search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோக்கியா 6.2"

    விஜய் நடிப்பில் ‘சர்கார்’ படத்துக்கு தடை விதிக்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில், தடை விதிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #Sarkar #Vijay
    நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ் உள் ளிட்டோர் நடித்துள்ள சர்கார் என்ற திரைப்படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.

    இந்த திரைப்படத்தின் கதை, வசனம் எழுதி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார்.

    இந்த படத்துக்கு எதிராகவும், படத்தை வெளியிட தடை கேட்டும் வழக்கு தொடரப்படும் என்ற தகவல் கடந்த சில நாட்களாக உலாவியது. இதையடுத்து, தங்கள் கருத்தை கேட்காமல், இந்த படத்துக்கு தடை விதிக்கக்கூடாது என்று சர்கார் படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் ‘கேவியட்’ மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில், சர்கார் படத்தின் கதை, திரைக்கதை தன்னுடையது என்றும் சர்கார் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் வருண் என்ற ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அந்த வழக்கு மனுவில் கூறி இருப்பதாவது:-

    ‘செங்கோல் என்ற தலைப்பில் நான் கதை எழுதினேன். இந்த கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். இந்த நிலையில், என்னுடைய கதையை திருடி, சர்கார் என்ற தலைப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் படம் இயக்கி உள்ளார். இது குறித்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் செய்தேன்.



    அந்த சங்கத்தின் தலைவர் கே.பாக்கியராஜ், இருதரப்பையும் அழைத்து விசாரித்தார். இறுதியில், இருவரது கதையும், ஒரே கதை தான் என்று உத்தரவிட்டுள்ளார். எனவே, சர்கார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். அந்த படத்தின் கதை என்னுடையது என்று அறிவிக்க வேண்டும்’.

    இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தரம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி படத்துக்கு தடை விதிக்க மறுத்து விட்டார்.

    வழக்கிற்கு பதிலளிக்க சர்கார் படத்தின் இயக்குனர் முருகதாஸ், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பாக்கியராஜ் உள்ளிட்டோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். #Sarkar #Vijay

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சர்கார்' படத்தின் தணிக்கை சான்றிதழ் வெளியாகி இருக்கிறது. #Sarkar #Vijay
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் - கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவித்துள்ள நிலையில் தணிக்கை குழுவில் ‘சர்கார்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் அதிகமான தியேட்டர்களை ‘சர்கார்’ படத்துக்கு ஒதுக்கி உள்ளனர். ரசிகர்களும் தீபாவளியை சர்கார் படத்தோடு கொண்டாட பேனர்கள், சுவரொட்டிகள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
    தீபாவளிக்கு முன்னதாக வருகிற 2-ந் தேதி படத்தை திரைக்கு கொண்டு வருவது குறித்து படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 2-ந் தேதி வெள்ளிக்கிழமை என்பதாலும் தொடர்ந்து விடுமுறையாக இருப்பதாலும் முன்னதாக படத்தை வெளியிட திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

    ‘சர்கார்’ படத்தில் ராதாரவி, வரலட்சுமி, யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். 

    கடந்த வாரம் வெளியான படத்தின் டிரைலர் வெளியான நிலையில், படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படத்தில், வெளிநாட்டில் பெரிய தொழில் அதிபராக இருக்கும் விஜய் சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக தமிழகம் வருகிறார். அவரது ஓட்டை கள்ள ஓட்டாக போட்டு விடுகின்றனர். இதனால் அதிர்ச்சியாகி அரசியல்வாதிகளுடன் மோதுகிறார். நேர்மையான தேர்தல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். தனக்கு ஆதரவாக இளைஞர்களை திரட்டி மோசமான அரசியல்வாதிகளை வீழ்த்தி எப்படி நல்லாட்சியை ஏற்படுத்துகிறார் என்பது தான் கதை என்கிறார்கள். #Sarkar #Vijay

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சர்கார்' படத்தை தீபாவளிக்கு முன்பே ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. #Sarkar #Vijay
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் - கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளி பண்டிகையான வருகிற நவம்பர் 6-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவித்து இருந்தனர். 

