என் மலர்tooltip icon

    இந்தியா

    வருகிற 19-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம்- மத்திய அரசு அறிவிப்பு
    X

    வருகிற 19-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம்- மத்திய அரசு அறிவிப்பு

    • வழக்கமாக ஒவ்வொரு கூட்டத்தொடருக்கு முன்பாக ஆளுங்கட்சி, அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தும்.
    • சில முக்கியமான மசோதாக்களை அறிமுகப்படுத்த இருப்பதால் கூட்டத்தொடர் நீட்டிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    பஹல்காம் தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்தியா பதிலடி கொடுத்த விவகாரம், இந்த விஷயத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலையிட்டது, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துச்சொன்னது போன்ற விஷயங்கள் குறித்து விவாதிக்க பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. ஆனால் மத்திய அரசு இதனை கண்டுகொள்ளவில்லை.

    இதற்கிடையே பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கி ஆகஸ்டு 12-ந்தேதி வரை நடைபெறும் என கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

    இதன் அடிப்படையில் கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வழக்கமாக ஒவ்வொரு கூட்டத்தொடருக்கு முன்பாக ஆளுங்கட்சி, அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தும். அதன்படி இந்த மழைக்கால கூட்டத் தொடரை முன்னிட்டு அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    அனைத்துக்கட்சி கூட்டம் வருகிற 19-ந்தேதி நடைபெறும் என பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×