என் மலர்
உள்ளூர் செய்திகள்

வளாகத்தேர்வில் பங்கேற்றவர்கள்.
காளீஸ்வரி கல்லூரியில் வளாகத்தேர்வு

- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வளாகத்தேர்வு நடந்தது.
- பல்வேறு துறையைச் சேர்ந்த 52 மாணவர்கள் பங்கேற்றனர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரிப் பணி அமர்வு மையத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான வளாகத் தேர்வு நடந்தது.
பணிஅமர்வு மையப் பொறுப்பாளர் லட்சுமணக்குமார் வரவேற்றார். துணை முதல்வர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினார்.
அவர் பேசுகையில், மாணவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பினை முறையாகப் பயன்படுத்த வேண்டும். தகுதி மற்றும் திறமையால் பணி நியமனம் பெற முயற்சிக்க வேண்டும் என்றார்.
சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் முதன்மை மேலாளர் மங்களா பத்மநாபன் நேர்க்காணலைச் சந்திக்கும் முன்பு மாணவர்களிடையே நிறுவனம் சார்ந்த செயல்பாடுகள் மற்றும் பணி வாய்ப்புகள் குறித்துப் பேசினார்.
இந்த நிறுவனத்தின் வளாகத் தேர்வில் பல்வேறு துறையைச் சேர்ந்த 52 மாணவர்கள் பங்கேற்றனர்.
பணி அமர்வு மைய ஒருங்கிணைப்பாளர்கள் லட்சுமணக்குமார், ராஜீவ் காந்தி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். அனைத்துத் துறைச் சார்ந்த பணியமர்வு மைய பொறுப்பாளர்கள் ஒத்துழைப்பு நல்கினர். ஜானகிராமன் நன்றி கூறினார்.