என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Voters Delisting"

    • வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவசர அவசரமாக செய்யக் கூடாது.
    • தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தின.

    தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நாளை (4-ந்தேதி) முதல் தொடங்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

    இதையொட்டி ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார். அதன் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற உள்ளது.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவசர அவசரமாக செய்யக் கூடாது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவ மழை பெய்து வரும் காலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை செய்வது சிரமம். எனவே கால அவகாசம் கொடுத்து செய்ய வேண்டும். இப்போது இதை செய்வது சரியானது அல்ல என்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தின.

    ஆனாலும் தேர்தல் கமிஷன் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. திட்டமிட்டபடி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் ஜனநாயக, சட்டவிரோாத SIR நடவடிக்கையை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக இன்று மனுத் தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    SIR நடவடிக்கைக்கு எதிராக கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை கண்காணிப்பது குறித்து இபிஎஸ் ஆலோசனை.
    • மாவட்ட பொறுப்பாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்தினார்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று மாவட்ட பொறுப்பாளர்களுடன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    எஸ்ஐஆர் பணிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்தினார்.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை கண்காணிப்பது குறித்து இபிஎஸ் ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், நவம்பர் 4ம் தேதி தொடங்க உள்ள வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகளில் பூத் கமிட்டி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என அதிமுக ஐடி பிரிவு பொறுப்பாளர்களுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

    • சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
    • உச்சநீதிமன்றத்தை நாட இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

    SIR நடவடிக்கைக்கு எதிராக இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்று தங்கள் உணர்வை பதிவு செய்த 49 கட்சி தலைவர்களுக்கும் நன்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறித்து, ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் நோக்கோடு அவசரகதியில் மேற்கொள்ளப்படும் #SIR-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!

    வாக்காளர் பட்டியல் திருத்தத்தைக் குழப்பங்கள் - ஐயங்கள் இல்லாமல் போதிய கால அவகாசத்துடன், 2026 பொதுத் தேர்தலுக்குப் பின்பு நடத்த வேண்டும் என்ற நமது கோரிக்கையை #ECI ஏற்காததால், உச்சநீதிமன்றத்தை நாட இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

    அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுத் தங்களுடைய உணர்வைப் பதிவு செய்த 49 கட்சிகளின் தலைவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இக்கூட்டத்தில் பங்கேற்காதவர்களும் தங்களுடைய கட்சிகளில் SIR குறித்து விவாதித்து, ஜனநாயகத்தைக் காத்திடும் முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அனைத்துக் கட்சி கூட்டம் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று பேசினார்.

    தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நாளை மறுநாள் (4-ந்தேதி) முதல் தொடங்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

    இதையொட்டி ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார். அதன் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற உள்ளது.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவசர அவசரமாக செய்யக் கூடாது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவ மழை பெய்து வரும் காலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை செய்வது சிரமம். எனவே கால அவகாசம் கொடுத்து செய்ய வேண்டும். இப்போது இதை செய்வது சரியானது அல்ல என்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஏற்கனவே அறிவித்திருந்தன.

    ஆனாலும் தேர்தல் கமிஷன் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. திட்டமிட்டபடி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி ஆலோசிக்கப்படும் என்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் கூட்டாக அறிவித்து இருந்தது.

    அதன்படி இன்று காலை 10 மணிக்கு சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கார்டு ஓட்டலில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள 64 கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத் தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தே.மு.தி.க. சார்பில் பார்த்தசாரதி,

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர்மொய்தீன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், துணை பொதுச் செயலாளர் சத்ரியன் வேணுகோபால், கொ.ம.தே.க. தலைவர் ஈஸ்வரன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாகிருல்லா உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க, டாக்டர் அன்புமணி (பா.ம.க.), டி.டி.வி.தினகர னின் அ.ம.மு.க. ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.

    அழைப்பு அனுப்பப்பட்ட கட்சிகளில் விஜய்யின் த.வெ.க., டாக்டர் ராமதாசின் பா.ம.க. சீமானின் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் பங்கேற்காமல் புறக்கணித்தன.

    கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று பேசினார்.

