search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக அலுவலகம்"

    • ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் மீது எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி போலீசார் சட்டநிபுணர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார்கள்.
    • ஆலோசனைக்கு பிறகு உயர் அதிகாரிகள் அறிவுரைக்கு ஏற்ப போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடந்தபோது அதே நேரத்தில் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்குள் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்றார்.

    தலைமை கழக கதவை ஆதரவாளர்களுடன் உடைத்துக்கொண்டு அவர் சென்றது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் தலைமை கழகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

    இதற்கிடையே கோர்ட்டு உத்தரவின் காரணமாக தலைமை கழகத்தின் சீல் அகற்றப்பட்டு அதன் சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க. தலைமை கழகத்துக்குள் சென்று அ.தி.மு.க.வினர் ஆய்வு செய்தனர். அப்போது ஏராளமான ஆவணங்கள் மாயமாகி இருந்தன. பொருட்கள், பீரோக்கள், கம்ப்யூட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டு இருந்தன. ஆவணங்களையும், பொருட்களையும் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் வந்தவர்கள் எடுத்து சென்று விட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    அ.தி.மு.க. தலைமை அலுவலக அசல் பத்திரம் மற்றும் பல ஆவணங்களை ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் வந்தவர்கள் கொள்ளை அடித்து சென்று விட்டதாக ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகம் புகார் அளித்துள்ளார். அதில் அவர் ஆவணங்கள் மாயமாகி இருப்பதை வீடியோ ஆதாரங்களுடன் கொடுத்துள்ளார்.

    மேலும் சீல் அகற்றப்பட்ட பிறகு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளையும் வழங்கியுள்ளார். இதைத் தவிர அ.தி.மு.க. அலுவலகம் சூறையாடப்பட்டபோது எடுக்கப்பட்ட போட்டோக்களையும் கொடுத்திருக்கிறார்.

    எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டுள்ள இந்த புகார் மனு மீது ராயப்பேட்டை போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தலைமை கழகம் தாக்கப்பட்டது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தபோது, 'பூட்டி இருக்கும் அலுவலகத்துக்குள் நீங்கள் எப்படி உள்ளே செல்லலாம்' என்று நீதிபதி கேட்டிருந்தார்.

    எனவே தலைமை கழகம் சூறையாடப்பட்டது தொடர்பாக வந்துள்ள புகார் மனு மீது வழக்கு பதிவு செய்யவேண்டிய நிர்பந்தம் ராயப்பேட்டை போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் உள்பட அவரது ஆதரவாளர்கள் சுமார் 300 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் மீது எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி போலீசார் சட்டநிபுணர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார்கள். அந்த ஆலோசனைக்கு பிறகு உயர் அதிகாரிகள் அறிவுரைக்கு ஏற்ப போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.

    முக்கியமாக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இது பற்றி போலீசார் கூறுகையில், 'நிச்சயம் வழக்குப்பதிவு செய்யப்படும்' என்று தெரிவித்தனர்.

    வழக்குகள் பதிவு செய்யப்படும் என்று போலீசார் கூறினாலும், எத்தகைய பிரிவுகளில், எத்தனை பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்வார்கள் என்பது உறுதியாக தெரியவில்லை. இந்த சம்பவத்தை பொறுத்தவரை சட்ட விரோதமாக கூடுதல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், அத்துமீறி நுழைதல், திருடுதல், ஆவணங்களை கொள்ளை அடித்தல், பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்துதல், வாகனங்களை அடித்து நொறுக்குதல் உள்பட 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது.

    ஆனால் 10 பிரிவுகளில் ஓ.பன்னீர் செல்வம் மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும் ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்வார்களா? என்று தெரியவில்லை. போலீசார் உரிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யாவிட்டால் இதுபற்றி கோர்ட்டில் வழக்கு தொடருவோம் எடப்பாடி பழனிசாமி அணியினர் தெரிவித்தனர்.

    ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மீது வழக்குகள் பதிவு செய்தாலும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடன் சென்ற சில மூத்த தலைவர்கள் கைது செய்யப்படுவார்களா என்ற கேள்விக்கு போலீசார் பதில் அளிக்கவில்லை. என்றாலும், கலவரத்தில் ஈடுபட்ட பலர் சி.சி.டி.வி. கேமரா மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    அவர்கள் முதலில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி ஓரிரு நாட்களில் தெரியவரும்.

    • ஓ.பன்னீர் செல்வத்தின் வழக்கறிஞர்கள் அரவிந்த் பாண்டியன், திருமாறன் ஆகியோர் நீதிபதி வழங்கிய தீர்ப்பின் நகலை பெற்று படித்து பார்த்து மேல்முறையீடு செய்ய ஆராய்ந்து வருகின்றனர்.
    • இன்று அல்லது நாளை சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்து விடுவோம் என்று தெரிவித்தனர்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விசுவரூபம் எடுத்தபோது எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் உருவானது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கடந்த 11-ந் தேதி வானகரத்தில் கூடியபோது அன்று காலையில் அ.தி.மு.க. பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர் செல்வத்தின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன. அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

    இந்த சமயத்தில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டையில் உள்ள தலைமைக்கழகத்திற்குள் அதிரடியாக புகுந்தார்.

    அந்த சமயத்தில் எடப்பாடி ஆதரவாளர்களுக்கும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கல்வீச்சு, உருட்டு கட்டை தாக்குதல் சம்பவங்களும் நடந்தன.

    எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களை விரட்டி அடித்தபிறகு ஓ.பன்னீர் செவ்வம் தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க. தலைமை கழகத்திற்கு சென்று சுமார் 1 மணி நேரம் இருந்தார்.

