என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆபரேசன் சிந்தூர் தொடர்பாக டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது
    X

    ஆபரேசன் சிந்தூர் தொடர்பாக டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது

    • பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது.
    • திமுக சார்பில் டி.ஆர். பாலு பங்கேற்றுள்ளார். .

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை இந்தியா நடத்தப்பட்டது. சுமார் 25 நிமிடங்கள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

    இதனிடையே, ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக இந்திய ராணுவம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக மத்திய அமைச்சரவை கூடி ஆலோசனை நடைபெற்றது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது.

    பாராளுமன்ற நூலக கட்டிடத்தில் உள்ள கமிட்டி அறையில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் இக்கூட்டம் நடந்தது.

    இதில் உள்துறை மந்திரி அமித்ஷா, மற்றும் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், எஸ். ஜெய்சங்கர், ஜே.பி.நட்டா, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே.

    தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு, திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த சந்தீப் பந்தோபாத்யாய், சமாஜ்வாடி கட்சியின் ராம் கோபால் யாதவ், ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங், சிவசேனாவின் (உத்தவ் தாக்கரே அணி) சஞ்சய் ராவத், தேசிய காங்கிரஸ் கட்சியின் (சரத்பவார்) சுப்ரியா சுலே, பிஜு ஜனதா தளத்தை சேர்ந்த சஸ்மித் பத்ரா.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஜான் பிரிட்டாஸ், ஜே.டி(யு) தலைவர் சஞ்சய் ஜா, மத்திய அமைச்சரும் எல்.ஜே.பி (ராம் விலாஸ்) தலைவருமான சிராக் பாஸ்வான், ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஓவைசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீதான இந்திய ராணுவத்தின் தாக்குதல் குறித்து மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்.

    தாக்குதல் எவ்வாறு நடந்தது, அதற்கு பயன்படுத்தப்பட்ட விமானங்கள் உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்டது. தாக்குதலில் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×