search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனைத்துக்கட்சி கூட்டம்"

    • இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும் என தமிழக எம்பிக்கள் கோரிக்கை.
    • அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய மந்திரிகள் விளக்கம் அளிக்க உள்ளனர்.

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக இன்று காலை டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. 

    பாராளுமன்ற கட்டிடத்தில் நடந்த இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய நாடாளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி, காங்கிரஸ் எம்.பி.க்கள் மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், மற்றும் பலர் கலந்து கொண்டனர். தமிழக கட்சிகள் சார்பில் அ.தி.மு.க. எம்.பி. டாக்டர் எம். தம்பிதுரை, தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். 


    இந்த கூட்டத்தில், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும் என தமிழக எம்பிக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து இலங்கையின் தற்போதைய சூழல் குறித்து விவாதிக்க செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளதாக பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

    இந்த கூட்டத்தில் இலங்கை பிரச்சனை மற்றும் மத்திய அரசின் உதவிகள் தொடர்பாக மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், எஸ் ஜெய்சங்கர் ஆகியோர் விளக்கம் அளிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    காவிரி விவகாரத்தில் மத்திய அரசு வரைவு திட்டத்தை இன்று தாக்கல் செய்துள்ள நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #CauveryIssue #MKStalin
    சென்னை:

    காவிரி விவகாரத்தில் மத்திய அரசு வரைவு திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டில் இன்று தாக்கல் செய்தது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் மற்றும் நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை கண்காணிப்பது இந்த அமைப்பின் பணியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அதிகாரம் பொருந்திய அமைப்பாக மட்டும் இருந்தால் மட்டுமே அதனை தமிழகம் ஏற்கவேண்டும் என அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இது தொடர்பாக திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதவது:-

    காவிரி விவகாரத்தில் தொடர் கண்டனங்களிலிருந்து தப்பிக்க, தனது வரைவு திட்ட விவரங்களை மத்திய அரசு சமர்ப்பித்திருக்கும் நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வலியுறுத்தும் வகையில் நாளையே அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் கூட்டத்தை மாநில அரசு கூட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
    ×