search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடுகளில்"

    • தக்கலை பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
    • தக்கலை சுற்று வட்டார பகுதியில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    தக்கலை:

    தக்கலை பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தக்கலை சுற்று வட்டார பகுதியில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் தக்கலை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் ஏராளமான வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

    மேலும் போக்கு வரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் முட்டைக்காடு குமாரபுரம் பகுதியில் ஒரு முதியவர் தண்ணீரில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அப்போது அருகில் உள்ள வர்கள் தக்கலை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு துறை அதிகாரி ஜவான்ஸ் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து முதியவரை மீட்கும் பணி யில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் முதியவர் தீய ணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டார்.

    • நம்பியூர் பகுதியில் 2 வீடுகளிலும் நகை- பணம் ஏதும் கிடைக்காததால் கொள்ளையர்கள் ஏமாந்து சென்றனர்.
    • இதுகுறித்து நம்பியூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் வேணுகோபால், வெற்றிவேல்.

    வேணுகோபால் நம்பியூர் அரசு போக்குவரத்து பணிமனை கிளையில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். வெற்றிவேல் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் வேணு கோபால் தனது வீட்டை நேற்று முன்தினம் பூட்டி விட்டு தனது மற்றொரு வீடான திருப்பூரில் உள்ள வீட்டில் தனது குடும்பத்துடன் தங்கியுள்ளார்.

    நேற்று தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைத்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ மற்றும் அறைகளில் பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதேபோல் வெற்றிவேல் தனது வீட்டை இந்திராணி என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அவரது வீட்டிலும் கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே பீரோ மற்றும் அறைகளில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தது.

    2 வீடுகளிலும் நகை- பணம் ஏதும் கிடைக்காததால் கொள்ளையர்கள் ஏமாந்து சென்றனர். மேலும் கைரேகை தெரியாதவாறு பனியன் துணி மூலம் கைகளை துடைத்து விட்டு சென்றுள்ளனர்.

    இதுகுறித்து நம்பியூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×