பொறி துறை தலைவர் சி.வேலாயுதம் செய்திருந்தார். தேர்வான மாணவர்களை கல்லூரி முதல்வர், செயலர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

    • காளீஸ்வரி கல்லூரியில் வளாகத்தேர்வு நடந்தது.
    • வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் ராஜீவ் காந்தி வரவேற்றார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரிப் பணி அமர்வு மையத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான வளாகத் தேர்வு நடந்தது.

    வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் ராஜீவ் காந்தி வரவேற்றார். முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.அவர் பேசுகையில், உலக அளவில் எண்ணற்ற வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. நமக்கான வாய்ப்புகள் உருவாகும் பொழுது அதைத் தவறவிடாமல் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

    துணை முதல்வர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினார். சென்னையைச் சேர்ந்த ''டெக்னோ ஸ்கூல்'' நிறுவனம் வளாகத் தேர்வை நடத்தியது. இதில் கணினித் துறைகளைச் சேர்ந்த 15 மாணவர்கள் பங்கு பெற்றனர். நிறுவன மேலாளர் சாமுவேல் மார்டின் நிறுவனத்தின் நோக்கம், அறிமுகம், பணியின் தன்மை குறித்து எடுத்துரைத்தார்.

    பின்னர் நிறுவனத்திற்குத் தேவையான பணியா ளர்களை எழுத்துத்தேர்வு, கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்தார்.

    இந்த வளாகத் தேர்வி ற்கான ஏற்பாடுகளை பணி அமர்வு மையப் பொறுப்பாளர்கள் லட்சுமணக்குமார், ராஜீவ் காந்தி ஆகியோர் செய்திருந்தனர். முனைவர் லட்சுமணக்குமார் நன்றி கூறினார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வளாகத்தேர்வு நடந்தது.
    • பல்வேறு துறையைச் சேர்ந்த 52 மாணவர்கள் பங்கேற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரிப் பணி அமர்வு மையத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான வளாகத் தேர்வு நடந்தது.

    பணிஅமர்வு மையப் பொறுப்பாளர் லட்சுமணக்குமார் வரவேற்றார். துணை முதல்வர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினார்.

    அவர் பேசுகையில், மாணவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பினை முறையாகப் பயன்படுத்த வேண்டும். தகுதி மற்றும் திறமையால் பணி நியமனம் பெற முயற்சிக்க வேண்டும் என்றார்.

    சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் முதன்மை மேலாளர் மங்களா பத்மநாபன் நேர்க்காணலைச் சந்திக்கும் முன்பு மாணவர்களிடையே நிறுவனம் சார்ந்த செயல்பாடுகள் மற்றும் பணி வாய்ப்புகள் குறித்துப் பேசினார்.

    இந்த நிறுவனத்தின் வளாகத் தேர்வில் பல்வேறு துறையைச் சேர்ந்த 52 மாணவர்கள் பங்கேற்றனர்.

    பணி அமர்வு மைய ஒருங்கிணைப்பாளர்கள் லட்சுமணக்குமார், ராஜீவ் காந்தி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். அனைத்துத் துறைச் சார்ந்த பணியமர்வு மைய பொறுப்பாளர்கள் ஒத்துழைப்பு நல்கினர். ஜானகிராமன் நன்றி கூறினார்.

    ×