search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆ.எஸ் பாரதி"

    • சனாதானத்தை பேச வேண்டாம் என்று கூறிய கமல்நாத் இன்று பா.ஜனதாவுக்கு சென்றுள்ளார்.
    • தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தி.மு.க. கூட்டணியில் இருக்க வேண்டும் என கருணாநிதி நினைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. சார்பில் உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் தேர்தல் பொதுக்கூட்டம் காலாப்பட்டு தொகுதி கருவடிகுப்பத்தில் நடந்தது.

    கூட்டத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:-

    அமைச்சர் உதயநிதி சனாதத்தை பேசியதில் தவறில்லை. சனாதானத்தை பற்றி நாங்கள் கூறியதை திரும்ப பெற மாட்டோம். அது பற்றி பேச வேண்டாம் என காங்கிரசார் கூறுகின்றனர். கூட்டணியில் தான் இருக்கிறோம்.

    காங்கிரசை காப்பாற்றப்போவது நாம்தான். சனாதானத்தை பேச வேண்டாம் என்று கூறிய கமல்நாத் இன்று பா.ஜனதாவுக்கு சென்றுள்ளார்.

    தேர்தலில் போட்டியிடும்போது வேட்பாளர்கள் சொத்து மதிப்பை பார்க்கிறார்கள். சொத்து மதிப்பு கூடுதலாக இருந்தால் வழக்கும் தொடர்வார்கள்.

    ரவுடி, கொலை செய்தவர்களை எங்கும் தேட வேண்டாம், எல்லோரும் பா.ஜனதா அலுவலகத்தில் உள்ளனர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தி.மு.க. கூட்டணியில் இருக்க வேண்டும் என கருணாநிதி நினைத்தார்.

    ஆனால் சிலர் நம்மோடு அவரை வர விடவில்லை. ஓட்டு பிரிந்தது, அதன் விளைவு தி.மு.க. தோற்றது.

    பிரதமர் மோடி அரசில் ரூ.7.5லட்சம் கோடி கையாடல் செய்ததாக மத்திய தணிக்கை குழு குற்றம் சாட்டியுள்ளது.

    தி.மு.க. ரூ.1 லட்சம் கோடி ஊழல் செய்ததாக கூறியதற்காக 1¾ வருடம் சிறையில் இருந்தோம். தோலை தின்றவனுக்கு 1¾ வருடம் சிறை என்றால், 2024-க்கு பிறகு ஆயுள் கைதியாகத்தான் பிரதமர் மோடி இருப்பார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×