search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காளீஸ்வரி கல்லூரியில் வளாகத்தேர்வு
    X

    வளாகத் தேர்வில் பங்கேற்ற மாணவர்கள்.

    காளீஸ்வரி கல்லூரியில் வளாகத்தேர்வு

    • காளீஸ்வரி கல்லூரியில் வளாகத்தேர்வு நடந்தது.
    • வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் ராஜீவ் காந்தி வரவேற்றார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரிப் பணி அமர்வு மையத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான வளாகத் தேர்வு நடந்தது.

    வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் ராஜீவ் காந்தி வரவேற்றார். முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.அவர் பேசுகையில், உலக அளவில் எண்ணற்ற வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. நமக்கான வாய்ப்புகள் உருவாகும் பொழுது அதைத் தவறவிடாமல் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

    துணை முதல்வர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினார். சென்னையைச் சேர்ந்த ''டெக்னோ ஸ்கூல்'' நிறுவனம் வளாகத் தேர்வை நடத்தியது. இதில் கணினித் துறைகளைச் சேர்ந்த 15 மாணவர்கள் பங்கு பெற்றனர். நிறுவன மேலாளர் சாமுவேல் மார்டின் நிறுவனத்தின் நோக்கம், அறிமுகம், பணியின் தன்மை குறித்து எடுத்துரைத்தார்.

    பின்னர் நிறுவனத்திற்குத் தேவையான பணியா ளர்களை எழுத்துத்தேர்வு, கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்தார்.

    இந்த வளாகத் தேர்வி ற்கான ஏற்பாடுகளை பணி அமர்வு மையப் பொறுப்பாளர்கள் லட்சுமணக்குமார், ராஜீவ் காந்தி ஆகியோர் செய்திருந்தனர். முனைவர் லட்சுமணக்குமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×