என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    S.I.R. நடவடிக்கையை நிறுத்த வேண்டும்..!- அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
    X

    S.I.R. நடவடிக்கையை நிறுத்த வேண்டும்..!- அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

    • அனைத்துக் கட்சி கூட்டம் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று பேசினார்.

    தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நாளை மறுநாள் (4-ந்தேதி) முதல் தொடங்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

    இதையொட்டி ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார். அதன் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற உள்ளது.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவசர அவசரமாக செய்யக் கூடாது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவ மழை பெய்து வரும் காலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை செய்வது சிரமம். எனவே கால அவகாசம் கொடுத்து செய்ய வேண்டும். இப்போது இதை செய்வது சரியானது அல்ல என்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஏற்கனவே அறிவித்திருந்தன.

    ஆனாலும் தேர்தல் கமிஷன் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. திட்டமிட்டபடி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி ஆலோசிக்கப்படும் என்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் கூட்டாக அறிவித்து இருந்தது.

    அதன்படி இன்று காலை 10 மணிக்கு சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கார்டு ஓட்டலில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள 64 கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத் தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தே.மு.தி.க. சார்பில் பார்த்தசாரதி,

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர்மொய்தீன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், துணை பொதுச் செயலாளர் சத்ரியன் வேணுகோபால், கொ.ம.தே.க. தலைவர் ஈஸ்வரன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாகிருல்லா உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க, டாக்டர் அன்புமணி (பா.ம.க.), டி.டி.வி.தினகர னின் அ.ம.மு.க. ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.

    அழைப்பு அனுப்பப்பட்ட கட்சிகளில் விஜய்யின் த.வெ.க., டாக்டர் ராமதாசின் பா.ம.க. சீமானின் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் பங்கேற்காமல் புறக்கணித்தன.

    கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று பேசினார்.

    அதன்பிறகு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை இந்த கால கட்டத்தில் நடத்துவது சரியாக இருக்காது என்றும் இதனை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் வலியுறுத்தினார்கள். ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் தங்களது நிலைப்பாடுகளை விளக்கி பேசினார்கள்.

    வாக்காளர் பட்டியல் சீரமைக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் அதனை அவசர அவசரமாக செய்யக் கூடாது. கால அவகாசம் கொடுத்து செய்ய வேண்டும். நடைமுறை சிக்கல் இல்லாமல் செய்ய வேண்டும்.

    ஏப்ரல் மாதம் தேர்தலை வைத்துக் கொண்டு இப்போதே இதனை செய்யத் தொடங்குவது சரியாக இருக்காது. முறையானது அல்ல. எனவே வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத் தத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.

    எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பறிக்கும் சதித்திட்டம் இதனுள் இருக்கலாம் என சந்தேகப்படுகிறோம். இதுபோன்ற எந்த சதியையும் தமிழ்நாடு அனுமதிக்காது. எனவே வாக்காளர் பட்டி யல் சிறப்பு தீவிர திருத்தத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில், ஜனநாயக, சட்டவிரோாத SIR நடவடிக்கையை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டுமென அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×