search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவசர நிலை"

    • மோதல் அதிகரித்து வருவதை தொடர்ந்து அவசரகால நிலை பிரகடனம் செய்து அந்த நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
    • பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    எத்தியோப்பியாவில் 2-வது பெரிய பிராந்தியமான அம்ஹாராவில் ராணுவத்துக்கும், உள்ளூர் பானோ போராளிகளுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.

    இந்த மோதல் அதிகரித்து வருவதை தொடர்ந்து அவசரகால நிலை பிரகடனம் செய்து அந்த நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோதலை கட்டுப்படுத்துவது கடினமாகி விட்டதால் அவசர நிலையை பிரகடனப்படுத்துவது அவசியம் என்று தெரிவித்துள்ளது.

    பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வாரண்ட் இன்றி கைது செய்யும் ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

    • நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் பல மாதங்கள் ஆகும்.
    • தொலைதூர பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் மீட்புப் பணிகளை மேற்கொள்வது கடும் சவாலாக உள்ளது.

    இஸ்தான்புல்:

    துருக்கி-சிரியா எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5000ஐ தாண்டி உள்ளது. மீட்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தோண்டத் தோண்ட சடலங்கள் கிடைத்தவண்ணம் உள்ளது. உயிரிழப்பு இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு வருத்தம் தெரிவித்துள்ளது.

    சிரியாவிற்கு அருகிலுள்ள தொலைதூர பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் மீட்புப் பணிகளை மேற்கொள்வது கடும் சவாலாக உள்ளது. பனிப்பொழிவால் சில சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் உதவிப்பொருட்களை விரைவாக கொண்டு செல்ல முடியவில்லை.

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் பல மாதங்கள் ஆகும். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 தென்கிழக்கு மாகாணங்களில் 3 மாதங்களுக்கு அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார் அதிபர் தாயிப் எர்டோகன். மீட்பு பணிகளை விரைந்து முடிப்பதற்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறி உள்ளார்.

    100 ஆண்டுகளில் இல்லாத அளவில் நிலநடுக்கத்தால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், எர்டோகனின் அரசாங்கம் மிகவும் மந்தமாக பணி செய்வதாக சமூக ஊடகங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். எனவே, எர்டோகன் அதிரடியாக அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார்.

    • இலங்கையில் அவசர நிலை சட்டம் அமலில் உள்ளது.
    • இது ஆகஸ்ட் 14 வரை நீட்டிக்கப்படுகிறது.

    கொழும்பு:

    இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பிய நிலையில், இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.

    ஆனாலும் ரணில் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் பொதுச் சொத்துகள் பாதுகாப்பு, பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள், சேவை விநியோகம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு இலங்கையில் மீண்டும் அவசர நிலையை ரணில் விக்ரமசிங்க கடந்த 19-ம் தேதி அறிவித்தாா். அதன்பின், நடந்த முடிந்த அதிபர் தேர்தலிலும் ரணில் விக்ரமசிங்க முதல்முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனாலும், பொருளாதார நெருக்கடியால் கொழும்பில் உள்ள அதிபர் மாளிகை முன் ரணில் பதவி விலகவேண்டும் என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், அமலில் உள்ள அவசர நிலை சட்டம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதால், மும்பை விமான நிலையத்தில் முழு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. #AirIndia #MumbaiIndia
    மும்பை:

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து இன்று மாலை மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. இரவு 8.15 மணிக்கு விமானம் தரையிறங்க முயன்ற போது, பிரேக் பகுதியில் உள்ள ஹைட்ராலிக் இயங்கவில்லை. இதனால், விமான நிலையத்தில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது.

    தீயணைப்பு, மருத்துவம் உள்ளிட்ட குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. 15 நிமிடங்களுக்கு பின்னர் விமானம் பத்திரமாக தரையிறங்கியதை அடுத்து, விமான நிலையம் இயல்பு நிலைக்கு திரும்பியது. 
    ×