என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
மாணவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்ட காட்சி.
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வளாகத்தேர்வு
By
மாலை மலர்27 July 2022 2:44 PM IST

- சென்னை சைடெக் கணினி மென்பொருள் நிறுவனம் இந்த வளாகத்தேர்வை நடத்தியது.
- தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பணி நியமன ஆணையை கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் வழங்கினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிப்பொறி அறிவியல் துறை சார்பில் வளாகத்தேர்வு நடைபெற்றது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட சென்னை சைடெக் கணினி மென்பொருள் நிறுவனம் இந்த தேர்வை நடத்தியது. இதில் கணிப்பொறி அறிவியல் துறை மாணவர்கள் சுரேஷ்குமார், குத்தாலிங்கம் ஆகிய 2 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அந்த மாணவர்களுக்கான பணி நியமன ஆணையை கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சைடெக் கணினி மென்பொருள் நிறுவன அதிகாரி கிருஷ்ணன், பேராசிரியர்கள் பாலகிருஷ்ணன், பிரீத்தி, பிருந்தா ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கணிப்பொறி துறை தலைவர் சி.வேலாயுதம் செய்திருந்தார். தேர்வான மாணவர்களை கல்லூரி முதல்வர், செயலர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
Next Story
×
X