    அதன் பிறகு போலீசார் அவரை வெளியேற்றி அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு சீல் வைத்தனர். பின்னர் வருவாய் கோட்டாட்சியர் வசம் சாவி ஒப்படைக்கப்பட்டது.

    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர் செவ்வமும் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் அ.தி.மு.க. தலைமைக்கழகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினார்.

    இந்த தீர்ப்பில் அ.தி.மு.க. அலுவலக சாவியை தன் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற ஓ.பன்னீர் செல்வத்தின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்து விட்டார்.

    இந்த தீர்ப்பு பற்றி ஓ.பன்னீர் செல்வத்துக்கு தெரிய வந்ததும் பெரும் அதிர்ச்சி அடைந்தார். உடனே தனது வழக்கறிஞரை அழைத்து உடனே சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    அதன்படி ஓ.பன்னீர் செல்வத்தின் வழக்கறிஞர்கள் அரவிந்த் பாண்டியன், திருமாறன் ஆகியோர் நீதிபதி வழங்கிய தீர்ப்பின் நகலை பெற்று படித்து பார்த்து மேல்முறையீடு செய்ய ஆராய்ந்து வருகின்றனர்.

    இன்று அல்லது நாளை சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்து விடுவோம் என்று தெரிவித்தனர்.

    • கீழ் தளத்தில் முக்கிய நிர்வாகிகள், மாநில நிர்வாகிகளின் அலுவலக அறைகளில் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டு இருந்தன.
    • ஆண்டு மலர் மற்றும் பொன் விழா புத்தகங்களின் ஆவணங்கள், பைல்கள் சிதறி கிடந்தன.

    சென்னை:

    அ.தி.மு.க. அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டதை அடுத்து சி.வி.சண்முகம் மற்றும் அலுவலக ஊழியர்கள் உள்ளே ஒவ்வொரு அறையாக சென்று பார்த்தனர். அலுவலகம் முழுவதும் பொருட்கள் சிதறி கிடந்து அலங்கோலமாக காட்சி அளித்தது. அனைத்து அறைகளின் கதவுகளும் உடைக்கப்பட்டு இருந்தது.

    மேஜைகள், நாற்காலிகள் நொறுக்கப்பட்டு சேதம் அடைந்திருந்தன. கம்ப்யூட்டர்களும் உடைக்கப்பட்டு இருந்தன. கீழ் தளத்தில் முக்கிய நிர்வாகிகள், மாநில நிர்வாகிகளின் அலுவலக அறைகளில் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டு இருந்தன. ஆண்டு மலர் மற்றும் பொன் விழா புத்தகங்களின் ஆவணங்கள், பைல்கள் சிதறி கிடந்தன.

    முதல் தளத்தில் தலைமை கழகத்தின் முக்கிய அலுவலகம் உள்ளது. அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு கீழே கிடந்தது. மேஜை, கம்ப்யூட்டர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நிர்வாகிகள் கூட்டங்கள் நடைபெறும் அறையில் எடப்பாடி பழனிசாமி படம் இருந்த பேனர் கிழிக்கப்பட்டு இருந்தது.

    2-வது தளத்தில் நூலகம் உள்ளிட்ட அறைகளின் கதவுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.

    3-வது தளத்தில் கட்சியின் கணக்கு வழக்குகளின் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறை கதவு உடைக்கப்பட்டது. அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு கணக்கு விவரங்களின் முக்கிய ஆவணங்கள் மாயமாக இருந்தது. அதேபோல் மற்றொரு அறையில் ஜெயலலிதாவுக்கு கட்சி சார்பில் வழங்கப்பட்ட பரிசு பொருட்களும் அவர் கட்சிக்கு வழங்கிய பரிசு பொருட்களும் வைக்கப்பட்டு இருந்தது.


     அந்த அறைகளை இரும்பு கடப்பாறையால் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அந்த அறையில் இருந்த பரிசு பொருட்கள் மாயமாகி இருந்தது.

    இதுகுறித்து அ.தி.மு.க. அலுவலக மேனேஜர் தர்மா கூறும்போது, அலுவலகத்தின் 3-வது மாடியில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது. அந்த பொருட்களை காணவில்லை. கம்ப்யூட்டரில் இருந்த ஹார்டு டிஸ்க், கணக்கு விவர ஆவணங்கள் அனைத்தும் மாயமாகி இருக்கிறது என்றார்.

    • ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்திசென்ற நிலையில் ஓ.பி.எஸ் ஆலோசித்து வருகிறார்.
    • தொண்டர்கள் எதிர்பார்க்கும் நல்ல முடிவு கிடைக்கும் என்று ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.

    சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வந்துள்ளார். சென்னையில் உள்ள தனது வீட்டில் நிர்வாகிகளுடன் ஒற்றைத் தலைமை குறித்த தனது வீட்டில் 3 நாட்களாக ஓபிஎஸ் ஆலேசனை மேற்கொண்டு வந்தார்.

    சற்று நேரத்திற்கு முன் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் முடிந்த நிலையில், ஓபிஎஸ் தலைமை அலுவலகம் வந்தார்.

    ஆலோசனைக்கு முன்பாக தொண்டர்கள் எதிர்பார்க்கும் நல்ல முடிவு கிடைக்கும் என்று ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.

    ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்திசென்ற நிலையில் ஓ.பி.எஸ் ஆலோசித்து வருகிறார். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    வைத்திலிங்கம், பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், வைகைச்செல்வன், தர்மர், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், செம்மலை, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    ×