    தமிழ்நாடு முழுவதும் அதிகமான தியேட்டர்களை ‘சர்கார்’ படத்துக்கு ஒதுக்கி உள்ளனர். ரசிகர்களும் தீபாவளியை சர்கார் படத்தோடு கொண்டாட பேனர்கள், சுவரொட்டிகள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். 

    இந்த நிலையில் தீபாவளிக்கு முன்னதாக வருகிற 2-ந் தேதி ‘சர்கார்’ படத்தை திரைக்கு கொண்டு வருவது குறித்து படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 2-ந் தேதி வெள்ளிக்கிழமை என்பதாலும் தொடர்ந்து விடுமுறையாக இருப்பதாலும் முன்னதாக படத்தை வெளியிட திட்டமிடுவதாக கூறப்படுகிறது.



    எனவே இந்த வாரத்திலேயே படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்புகிறார்கள். ‘சர்கார்’ படத்தில் ராதாரவி, வரலட்சுமி, யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். 

    கடந்த வாரம் டிரெய்லரை வெளியிட்டு படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளனர். படத்தில், வெளிநாட்டில் பெரிய தொழில் அதிபராக இருக்கும் விஜய் சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக தமிழகம் வருகிறார். அவரது ஓட்டை கள்ள ஓட்டாக போட்டு விடுகின்றனர். இதனால் அதிர்ச்சியாகி அரசியல்வாதிகளுடன் மோதுகிறார். நேர்மையான தேர்தல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். தனக்கு ஆதரவாக இளைஞர்களை திரட்டி மோசமான அரசியல்வாதிகளை வீழ்த்தி எப்படி நல்லாட்சியை ஏற்படுத்துகிறார் என்பது தான் கதை என்கிறார்கள். #Sarkar #Vijay

    விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் `சர்கார்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், படத்தின் கதை என்று சமூக வலைதளங்களில் கதை ஒன்று வைரலாகி வருகிறது. #Sarkar #Vijay
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சர்கார்’. தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிறச் செய்துள்ளது.

    இதற்கிடையே இந்த படத்தின் கதைக்கு ஒருவர் உரிமை கொண்டாடி வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இது தனது கதை என்கிறார். இந்த நிலையில் இது தான் சர்கார் படத்தின் கதை என்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் கதை வருமாறு,

    அமெரிக்காவில் வசிக்கும் பெரிய தொழிலதிபரான விஜய் பல்வேறு நாடுகளில் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். தமிழரான அவருக்கு தமிழகத்தில் வாக்குரிமை இருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக சென்னை வருகிறார். வாக்கு சாவடிக்கு சென்று ஓட்டை பதிவு செய்ய முற்படும்போது அதிர்ச்சி. வாக்குச்சாவடியில் இருப்பவர்கள் அவரது ஓட்டு ஏற்கனவே பதிவாகி விட்டது என்கின்றனர். தோல்வியையே சந்திக்காத விஜய்க்கு முதல் முறையாக அவமானம் ஏற்படுகிறது. தேர்தல் முறைகேடுகளை பார்த்து கொதித்து அரசியல்வாதிகளான ராதாரவி, வரலட்சுமி ஆகியோருடன் மோதுகிறார்.



    இதற்காக இளைஞர்களை திரட்டுகிறார். பணம் வாங்காமல் ஓட்டளிக்கும்படியும் படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் பிரசாரம் செய்கிறார். பணம்கொடுத்து வாக்காளர்களை வளைக்க அரசியல்வாதிகள் கண்டெய்னர்களில் பணத்தை இறக்குகின்றனர். அதை தடுக்கும் விஜய்யை தீர்த்து கட்ட வில்லன்களை ஏவுகிறார்கள்.

    அதையெல்லாம் எதிர்கொண்டு நேர்மையாக தேர்தல் நடத்தி நல்ல அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்க வைத்து நாட்டை எப்படி சீரமைக்கிறார் என்பது கதை என்கின்றனர். ஏற்கனவே படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை என்று விஜய் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Sarkar #Vijay

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்கார்’ படத்தின் டீசர் உலகளவில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. #Sarkar #Vijay
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்கார்’. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. தீபாவளி விடுமுறைக்கு ரிலீசாக இருக்கிறது.

    கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    ‘சர்கார்’ படத்தின் டீசரை நேற்று மாலை 6 மணிக்கு படக்குழு வெளியிட்டது. இந்த டீசருக்காக விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பெரும்பாலானோர் காத்திருந்தனர்.

    டீசர் வெளியான 10 நிமிடங்களிலேயே 10 லட்சத்துக்கும் அதிகமான முறை டீசர் பார்க்கப்பட்டது. 20 நிமிடங்களில் 20 லட்சம் பார்வை, 35 நிமிடங்களில் 30 லட்சம் பார்வை என நேரம் போகப்போக அதிகமான முறை பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

    பார்வைகள், விருப்பங்கள், ரசிகர்களின் கருத்துகள் என்று மூன்று விதங்களில் ‘சர்கார்’ டீசர் சாதனை படைத்துள்ளது. ஐந்தரை மணி நேரத்தில் ‘சர்கார்’ டீஸர் 1 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. 17 மணிநேரங்களில் 1 கோடியே 30 லட்சம் பார்வையளர்களை பெற்றுள்ளது.

    5 மணிநேரத்தில் 10 லட்சம் லைக்குகளை பெற்ற ‘சர்கார்’ டீசர், உலகின் அதிக லைக்குகளை பெற்ற டீசர் என்ற சாதனையை படைத்துள்ளது. மேலும் 1 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் டீசர் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். 

    இந்தியா மற்றும் இலங்கையில் ‘சர்கார்’ டீசர் யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்திலும், ஐக்கிய அரபு எமைரேட்சில் இரண்டாவது இடத்திலும் உள்ளது. #Sarkar #SarkarTeaser #Vijay

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் சர்கார் படத்தில் விஜய் கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை வேடத்தில் நடிப்பதாக முருகதாஸ் கூறினார். #Sarkar #Vijay
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் சர்கார். அரசியல் படமாக உருவாகி இருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. விஜய் இதில் முதல் அமைச்சராக நடிப்பதாக செய்தி வெளியானது. ஆனால் அதை அவரே மறுத்தார்.

    சமீபத்தில் முருகதாஸ் அளித்த ஒரு பேட்டியின் மூலம் விஜய்யின் வேடம் பற்றி தெரிய வந்திருக்கிறது. தமிழகத்தில் இருந்து அமெரிக்காவிற்கு சென்று கூகுளின் தலைமை பொறுப்புக்கு வந்த சுந்தர் பிச்சையின் வேடத்தில் தான் விஜய் நடிக்கிறார்.

    தமிழகத்தை சுரண்டுவதற்காக வெளிநாட்டில் இருந்து வரும் விஜய், பின்னர் தமிழ்நாட்டை அரசியல்வாதிகளிடம் இருந்து காக்க எப்படி போராடுகிறார் என்பதே கதை என்று கூறி உள்ளார். 
    இதற்கிடையே படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. #Sarkar #Vijay

    விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Sarkar #Vijay
    விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் `சர்கார்'. 

    படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் பாடல்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நிலையில், படத்தின் டீசர் சரஸ்வதி பூஜைக்கு ரிலீசாக இருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம்.

    தற்போது படக்குழு அதனை உறுதிப்படுத்தியுள்ளது. சர்கார் படத்தின் டீசர் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வருகிற அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. படத்தின் டீசரை சாதனை அடையச் செய்ய விஜய் ரசிகர்கள் பல்வேறு திட்டங்களுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர். 

    ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் நடப்பு அரசியல் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. #Sarkar #Vijay #SarkarTeaser

    விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் சர்கார் படம் குறித்த தகவல்களை பேட்டியின் போது வெளியிட்டு வரும் படக்குழுவுக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். #Sarkar #Vijay #ARMurugadoss
    விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் `சர்கார்’. அரசியலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகி பாபு, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    ஏ.ஆர்.ரகுமான் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். சர்கார் அரசியல் தொடர்பான படம் என்பதால் இது தொடர்பான வி‌ஷயங்கள் வெளியில் கசியாமல் பாதுகாத்து வருகின்றனர். இந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ’அன்பான `சர்கார்’ படக்குழுவினரே இந்தப் படத்தை உருவாக்குவதற்காக பலர் கடுமையாக உழைத்துள்ளனர்.
    நேர்காணல் என்ற பெயரில் பல ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் படம் தொடர்பான தகவல்களை வெளியில் தெரிவித்து வருகின்றனர். இது பிற்காலத்தில் தொடர்ந்தால் அவர்கள் மீது எந்தப் பாரபட்சமுமின்றி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என கடுமையாக எச்சரித்துள்ளார். #Sarkar #Vijay #ARMurugadoss

    விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய யோகி பாபு, விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை செய்துவிட்டு பேக்அப் செய்திருப்பார் என்றார். #SarkarAudioLaunch #Vijay
    விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய காமெடி நடிகர் யோகி பாபு பேசும் போது,

    ஷீட்ல இருந்து நேராக வருகிறேன். மெர்சல் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் அண்ணாவுடன் நடித்திருக்கிறேன். மெர்சல் படத்தின் போது ஒரு வசனம் ஒன்று வரும். நல்ல ரசித்தார். அந்த சீன்ல தம்பி யாருடா 5 ரூபா டாக்டர்னு நான் கேட்பேன். பார்க்க யார் பர்ஸ்னாலிட்யாக இருக்கிறாரோ அவர் தான் என்று சொல்வார். அப்போ நீ போப்பா என்று நான் சொல்வேன்.

    வேற எந்த ஒரு ஹீரோவாக இருந்தாலும், இவ்வளவு பெரிய இடத்தில் இருந்துகொண்டு அந்த சீனுக்கு விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அந்த சீன் 2 முறை எடுத்தோம். அப்போது அண்ணா சொன்னார், நீ ஏன் உன்னை இறக்கிக்கிற, தைரியமா சொல்லு, இது தொழில் தான் என்றார். அதுலயும் அப்படி பண்ணேன், சர்கார்லயும் ஒன்னு அந்த மாதிரி சொன்னேன். அந்த இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணிட்டு போயிருப்பார் என்று நகைச்சுவையுடன் பேசினார்.



    நான் நிறைய நடிகர்களுடன் நடித்து வருகிறேன். தற்போது அஜித் சார், விஜய் அண்ணா என பல முன்னணி நாயகர்கள் மற்றும் நாயகிகளுடன் நடிக்கிறேன். அதில், அண்ணன் விஜய் வேற லெவல் என்றார். #SarkarAudioLaunch #Vijay #YogiBabu

    விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் சர்கார் படத்தில் விஜய் அவரது நிஜ வாழ்க்கையில் இருப்பது போல் நடித்திருக்கிறார். #SarkarAudioLaunch #Vijay
    விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்து  கொண்டு பேசிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசும் போது,

    விஜய்யுடன் நான் இணைந்த மூன்றாவது படம் சர்கார். முதல் படம் துப்பாக்கி பண்ணும் போது, அவருடைய படங்களை முதலில் பார்துவிட்டு நான் ஒரு கணக்கில் இருந்தேன். என்னுடைய கதையை வேற லெவலுக்கு கொண்டு சென்றார் விஜய் சார். அவருடைய திறமைக்கு ஏற்ப ஒரு படம் எடுக்க வேண்டும் என்று கத்தி படம் பண்ணோம். இப்போது மூன்றாவது முறையாக அவருடன் இணைந்து சர்கார் படம் பண்ணியிருக்கிறேன்.

    என்னுடைய கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் பற்றி என்னால் பெரியதாக சொல்ல முடியாது. ஆனால் ஒன்று மட்டும் கூறுகிறேன். சர்கார் படத்தில் விஜய்யின் உண்மையான ரூபத்தை பார்ப்பீர்கள். படத்தில் விஜய் சார் அவரது நிஜ வாழ்க்கையில் இருப்பது போல் நடித்திருக்கிறார். உங்களுக்கும் அது தோன்றும். ஒவ்வொரு முறையும் அவரது திறமை வளர்ந்து கொண்டே போகிறது.



