search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடுத்தடுத்து"

    • 3 வீடுகளில் திருட்டு நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு முனிசிபல் காலனி 3-வது கிராஸ் தியாகி குமரன் வீதியை சேர்ந்தவர் தாமோதரன் (57). ஈரோடு என்.எம்.எஸ். காம்பவுண்டில் உள்ள டெக்ஸ்டைல்சில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் காலை வழக்கம் போல் வேலைக்கு சென்ற தாமோதரன் மதியம் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டுக்குள் சென்று பார்த்த போது 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு துணிகள் சிதறி கிடந்தது. பீரோவில் வைத்திருந்த கம்மல் தோடு, மோதிரம் என முக்கால் பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம் என மொத்தம் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான நகை, பணம் திருட்டு போய் இருந்தது.

    இது குறித்து தாமோதரன் அளித்த புகாரின் பேரில் ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் திருட்டு நடந்த வீட்டில் கைரேகைகளை சேகரித்தனர்.

    குடியிருப்பு பகுதியில் பட்ட பகலில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதேபோல் வீரப்பன்சத்தி ரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சின்னமுத்து வீதியி ல் அடுத்தடுத்த சந்துகளில் உள்ள 2 வீடுகளில் திருட்டு நடந்துள்ளது.

    ஒரு வீட்டில் வெள்ளி குத்துவிளக்கும், வெள்ளி கொலுசும் திருட்டு போயிருந்தது. மற்றொரு வீட்டில் ரூ.1 லட்சம் ரொக்க பணம் திருட்டு போயிருந்தது. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது அதில் ஒரு நபர் நடந்து செல்வதும், திருட்டு நடந்த வீட்டில் இருந்து செல்வதும் பதிவாகி இருந்தது.

    ஈரோடு மாநகர் பகுதியில் அடுத்தடுத்து 3 வீடுகளில் திருட்டு நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த 3 திருட்டிலும் ஒரே நபர் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • வனப்பகுதியில் வறண்டு கிடந்த செடி, கொடிகளில் திடீரென தீ பிடித்து எரிந்தது.
    • தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை மற்றும் சுற்றுப்பகுதியில் தற்போது வறட்சி காரணமாக வறண்டு கிடக்கும் செடி, கொடிகளில் அடிக்கடி தீ பிடிக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் சென்னிமலை-காங்கேயம் ரோட்டில் ரோட்டோரம் உள்ள வனப்பகுதியில் வறண்டு கிடந்த செடி, கொடிகளில் திடீரென தீ பிடித்து எரிந்தது.

    அப்போது அந்த வழியே சென்றவர்கள் உடனடியாக சென்னிமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சென்னி மலை தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    அதைத்தொடர்ந்து சென்னிமலையை அடுத்த பெருந்துறை ஆர்.எஸ் பகுதியில் ரோட்டோரம் வறண்டு கிடந்த செடி, கொடிகளில் தீ பிடித்துள்ளது. இது பற்றிய தகவல் கிடைத்ததும் சென்னிமலை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    அதன் பின்னர் மாலை 3 மணி அளவில் சென்னிமலை உப்பிலிபாளையம் ரோட்டில் குப்பை கிடங்கு அருகே உள்ள வனப்பகுதியில் வறண்டு கிடந்த புற்களில் தீ பிடித்து எரிந்துள்ளது.

    பின்னர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    ஒரே நாளில் 3 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நம்பியூர் பகுதியில் 2 வீடுகளிலும் நகை- பணம் ஏதும் கிடைக்காததால் கொள்ளையர்கள் ஏமாந்து சென்றனர்.
    • இதுகுறித்து நம்பியூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் வேணுகோபால், வெற்றிவேல்.

    வேணுகோபால் நம்பியூர் அரசு போக்குவரத்து பணிமனை கிளையில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். வெற்றிவேல் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் வேணு கோபால் தனது வீட்டை நேற்று முன்தினம் பூட்டி விட்டு தனது மற்றொரு வீடான திருப்பூரில் உள்ள வீட்டில் தனது குடும்பத்துடன் தங்கியுள்ளார்.

    நேற்று தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைத்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ மற்றும் அறைகளில் பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதேபோல் வெற்றிவேல் தனது வீட்டை இந்திராணி என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அவரது வீட்டிலும் கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே பீரோ மற்றும் அறைகளில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தது.

    2 வீடுகளிலும் நகை- பணம் ஏதும் கிடைக்காததால் கொள்ளையர்கள் ஏமாந்து சென்றனர். மேலும் கைரேகை தெரியாதவாறு பனியன் துணி மூலம் கைகளை துடைத்து விட்டு சென்றுள்ளனர்.

    இதுகுறித்து நம்பியூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாலையில் சிதறிய இளநீர் காய்களால் சொகுசு பஸ் உள்பட 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கொண்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே நேற்று இரவு பொள்ளாச்சியில் இருந்து 2 ஆயிரம் இளநீர் காய்கள் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.

    இந்த லாரி இன்று அதிகாலை 2.30 மணி அளவில் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த 2 ஆயிரம் இளநீர் காய்களும் சாலையில் சிதறியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இளநீர் ஏற்றி வந்த விழுப்புரம் மாவட்டம் அனுமந்தை பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் மாதவன் படுகாயம் அடைந்தார்.

    அப்போது பெருந்துறையில் இருந்து அரியலூருக்கு சென்று கொண்டிருந்த சிமெண்ட் டேங்கர் லாரி, விபத்து நடந்த பகுதியில் இளநீர்காய்கள் சிதறி கிடந்ததால், அந்த வழியாக செல்ல முடியவில்லை. இதனால் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஏழுமலை சிமெண்ட் லாரியை அங்கு நிறுத்தினார். அந்த பகுதியில் மின் வெளிச்சம் இல்லை.

    இதனால் பெங்களூரில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற தனியார் சொகுசு பஸ் , சிமெண்ட் லாரியின் பின் பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக சொகுசு பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். சொகுசு பஸ்சின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த லாரி டிரைவர்கள் மாதவன், ஏழுமலை ஆகிய இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து சாலையில் சிதறிக் கிடந்த இளநீர் மற்றும் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

    இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×