search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமராவதிஅணை"

    • நெல், கரும்பு, தென்னை உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.
    • பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்காமலும் கால்நடைகளுக்கு தேவையான தண்ணீர் இல்லாமல் வறட்சியினால் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகிறோம்.

    உடுமலை

    தாராபுரத்தில் உள்ள அமராவதி வடிநீர் கோட்ட நீர்நிலை பாசன செயற்பொறியாளரிடம் அமராவதி பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    அமராவதி அணை பிரதான கால்வாய் பாசன பகுதிகளில் நெல், கரும்பு, தென்னை உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. பருவமழை பொய்த்ததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததோடு பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமலும் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்காமலும் கால்நடைகளுக்கு தேவையான தண்ணீர் இல்லாமல் வறட்சியினால் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகிறோம்.

    எனவே அமராவதி அணையின் நீர்மட்டத்தை கருத்தில் கொண்டு பிரதான கால்வாய் பாசன பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெல், கரும்பு, தென்னை உள்ளிட்ட பயிர்களை காப்பாற்றுவதற்காக 20 நாட்கள் மட்டும் தண்ணீர் திறந்து விட வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    • உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டு உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள 8 ராஜ வாய்க்கால் பாசன நிலங்களுக்கு மட்டும் ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளது.
    • சுற்றுக்கள் அடிப்படையில் வருகிற செப்டம்பர் 28 வரை நீர் வழங்கப்பட உள்ளது.

    உடுமலை:

    உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் வழியோர கிராமங்களின் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும் உள்ளது.தென் மேற்கு பருவ மழை துவங்கி, அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால், கடந்த ஜூலை 15-ந்தேதி அணை நிரம்பியது.

    தொடர்ந்து அணை நீர்வரத்தை பொறுத்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது.அமராவதி அணையிலிருந்து ஆறு மற்றும் பிரதான கால்வாயில் கடந்த இரு மாதமாக உபரி நீர் திறக்கப்பட்டு வந்ததால் பாசன நிலங்கள் பயன்பெற்று வந்தன. இந்நிலையில் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்து அணைக்கு நீர்வரத்தும் குறைந்துள்ளது. இதனால் உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டு உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள 8 ராஜ வாய்க்கால் பாசன நிலங்களுக்கு மட்டும் ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளது.

    அமராவதி அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட, 8 ராஜ வாய்க்கால்களான கல்லாபுரம், ராமகுளம், கொமரலிங்கம், கண்ணாடிப்புத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு வாய்க்கால்களுக்குட்பட்ட 7,520 ஏக்கர் நிலங்களில் குறுவை நெல் சாகுபடிக்கு கடந்த மே 16ல் தண்ணீர் திறக்கப்பட்டது.

    சுற்றுக்கள் அடிப்படையில் வருகிற செப்டம்பர் 28 வரை நீர் வழங்கப்பட உள்ளது. இதில் அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில் திருப்பூர், கரூர் மாவட்டங்களில், தாராபுரம், கரூர், அரவக்குறிச்சி தாலுகாவில் அலங்கியம் முதல் கரூர் வரை வலது கரையிலுள்ள 10 பழைய வாய்க்கால் பாசனத்துக்கு உட்பட்ட 21 ஆயிரத்து 867 ஏக்கர் நிலங்களுக்கு முறைப்படி பாசனத்திற்கு நீர் திறக்கவில்லை.அதே போல் புதிய ஆயக்கட்டு பாசனத்தில், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவிலுள்ள, 25 ஆயிரத்து 250 ஏக்கர் நிலங்களுக்கு முறைப்படி பாசனத்திற்கு நீர் திறக்கப்படவில்லை.

    அமராவதி அணையின் வாயிலாக பயன்பெறும், மீதமுள்ள பழைய ஆயக்கட்டு பாசன நிலங்கள் மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்கள் என 47 ஆயிரத்து 117 ஏக்கர் நிலங்களில் பயிர் சாகுபடி செய்யும் வகையில், தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அதன் அடிப்படையில் சுற்றுக்கள் அடிப்படையில் தண்ணீர் திறக்க அரசுக்கு, கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது.

    அதன்படி திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை சார்ந்த 10 அமராவதி பழைய வாய்க்கால்களின் (அலங்கியம் முதல் கரூர் வலது கரை வரை) பாசனப் பகுதிகளில் உள்ள நிலங்களுக்கு அமராவதி ஆற்று மதகு வழியாக 5 ஆயிரத்து 443 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், திருப்பூர் மாவட்டத்திலுள்ள புதிய பாசன நிலங்களுக்கு அமராவதி பிரதானக் கால்வாய் வழியாக 2 ஆயிரத்து 661 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் ஆக மொத்தம் 8 ஆயிரத்து 104 மில்லியன் கன அடிக்கு மிகாமல் இன்று முதல் 7.2.2023 வரை 135 நாட்களுக்கு (70 நாட்கள் தண்ணீர் திறப்பு 65 நாட்கள் அடைப்பு) என்ற அடிப்படையில் சம்பா சாகுபடிக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டது. இதையடுத்து அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 47 ஆயிரத்து 117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    • 35 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
    • தென்மேற்கு பருவமழை எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

    உடுமலை:

    உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இதன் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 35 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன. தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை அணைக்கு முக்கிய நீராதாரமாக உள்ளது. ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இன்னும் தொடங்காததால் குறைந்த அளவே நீர்வரத்து உள்ளது .அணையின் நீர்மட்டம் தற்போது 63 அடி என்ற அளவிலேயே உள்ளது .ஆனால் கடந்த ஆண்டு இதே நாளில் நீர்மட்டம் 77.30 அடியாக இருந்தது.கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை காலத்தில் அணை நிரம்பி வழிந்தது .எனவே தென்மேற்கு பருவமழை எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

    • மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து இல்லாமல் இருந்தது.
    • அணைக்கு வினாடிக்கு 430 கன அடி நீர் வரத்து உள்ளது .


    உடுமலை:

    உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து இல்லாமல் இருந்தது. இதற்கிடையே பாசனத்துக்காக தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் நீர்மட்டம் வெகுவாக குறைந்து 62 அடியாக இருந்தது.

    இந்நிலையில் 5 மாத இடைவெளிக்குப் பின் நேற்று முன்தினம் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதுகுறித்து பொதுப்பணித் துறையினர் கூறும்போது, அமராவதி அணையின் உயரம் 90 அடி. 4 டிஎம்சி நீர் கொள்ளளவு கொண்டது.

    தற்போதைய நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 430 கன அடி நீர் வரத்து உள்ளது .அணையின் நீர்மட்டம் 63 அடியாக உள்ளது என்றனர்.




    ×