    அதன்பிறகு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை இந்த கால கட்டத்தில் நடத்துவது சரியாக இருக்காது என்றும் இதனை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் வலியுறுத்தினார்கள். ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் தங்களது நிலைப்பாடுகளை விளக்கி பேசினார்கள்.

    வாக்காளர் பட்டியல் சீரமைக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் அதனை அவசர அவசரமாக செய்யக் கூடாது. கால அவகாசம் கொடுத்து செய்ய வேண்டும். நடைமுறை சிக்கல் இல்லாமல் செய்ய வேண்டும்.

    ஏப்ரல் மாதம் தேர்தலை வைத்துக் கொண்டு இப்போதே இதனை செய்யத் தொடங்குவது சரியாக இருக்காது. முறையானது அல்ல. எனவே வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத் தத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.

    எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பறிக்கும் சதித்திட்டம் இதனுள் இருக்கலாம் என சந்தேகப்படுகிறோம். இதுபோன்ற எந்த சதியையும் தமிழ்நாடு அனுமதிக்காது. எனவே வாக்காளர் பட்டி யல் சிறப்பு தீவிர திருத்தத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில், ஜனநாயக, சட்டவிரோாத SIR நடவடிக்கையை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டுமென அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • வாக்களிக்க முடியாத பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கோவை பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 21 லட்சத்து 6 ஆயிரத்து 124 வாக்காளர்கள் இருக்கின்றனர்.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தால் பல வாக்காளர்களால் வாக்களிக்க முடியவில்லை. இவ்வாறு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவரும், வேட்பாளருமான அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்தார்.

    இதற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிராந்திகுமார்பாடி விளக்கம் அளித்து இருந்தார். ஆனால் அந்த விளக்கம் ஏற்கும்படியாக இல்லை என பா.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் வாக்காளர்களின் பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி கோவையில் நேற்று வாக்களிக்க முடியாத பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிராந்திகுமார் பாடி, பொது மக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் 2-வது முறையாக செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் 2023 அக்டோபர் 27-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 22-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது. கோவை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 5 தொகுதிகளில் (பல்லடம் தவிர்த்து) 16 லட்சத்து 71 ஆயிரத்து 3 வாக்காளர்கள் இருந்தனர். இதில் புதிதாக 47 ஆயிரத்து 559 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். 6,181 இறப்பு, 18 ஆயிரத்து 934 நிரந்தர குடிபெயர்வு, 3,249 இரட்டை பதிவு காரணமாக மொத்தம் 28 ஆயிரத்து 364 வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.

    இந்த விவரங்களை சரிபார்த்து கருத்து தெரிவிக்க கட்சியினருக்கு நகல் கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான மார்ச் 27-ந் தேதிக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை (ஜனவரி 22-ந் தேதி முதல் மார்ச் 17-ந் தேதி) வரை மீண்டும் திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்டு படிவங்கள் பெறப்பட்டன.

    மார்ச் 27-ந் தேதி வெளியிடப்பட்ட இறுதி பட்டியலில் கோவை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூலூர், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், கோவை வடக்கு மற்றும் தெற்கு ஆகிய சட்டசபை தொகுதிகளில் 17 லட்சத்து 8 ஆயிரத்து 369 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 26 ஆயிரத்து 504 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். இப்போது 1090 இறப்பு, 6998 நிரந்த குடிபெயர்வு, 245 இரட்டை பதிவு என 8,333 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

    திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லடம் சட்டசபை தொகுதிக்கான வாக்காளர்கள் 3 லட்சத்து 97 ஆயிரத்து 755 சேர்த்து கோவை பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 21 லட்சத்து 6 ஆயிரத்து 124 வாக்காளர்கள் இருக்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

    கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அங்கப்பாபள்ளியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக கலெக்டர் கிராந்திகுமார் பாடி கூறுகையில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். வீடு- வீடாகச் சென்று ஆய்வு செய்து பெயரை நீக்கியதாக ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்கள் கூறி உள்ளனர். நீக்கப்பட்டதாக கூறப்படும் பட்டியலில் உள்ள 40-45 வாக்காளர்கள் ஓட்டளிக்க வந்ததாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார். எதன் அடிப்படையில் பெயர்கள் நீக்கப்பட்டன என அறிக்கை கேட்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    ×