என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

SIR நடவடிக்கைக்கு எதிராக வரும் நவ.2ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்
- அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டணி கட்சிகளுடன் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
- அவசர ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வாக்காளர் பாட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக முதலமைச்சர் அவசர ஆலோசனை நடத்தினார்.
முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனையில் காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், வைகோ, தங்கபாலு, வேல்முருகவ், வீரபாண்டியன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.
அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டணி கட்சிகளுடன் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
வாக்காளர் பட்டியல் இன்றிரவே முடக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து முதல்வர் அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதில்," SIR என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித்திட்டத்திற்கு எதிராக போராட வேண்டும்.
SIR-க்கு எதிராக போராட வேண்டும்" என்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளது.
இதனால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து ஆலோசிக்க வரும் நவம்பர் 2ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.