    அவர் மனதில் ஒன்று தோன்றினால் அதை உடனடியாக செய்துவிடுவார். பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு தடைபட்ட உடனே, திடீரென கிளம்பி தூத்துக்குடி சென்றுவிட்டார். அதுதான் உங்களுக்கே தெரியுமே.

    விஜய் சார் எனக்கு கிடைத்த ஆயுதம். அவரை ஒரு பீரங்கியாக பயன்படுத்தியிருக்கிறேன். #SarkarAudioLaunch #Vijay

    விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், மெர்சல் படத்தில் கொஞ்சம் அரசியல் இருந்தது, ஆனால் சர்கார் படத்தில் அரசியல்ல மெர்சல் பண்ணியிருக்கிறோம். #SarkarAudioLaunch #Vijay
    விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்து  கொண்டு பேசிய நடிகர் விஜய் பேசும் போது,

    எனது ஒவ்வொரு படங்கள் வெற்றி பெறும் போதும் எவ்வளவு மகிழ்ச்சி வருமோ, அதே அளவு மகிழ்ச்சி உங்களை இதுபோன்ற விழாக்களில் பார்க்கும் போதும் கிடைக்கிறது.

    இந்த விழாவின் நாயகன் ரஹ்மான் சார். ஆளப்போறான் தமிழன் பாடல், தமிழர்களின் அடையாளம். ஒரு விரல் புரட்சி ஒட்டுமொத்த மக்களுக்கான அடையாளம். இந்த படத்துக்கு நீங்க (ரஹ்மான்) கிடைத்தது சர்கார் படத்துக்கு ஆஸ்கார் கிடைத்தது மாதிரி. ரஹ்மான் சாருடன் பாடலாரிசிரயர் விவேக் சேரும் போது அது ஒரு மேஜிக்காக மாறிவிடுகிறது.

    நாங்கள் சேரும் போதெல்லாம் வெற்றி படங்கள் கொடுத்து வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். சர்கார்ல அப்படி என்ன பண்ணியிருக்கிறார் என்றால், மெர்சல் படத்தில் கொஞ்சம் அரசியல் இருந்தது. ஆனால் சர்கார் படத்தில் அரசியல்ல மெர்சல் பண்ணியிருக்கார். இந்த படத்தில் மகிழ்ச்சியுடன் நடித்தேன். நீங்களும் படத்தை பார்த்துவிட்டு சொல்லுங்கள். கலையை வளர்க்க நிதியை அள்ளிக் கொடுக்கிறார், அதனால் தான் இவருக்கு கலாநிதி என்று பெயர் வைத்தார்கள் என்று நினைக்கிறேன். 



    சினிமாவுக்கு வந்த கொஞ்ச நாளில், சாவித்திரி அம்மா மாதிரி ஒருவரை நம் கண் முன்னால் நிறுத்துவது என்பது எளிதில்லை. கிடைத்த வாய்ப்பை நல்ல பயன்படுத்தியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இந்த படத்தின் இரண்டுகட்ட படப்பிடிப்பு முடிந்த பிறகு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடிப்பதாக சொன்னார்கள். சூப்பர், வர்றலட்சுமிய வேணாம்ணு சொல்லக் கூடாது பாருங்க. அந்த கதாபாத்திரத்திலும் அவங்க நல்ல பண்ணியிருக்காங்க. யோகி பாபுவின் அசுர வளர்ச்சியை பார்க்கும் போது ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. 

    எழுத்தாளர், பேச்சாளர், அரசியல்வாதி என பல்வேறு முகங்களை கொண்ட பழ.கருப்பையா ஐயாவுடன் நடித்ததை கவுரமாக நினைக்கிறேன். பேரில் மட்டுமில்லாமல், நடிப்பிலும் அப்பா பெயரை எடுத்த எம்.ஆர்.ராதாரவி சார். நாளை தீர்ப்பு படத்தில் அவருடன் எனது பயணம் தொடங்கியது. அனைத்து படக்குழுவினருக்கும் நன்றி.

