search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவதூறு"

    • தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரை பற்றி வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகிறார்
    • போலீஸ் நிலையம் எதிரில் சத்திய சீலனுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள்.

    விழுப்புரம்:

    வாட்ஸ் அப் குரூப்பில் சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த சத்தியசீலன். வக்கீல். அவர் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து அவர் தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரை பற்றி வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகிறார். இதை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் செஞ்சியை சேர்ந்த வக்கீல்கள் செஞ்சி போலீஸ் நிலையம் மற்றும் துணை போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் புகார் மனு அளித்தனர்.

    மேலும் அவர்கள் போலீஸ் நிலையம் எதிரில் சத்திய சீலனுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். இதில் வக்கீல்கள் கிருஷ்ணன், சக்தி ராஜன், புண்ணியகோட்டி, எவான்ஸ், மணிகண்டன், பிரவீன், சக்திவேல்,பாலசுப்ரமணியன், ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புக்குளம் 7½ என்ற பெயரில் வாட்ஸ் அப் குரூப் ஒன்று வைத்துள்ளனர்.
    • சதுர்த்தி விழாவைக் கிண்டல் செய்து 3 ஆடியோக்களை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.  

    உடுமலை :

    உடுமலையை அடுத்த புக்குளம் பகுதியில் உள்ள சிலர் ஒன்றிணைந்து புக்குளம் 7½ என்ற பெயரில் வாட்ஸ் அப் குரூப் ஒன்று வைத்துள்ளனர். இந்தநிலையில் அதில் உறுப்பினராக உள்ள அதே பகுதியைச் சேர்ந்த சின்னசாமி என்பவரது மகன் ரமேஷ் விநாயகரின் பிறப்பு மற்றும் சதுர்த்தி விழாவைக் கிண்டல் செய்து 3 ஆடியோக்களை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இந்துமத வழிபாட்டை அவதூறாகப் பேசிய இந்த ஆடியோ குறித்து தகவலறிந்த இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் ராஜேஷ் உடுமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் புக்குளம் பகுதியில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் விதமாக போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • புகாரின் பேரில் தென் தாமரைகுளம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
    • அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

    நாகர்கோவில்:

    அகஸ்தீஸ்வரம் அருகே எழுசாட்டு பத்து பகுதியைச் சேர்ந்தவர் ஜெமீன் (வயது 33).

    இவர், குதிரை வளர்த்து வருகிறார். அதனை கொண்டு கன்னியாகுமரியில் கடற்கரைக்கு வரும் பயணிகளை சவாரிக்கு அழைத்து செல்வார்.

    கடந்த சில நாட்களாக இவர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டார்.

    சமூக வலைதளங்களில் இதனை பார்த்த தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் தாமரைபாரதி, தென்தாமரைகுளம் போலீ சில் இதுபற்றி புகார் செய்தார்.

    அதில், முதல்-அமைச்சர் பெயருக்கு களங்கத்தையும், நன்மதிப்பை குலைக்கும் வகையில் கருத்து பதிவிட்டுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் தென் தாமரைகுளம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஜெமீன் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.இந்த நிலையில் நேற்று இரவு ஜெமீன் கைது செய்யப்பட்டார்.

    அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

    • தொல்.திருமாவளவன் குறித்து சமூக வலைதளங்களில் ஆபாசமாக அவதூறு பரப்புவதாக திருப்பூர் மாவட்டம் அவினாசி போலீஸ் நிலையத்தில் அக்கட்சியினா் புகாா் அளித்தனா்.
    • இது குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

    அவினாசி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவரும், சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் குறித்து சமூக வலைதளங்களில் ஆபாசமாக அவதூறு பரப்புவதாக திருப்பூர் மாவட்டம் அவினாசி போலீஸ் நிலையத்தில் அக்கட்சியினா் புகாா் அளித்தனா்.

    இது குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இதில் அ.தி.மு.க. அவினாசி வடக்கு ஒன்றிய துணைச்செயலாளரும், அவினாசி அருகே புஞ்சைதாமரைக்குளம் ஊராட்சி மன்றத் தலைவருமான சரவணகுமாா் மற்றும் சென்னையை சோ்ந்த ரம்யா தமிழ் என்ற முகநூல் முகவரியில் இயங்கி வரும் பிரமுகா் ஆகியோா் அவதூறு பரப்புவது தெரியவந்தது.

    இதைத்தொடா்ந்து அவினாசி போலீசார் சரவணகுமாரை கைது செய்தனா். மேலும் சென்னை ரம்யா தமிழ் என்ற முகநூல் தொடா்புடையவா் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

    • மது போதையில் தகாத வார்த்தை பேச்சு
    • போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கன்னியாகுமரி:

    பேச்சிபாறை அருகே காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயசுதா (வயது 37) இவரின் வீட்டுக்கு செல்லும் பாதை குறுகலான பாதையாகும்.

    இந்த வழியாக சாரோடு வலியவிளை பகுதியை சேர்ந்த ஹாஜு (வயது 27) தனது பாட்டி வீட்டுக்கு செல்வதற்க்கு இரு சக்கர வாகனத்தில் வந்தார். அப்போது எதிரே வந்த ஜெயசுதாவை மது போதையில் தகாத வார்த்தை பேசி அவமானபடுத்தியிருக்கிறார்.

    ஜெயசுதா பேச்சிபாறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் போலிசார் விசாரனை செய்து ஹாஜுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×