முட்டைக்காட்டில் தொடர் மழை வீடுகளில் தண்ணீர் புகுந்தது; முதியவர் மீட்பு

தக்கலை பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.தக்கலை சுற்று வட்டார பகுதியில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
முட்டைக்காட்டில் தொடர் மழை வீடுகளில் தண்ணீர் புகுந்தது; முதியவர் மீட்பு
Published on

தக்கலை:

தக்கலை பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தக்கலை சுற்று வட்டார பகுதியில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் தக்கலை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் ஏராளமான வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

மேலும் போக்கு வரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் முட்டைக்காடு குமாரபுரம் பகுதியில் ஒரு முதியவர் தண்ணீரில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அப்போது அருகில் உள்ள வர்கள் தக்கலை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு துறை அதிகாரி ஜவான்ஸ் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து முதியவரை மீட்கும் பணி யில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் முதியவர் தீய ணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com