search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு ஊழியர்"

    • மேல்மலையனூரில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த அரசு ஊழியர் பலியானார்.
    • கடந்த 3-ந் தேதி அலுவலகத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜாமணி (வயது 57) மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம நல அலுவலராக பணிபுரிந்து வந்தார். கடந்த 3-ந் தேதி அலுவலகத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக சாலை ஓரத்திலிருந்த சிமெண்ட் கட்டை மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராஜமணியை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.பின்பு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ராஜாமணி இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விழுப்புரம் அருகே அரசு ஊழியரை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தினார்.
    • புகாரின்பேரில், அளித்த வளவனூர் போலீசார் வழக்குப் பதிந்து ஸ்டாலினை கைது செய்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே புலவனூரைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். திறந்த வெளி நெல் கொள்முதல் நிலைய பில் கலெக்டர். இவர், சிறுவந்தாடு அடுத்த ப.வில்லியனுார் பகுதியில் நெல் கொள்முதல் பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு கஞ்சா போதையில் வந்த ப.வில்லியனுார் காலனி பகுதியைச் சேர்ந்த அரசு மகன் ஸ்டாலின்திடீரென சிறிய கத்தியால், புஷ்பராஜ் தோள்பட்டை யில் குத்தினார். காயம்டைந்த அவர், விழுப்புரம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். புகாரி ன்பேரில், அளித்த வளவனூர் போலீசார் வழக்குப் பதிந்து ஸ்டாலினை கைது செய்தனர்.

    • விழுப்புரத்தில் துணிகரம் அரசு போக்குவரத்து கழக ஊழியர் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.
    • சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்று விட்டு இன்று காலை தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் அருகே சாலா மேடு தந்தை பெரியார் நகர் கிருஷ்ணா சதுக்கம் பகுதியை சேர்ந்தவர் சீனுவாசன் (வயது 65) இவர் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்று விட்டு இன்று காலை தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து குத்துவிளக்கு சந்தன கிண்ணம் போன்ற அரை கிலோ வெள்ளி பொருட்கள், 3 பவுன் நகை, மற்றும் 40 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து சீனிவாசன் விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். தகவல் இந்த விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திருட்டு சம்பந்தமாக தடவிகள் நிபுணர்களும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. தடையவியள் நிபுணர்கள் தடயங்களை சேகரித்து வருகின்றனர். மோப்பநாய் திருட்டு நடந்த வீட்டிலிருந்து சிறிது தூரம் மோப்பம் பிடித்து சென்று நின்றது யாரையும் கவி பிடிக்கவில்லை. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர் திருட்டு சம்பவங்கள் அந்த பகுதியில் அதிகளவில் நிலவுவதால் அப்பகுதியில் வாழும் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    • கொள்ளையனின் கைரேகை சிக்கியது
    • 2 தனிப்படைகள் அமைப்பு

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் அருகே உள்ள குளத்தூரை சேர்ந்தவர் வள்ளிவேல் (வயது 52).

    இவர் கோட்டார் ஆயுர்வேத மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள மாவட்ட குடும்ப நல செயலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு செல்வி (45) என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    நேற்று காலையில் வள்ளிவேல் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். மனைவியும், பிள்ளைகளும் வீட்டை பூட்டிவிட்டு ராஜாக்கமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர்.

    பின்னர் வள்ளி வேல் மதியம் 2 மணிக்கு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்தபோது வீட்டில் பின்ப க்கம் சமையல் அறை யில் உள்ள ஜன்னல் உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடந்தது. பீரோவில் இருந்த 11 பவுன் எடை கொண்ட 2 செயின்களை யாரோ கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர். அதன் மதிப்பு ரூபாய் 3 லட்சத்து 30 ஆயிரம் ஆகும்.

    வீட்டில் ஆள் இல்லா ததை நோட்டமிட்ட யாரோ மர்மநபர்கள் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை திருடி சென்றுள்ளனர். வள்ளிவேல் மற்றும் செல்வி தங்க நகைகளை சிறிய சிறிய பெட்டிகளில் அடைத்து பீரோவில் துணிக்கு இடையில் பல இடங்களில் வைத்துள்ளனர்.

    இதனால் மறைவான இடங்களில் இருந்த 29 பவுன் நகைகள் திருடர் கள் கண்ணில் சிக்காமல் தப்பியது. மேலும் இது குறித்து வள்ளிவேல் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பி ரண்டு ராஜா மற்றும் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கைரேகை நிபு ணர்களும் வரவழைக் கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. அதில் கொள்ளையனின் ஒரு கைரேகை சிக்கி உள்ளது.

    அந்த கைரேகையை வைத்து இதற்கு முன்னால் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்களின் கைரே கையுடன் ஒப்பிட்டு பார்த்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    கொள்ளையர்களை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 7 முனை பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு துவங்கியது.
    • மாவட்ட செயலாளர் அ.தி.அன்பழகன் பிரச்சார இயக்கத்தின் நோக்கத்தை எடுத்துரைத்தார்.

    நாகப்பட்டினம்:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 7 முனை பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கான பிரச்சாரம் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு துவங்கியது.

    மாவட்ட துணைத் தலைவர் கே.இராஜூ தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் வி.எஸ்.ராமமூர்த்தி வரவேற்றார். மாவட்ட செயலாளர் அ.தி.அன்பழகன் பிரச்சார இயக்கத்தின் நோக்கத்தை எடுத்துரைத்தார். மாநிலச் செயலாளர் சா.டேனியல் ஜெயசிங், மாநில துணைத் தலைவர் ஏ.பெரியதாக ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    மாவட்ட நிர்வாகிகள் எம்.மேகநாதன், எஸ்.துர்க்காம்பிகா, மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் வி.சித்ரா, மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.அற்புதராஜ் ரூஸ்வெல்ட், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் து.இளவரசன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் வேல் கண்ணன், ஓய்வூதியர் சங்க நிர்வாகி எம்.ஜி.ராமமூர்த்தி, சத்துணவு ஊழியர் சங்க செயலாளர் ப.அருள்விழி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர். மாவட்டப் பொருளாளர் ப.அந்துவன் சேரல் நன்றி கூறினார்.

    ×