

விழுப்புரம்:
விழுப்புரம் அருகே சாலா மேடு தந்தை பெரியார் நகர் கிருஷ்ணா சதுக்கம் பகுதியை சேர்ந்தவர் சீனுவாசன் (வயது 65) இவர் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்று விட்டு இன்று காலை தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து குத்துவிளக்கு சந்தன கிண்ணம் போன்ற அரை கிலோ வெள்ளி பொருட்கள், 3 பவுன் நகை, மற்றும் 40 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து சீனிவாசன் விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். தகவல் இந்த விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திருட்டு சம்பந்தமாக தடவிகள் நிபுணர்களும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. தடையவியள் நிபுணர்கள் தடயங்களை சேகரித்து வருகின்றனர். மோப்பநாய் திருட்டு நடந்த வீட்டிலிருந்து சிறிது தூரம் மோப்பம் பிடித்து சென்று நின்றது யாரையும் கவி பிடிக்கவில்லை. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர் திருட்டு சம்பவங்கள் அந்த பகுதியில் அதிகளவில் நிலவுவதால் அப்பகுதியில் வாழும் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.