    வெற்றிக்காக எவ்வளவு வேண்டுமானாலும் உழைக்கலாம். ஆனால் வெற்றியடைந்து விடக்கூடாது என்பதற்காக ஒருகூட்டம் உழைத்துக் கொண்டிருக்கிறது. எனக்கு மட்டும் இல்லை, உங்கள் அனைவரது வாழ்க்கையிலும் இருப்பது தான், அது இயற்கையானது தான். அதை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் ஒன்று, வாழ்க்கை என்னும் விளையாட்டை பார்த்து விளையாடுங்கள் நண்பா.



    இது யார் சொன்ன வரிகள் என்று தெரியவில்லை. ஆனால் நான் இதை பின்பற்றி வருகிறேன். அது என்னவென்றால், உசுப்பேத்துறவன்கிட்ட உம்முனும், கடுப்பேத்துறவன்கிட்ட கம்முனும் இருந்துட்டா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும். இதை பின்பற்றி பாருங்கள் உண்மையாகவே ஜம்முன்னு தான் இருக்கிறது. 

    தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று சர்காரை அமைப்பார்கள். ஆனால் நாங்கள் சர்காரை அமைத்துவிட்டு தேர்தலில் நிற்கப் போகிறோம். படத்தை சொன்னேன், பிடித்திருந்தால் படத்திற்கு ஓட்டு போடுங்கள். 

    சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை. நிஜத்தில் முதலமைச்சரானால், முதலமைச்சராக நடிக்க மாட்டேன். உண்மையாக இருப்பேன். நான் முதலமைச்சரானால் லஞ்சம், ஊழலை ஒழிப்பேன். ஆனால் அதை ஒழிப்பது என்பது எளிதான விஷயமாக எனக்கு தெரியவில்லை. நாம் அன்றாட வாழ்வில் நாம் பழகிபோய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எந்த அளவுக்கு ஒழிக்க முடியும் என்று தெரியவில்லை. வேறு வழியில்லை ஒழித்து தான் ஆக வேண்டும் என்று குட்டிக்கதை ஒன்றையும் கூறினார்.



    ஒரு மாநிலத்தில் மேல்மட்டத்தில் இருப்பவர்கள் சரியாக இருந்தால், மற்றவர்களுக்கெல்லாம் ஒரு பயம் வரும். ஒரு தலைவன் சரியாக நடந்தால், அவன் வழியில் அவன் கட்சியும் நல்ல கட்சியாக இருக்கும். ஆனால் ஒன்று, தர்மம் தான் ஜெயிக்கும், நியாயம் தான் ஜெயிக்கும், ஆனால் கொஞ்சம் லேட்டா ஜெயிக்கும். 

    இவ்வாறு விஜய் பேசினார்.

    சர்கார் படம் தீபாவளியை முன்னிட்டு ரிலீசாக இருக்கிறது. #Vijay #SarkarAudioLaunch 

    விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் வெளியாகி இருக்கும் நிலையில், அந்த பாடல் வரிகள் அரசியல் சம்பந்தப்பட்ட கருத்துக்களுடன் வெளியாகி இருக்கிறது. #Sarkar #OruViralPuratchi
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உள்பட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `சர்கார்'. நாளை இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது.

    படத்திலிருந்து `சிம்டாங்காரன்' என்ற ஒரு பாடல் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இரண்டாவதாக ‘ஒருவிரல் புரட்சி’ என்ற பாடல் நேற்று மாலை வெளியாகியது. விவேக் எழுதியிருக்கும் இந்தப் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான்  இசையமைத்துள்ளார்.

    தேர்தல் அரசியலை மையப்படுத்தி வெளியாகி உள்ள இந்தப் பாடல் தற்போது இணையத்தில் வரவேற்பை பெற்று வருகிறது. ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து ஸ்ரீநிதி வெங்கடேஷ் இணைந்து இந்த பாடலை பாடி உள்ளார்.

    இந்த பாடல் வரிகளின் மூலம் சர்கார் அரசியல் சம்பந்தப்பட்ட படம் என்பது உறுதியாகி இருக்கிறது. பாடல் வெளியான 17 மணிநேரத்தில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் யூடியூப்பில் பார்த்துள்ளனர். #Sarkar #OruViralPuratchi #Vijay

    ஒருவிரல் புரட்சி பாடலை பார்க்க:

    ×