search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்மேற்கு பருவமழை தாமதத்தால் அமராவதி அணைக்கு   நீர்வரத்து குறைந்தது
    X
    அமராவதி அணையில் குறைந்த நீர்வரத்து. 

    தென்மேற்கு பருவமழை தாமதத்தால் அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைந்தது

    • 35 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
    • தென்மேற்கு பருவமழை எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

    உடுமலை:

    உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இதன் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 35 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன. தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை அணைக்கு முக்கிய நீராதாரமாக உள்ளது. ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இன்னும் தொடங்காததால் குறைந்த அளவே நீர்வரத்து உள்ளது .அணையின் நீர்மட்டம் தற்போது 63 அடி என்ற அளவிலேயே உள்ளது .ஆனால் கடந்த ஆண்டு இதே நாளில் நீர்மட்டம் 77.30 அடியாக இருந்தது.கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை காலத்தில் அணை நிரம்பி வழிந்தது .எனவே தென்மேற்கு பருவமழை எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

    Next Story
    ×