search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேச்சிபாறை"

    • கன்னிபூ சாகுபடிக்காக பேச்சிபாறை அணை கடந்த 1-ந்தேதி திறக்கப்பட்டது
    • சானல்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டதையடுத்து விவசாயிகள் சாகுபடி பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் விவசாயிகள் கன்னி பூ சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.கன்னிபூ சாகுபடிக்காக பேச்சிபாறை அணை கடந்த 1-ந்தேதி திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பெருஞ்சாணி அணையில் இருந்தும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து நேற்று குறைவான அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து 223 கன அடி தண்ணீர் வெளியேற்றபடுகிறது. பெருஞ்சாணி அணையில் இருந்தும் 575 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் 798 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தோவாளை சானல், அனந்தனார் சானல்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சானல்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டதையடுத்து விவசாயிகள் சாகுபடி பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார்
    • சப்பாத்து பாலம், மாத்தூர் தொட்டில் பாலம் ஆகிய பகுதிகளையும் ஆய்வு செய்தார்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் பழங்குடி மக்கள் மற்றும் சமத்துவபுரம் மக்களுடன் தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரிய கருப்பன் நேற்று கலந்துரையாடியதுடன் சமத்துவபுரம் குடியிருப்பு வீடுகளையும் பார்வையிட்டார். அப்போது நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    தொடர்ந்து சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் காட்சி மற்றும் விற்பனை அரங்கை பார்வையிட்டு, விற்பனை நிலவரங்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்தார். அதை தொடர்ந்து அருவிக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட சப்பாத்து பாலம், மாத்தூர் தொட்டில் பாலம் ஆகிய பகுதிகளையும் அமைச்சர் பெரிய கருப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்த அ.தி.மு.க. ஆட்சியின் நிர்வாக சீர்கேடுகளாலும், நிர்வாக திறமையின்மையாலும் தமிழகத்தின் முன்னேற்றம் பாழ்பட்டுள்ளது. அதனை சீரமைத்து தமிழகத்தை நம்பர் 1 மாநிலமாக மாற்றும் முயற்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். அதற்காக அவருக்கு அனைத்துத் துறைகளும் ஒத்துழைப்பு கொடுப்பது அவசியமாக உள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 4 சமத்துவபுரங்களில் முதற்கட்டமாக 2 சமத்துவபுரங்களில் மறுசீரமைப்பு பணிகளுக்கு ரூ.1.348 கோடி நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.

    இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டம் தான் சமத்துவபுரம் திட்டம். ஒரு மாநிலத்தில் தொழில்வளர்ச்சி, வேலை வாய்ப்புகள் பெருக வேண்டுமென்றால் அம்மாநிலத்தில் அமைதியான சூழல் நிலவ வேண்டும். அதற்கு மக்களை ஜாதி மத வேறுபாடின்றி வாழ வைக்கும் திட்டம் தான் இந்த சமத்துவபுரங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் அரவிந்த், மகளிர் திட்ட இயக்குனர் திவ்ய தர்ஷினி, ஊரக வளர்ச்சித் துறை நிர்வாக இயக்குநர் நரேஷ் அகமது, பத்மநாபுரம் சப் - கலெக்டர் அலர்மேல் மங்கை, நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், ஆணையாளர் கீதா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், பேச்சிப்பாறை ஊராட்சித் தலைவர் தேவதாஸ்,

    முன்னாள் எம்.எல்.ஏ புஷ்ப லீலாஆல்பன், திருவட்டார் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜாண்சன், குலசேகரம் பேருராட்சி துணைத் தலைவர் ஜோஸ் எட்வர்ட், மேற்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் ஜெஸ்டின்பால்ராஜ், குமரி மேற்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அலாவுதீன், பொன்மனை கூட்டுறவு வங்கி நிர்வாக குழு உறுப்பினர் சுருளோடு சுரேஷ், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஜே எம்.ஆர். ராஜா, மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மது போதையில் தகாத வார்த்தை பேச்சு
    • போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கன்னியாகுமரி:

    பேச்சிபாறை அருகே காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயசுதா (வயது 37) இவரின் வீட்டுக்கு செல்லும் பாதை குறுகலான பாதையாகும்.

    இந்த வழியாக சாரோடு வலியவிளை பகுதியை சேர்ந்த ஹாஜு (வயது 27) தனது பாட்டி வீட்டுக்கு செல்வதற்க்கு இரு சக்கர வாகனத்தில் வந்தார். அப்போது எதிரே வந்த ஜெயசுதாவை மது போதையில் தகாத வார்த்தை பேசி அவமானபடுத்தியிருக்கிறார்.

    ஜெயசுதா பேச்சிபாறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் போலிசார் விசாரனை செய்து ஹாஜுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×