search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடுத்தடுத்து 3 இடங்களில் தீ விபத்து
    X

    அடுத்தடுத்து 3 இடங்களில் தீ விபத்து

    • வனப்பகுதியில் வறண்டு கிடந்த செடி, கொடிகளில் திடீரென தீ பிடித்து எரிந்தது.
    • தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை மற்றும் சுற்றுப்பகுதியில் தற்போது வறட்சி காரணமாக வறண்டு கிடக்கும் செடி, கொடிகளில் அடிக்கடி தீ பிடிக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் சென்னிமலை-காங்கேயம் ரோட்டில் ரோட்டோரம் உள்ள வனப்பகுதியில் வறண்டு கிடந்த செடி, கொடிகளில் திடீரென தீ பிடித்து எரிந்தது.

    அப்போது அந்த வழியே சென்றவர்கள் உடனடியாக சென்னிமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சென்னி மலை தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    அதைத்தொடர்ந்து சென்னிமலையை அடுத்த பெருந்துறை ஆர்.எஸ் பகுதியில் ரோட்டோரம் வறண்டு கிடந்த செடி, கொடிகளில் தீ பிடித்துள்ளது. இது பற்றிய தகவல் கிடைத்ததும் சென்னிமலை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    அதன் பின்னர் மாலை 3 மணி அளவில் சென்னிமலை உப்பிலிபாளையம் ரோட்டில் குப்பை கிடங்கு அருகே உள்ள வனப்பகுதியில் வறண்டு கிடந்த புற்களில் தீ பிடித்து எரிந்துள்ளது.

    பின்னர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    ஒரே நாளில் 3 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×